Sunday, January 24, 2010

The Inarticulate !!!


என்னடா தலைப்பில பீட்டர் விட்டு பதிவு தமிழ்ல இருக்கேன்னு பாக்கறீங்களா.. மேட்டர் என்னவோ இதயத்துக்குள்ள இருந்து வருதில்ல அதான்... இன்‍ ஆர்டிகுலேட் என்றால் ரொம்ப அறிவாளித்தனமா பேசணும்ன்னு நினைப்போம் ஆனா மனசில இருக்கும் எமோஷன் எல்லாம் "அது வந்து" போயி என்று திக்கிக்கொண்டு இருக்கும்.இல்லைன்னா அபிராமி அபிராமி ந்னு சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ரேஞ்சில சொல்லாம போன பீலிங்ஸ் தான் ஜாஸ்தி . எனக்கு பிடிச்ச டெபனிஷன் கொஞ்சம் அளுகாச்சி காவியம் தான் .. சிவாஜி சார் பாசமல‌ர் ரேஞ்சுக்கு "மலர்ந்தும் மலராத ....."இப்படியான உறவுகள் கொடுத்த உணர்வுகள் தான் அதிகம்.
சிலருக்கு நம்மை பிடிக்கும் நமக்கு அவர்களை பிடிக்காது. சிலரைக்கண்டாலே எப்படியாவது பிரெண்ட் பிடிச்சுக்கணும் என்று தோணும் ஆனா நம்ம மனசில மட்டும் இருந்தா போதுமா... அதே போல அண்ணன் தம்பி / அக்காள் தங்கை உறவுகளில் ( இந்த சிண்டு பிடி கேஸ் இல்லை) ஒருவருக்கொருவர் பாசமும் மரியாதையும் தான் அதிகமாக இருக்கும். அண்ணனைப் பார்த்தாலே உருகுவார் ஒருவர்.. அண்ணனோ தம்பியை கண்டாலே கடுகடுப்பார். சிலர் தங்கைகளுக்கு அக்கா வார்த்தை என்றாலே வேதம்... அக்காள்களோ "எப்படி இருக்கே??? நல்லா இருக்கேன்" இப்படி ஒரு வரிப்பதில்கள் உறவாடிப்போகும்.

இது ஒரு வகை .. இவர்கள் எல்லாம் "கனி இருந்தும் காய் " பிரிவு. சிலருக்கு ரொம்ப பாசம் இருக்கும் ஆனா அவர்கள் பாசம் காட்டும் விதம் மற்றவருக்கு புரியாது.யாராவது பாரு தம்பிக்கு உன் மேல் தான் எவ்வளவு பாசம்ன்னு எடுத்துச்சொன்னாதான் விளங்கும்.

அப்படியே விளங்கிக்கொண்டாலும் சின்னவயசில பிணக்கு தீர்ந்து விளையாடியது போல இருக்க முடிவதில்லை.

வளரும் போது இருக்கும் பாசம் வளர்ந்து வலியவனாகியதும் கொஞ்சம் மெலிந்து தான் போகும்.

சொல்ல தெரியலைன்னா பரவாயில்லை கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கோங்க...
யாராயிருந்தாலும் ...

1)வாய் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்தும் போது கண்ணாடியில் உங்கள் கண்கள் சிரிக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்... லெட் யுவ‌ர் ஐஸ் ஸ்மைல்.

2)யாராவ‌து பாச‌மாய் பேசினால் உட‌னே ஒரு க‌ல‌ர் க‌ண்ணாடி கொண்டு "ஹூம் இப்ப‌ எதுக்கு இவ‌ன் ந‌ல்லா பேசுறான்" இப்ப‌டி நினைக்க‌ வேண்டாம்... கிவ் எவ்ரிப‌டி பெனிபிட் ஆஃப் ட‌வுட்...

3)க‌ட‌வுளுக்கே துதி பிடிக்கும் போது.. அவ‌ர் ப‌டைத்த‌ ம‌க்க‌ளுக்கா பிடிக்காது... தாராள‌மாய் புக‌ழுங்க‌ள். புக‌ழ்ச்சி உங்க‌ள் சுய‌ ந‌ல‌த்துக்காக‌ இருக்க‌ வேண்டாம்... பி ஜெனெர‌ஸ் இன் யுவ‌ர் அப்ரிசியேஷ‌ன்....

4)சரியான நேரத்துக்கு காத்திருக்க வேண்டாம்... "இன்னைக்கு உப்புமா சூப்பர்" "இந்த சர்ட் நல்லா இருக்கு" "உங்க காதணி அழகா இருக்கே"
"வெண்டர்புல்" "ஆசஃம்" "நைஸ் ஜாப்" ...
நினைவில் வைக்க "எனி டைம் இஸ் அ குட் டைம்"

5)நண்பர்களுடனோ/உறவினர்களுடனோ/குடும்பத்திலுள்ளவர்களுடனோ பகிர்ந்துகொண்ட சந்தோஷமான தருணங்களை அவர்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்... குட்டி பிள்ளையாய் இருந்தபோது செய்த குறும்புகள் யாருக்குத்தான் பிடிக்காது...

6) நன்றியால் துதி பாடுங்கள்... உங்கள் நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறேன்... உங்களோடு இருந்தபோது இனிமையாக நேரம் செலவிட்டோம்.... உங்க அம்மா கையால் சமைத்து சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறோம்...அதே சமயம் "பி கிரேஸ்புஃல் இன் யுவர் கிராட்டிடுயூட்"

இவ்வளவு நேரம் படிச்சீங்களே ரொம்ப டான்க்ஸுங்கோ!!!
இதெல்லாம் படிச்சு கொஞ்சம் மாறுங்கப்பா பாசக்கார பய புள்ளைகளா!!!

Wednesday, January 13, 2010

இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்!!


இன்ஸ்பிரேஷன் என்றால் என்ன? ஒரு செயலை செய்வதற்கான தூண்டுதல் . பொதுவாக இரண்டு வகைப்படும்.தன்முனைப்பு தூண்டுதல் மற்றும் வெளிபுற கருவிகளின் தூண்டுதல்...சின்ன குழந்தைகளை அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாராட்டி"குட் ஜாப்" "வெல் டன்" என்று சொல்லும் போது அவர்களுக்கு உங்கள் அன்பை/பாராட்டை பெற வேண்டி மேலும் நாம் விரும்பும் செயல்களை செய்வார்கள்... இதுவே வளர்ந்த பின் புறதூண்டுதல்கள் மூலம் வேறு பரிணாமத்தை அடைகிறது. பள்ளிப்பிள்ளைகளுக்குத்தான் எத்தனை சுமைகள்.. பாடத்தில முதல் மார்க்க எடுக்கணும்... டான்ஸ் கிளாசில் மற்றவரை விட ஜதி தப்பாமல் ஆடணும்... பாட்டு கிளாசில் ஸ்ருதி தவறாமல் பாடணும்...இது இல்லாமல் போட்டிகளில் பரிசு பெறணும்... விளையாட்டில முதன்மையாக வரணும்..... இப்படியாக எத்தனையோ "ணும்"கள் .. எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்...

நான் படிக்கும் காலத்திலும் இதெல்லாம் இருந்தது தான்.. ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்... சரியான பெற்றோர்/உடன் பிறந்தவர்கள்/ஆசிரிய பெருந்த‌கைகள் இப்படியான வழிகாட்டிகளின் உதவியால் இந்த "ப்ரஷர்" தெரியாமல் வளர்ந்தேன்... ஆனாலும் சில நேரம் ஒரு இலக்கில்லாமல் இருந்த‌து போல இருக்கும்....

ஒரு நாள் அந்த பிரச்சனையும் தீர்ந்தது. பள்ளி ஆண்டு விழா எப்பொழுதும் மாலையில் தான் நடக்கும்..பள்ளி ஆண்டு விழாவில் ஒரு ப்ரோக்கிராமுக்கும் அடுத்ததுக்கும் இடையில எதாவது பாட்டு போடுவாங்க. படித்தது கிருஸ்தவ பள்ளி என்பதால் ரொம்ப சினிமா பாட்டு இருக்காது.அப்போ எம்சியார் பாட்டுன்னு தெரியாது. பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் ஒரே ஸ்கூல் தான்.எல்லாருமே தரை டிக்கட் தான்.. அங்கங்க ட்யூப் லைட் இருந்த்ததால் எல்லா இடத்திலும் வெளிச்சமில்லை.அதனால அப்பப்ப தூங்கிடலாம் :)) அக்கா எழுப்பி விடுவாங்கல்ல வீட்டுக்கு போகும் போது. நல்லா தூங்கிட்டு இருந்த நான் திடீர்னு பாட்டு போட்டதும் எழுந்தேன்...
கேட்டது ஒரே வரி " மாபெரும் மேடையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்"... அப்படியே ஒரு இன்ஸ்பிரேஷன் வந்துதே பாக்கலாம்... அதுக்கு இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்... அதுவரைக்கும் பேசுவேன் ஆனா இப்ப எல்லாரும் சொல்லற மாதிரி ஓவரா பேசமாட்டேன்...என்னோட ஆங்கில மொழி திறமையை வளர்க்க இந்த பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது ....

இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...

நம் வாழ்வில் நம் வளர்ச்சியின் அளவு கோல் நாம் தான். மற்றவர்கள் ஒரு "பெஞ்ச் மார்க்" ஆக இருக்கமுடியுமே தவிர ஒரு போதும் நமது வளர்ச்சி அவர்களாக முடியாது.

Tuesday, January 12, 2010

எதிர்பாராத முத்தம் !!!!


இது பாரதிதாசனின் கவிதை பற்றியது அல்ல... கண்ணதாசனின் பாடல் வரிகளை தினமும் நினைவுபடுத்தும் காவியமான ஓவியத்தை பற்றியது.

எனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடல்..டி எம் எஸ் ஸ்லோமோஷ‌னில் பாடிய‌தால் எப்ப‌வும் என‌க்கு நினைவ‌லைக‌ளை அசைபோட்ட‌ப‌டி ர‌சிக்க‌ முடிந்த‌ முத்தான‌ பாட‌ல்...

" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் "

குழந்தைகளுக்கு ஒருவரை கண்டால் ஏன் பிடிக்கிறது .. மற்றொருவரை கண்டால் ஏன் பிடிக்கவில்லை என்பது யாருக்கும் புரியாத விடயம்...எங்கள் சின்னகுட்டி "அத்தை" என்று சொன்னாலே அறை முழுவதும் என்னைத் தேடுவாள்.வாரம் தவறாமல் எங்களுக்கு அவளைப் பார்த்தாலே ஒரு வாரத்துக்கு தேவையான எனர்ஜி பூஸ்ட் கிடைக்கும்... நினைத்தாலே மனசுக்குள் பூக்கும் புன்னகையை மறைக்க இயலாது... இப்படியான நேரத்தில் என் மனதில் தோன்றும் பாடல்...."எட்ட இருந்தே நினைத்தாலும் மணக்கும் இனிக்கும் உன் உருவம்" ....

எல்லோருக்குமே பிடித்த பாடல் இருக்கும் .. பிடித்த மனிதர்கள்.. பிடித்த காட்சிகள் இருக்கும்... சில நேரம் பாடல்களை மனிதர்களோடும்/காட்சியோடும் சம்பந்தபடுத்தி அதனை நமது "கோ‍‍ டூ" பாசிடிவ் இமேஜ் ஆக பயன் படுத்துவோம்...

சின்னகுட்டியுடன் விளையாடும் பொழுது அவள் செய்யும் ஓவ்வொரு செயலுக்கும் ஆர்ப்பரித்து அவளை ஊக்குவிப்பது வழக்கம்... ஒரு முறை அவள் முத்தம் கொடுக்க வந்தபோது வேண்டாம் என்று விளையாட்டாய் மறுத்த போது அவளுக்கு அதுவே ஒரு விளையாட்டாய் போனது... மூன்று மணி நேர அன்பு பறிமாறலுக்குப்பின்...மறக்காமல் மறுபடியும் எனக்கு எதிர்பாராத அன்பு முத்தம் கொடுத்தாள் ... எங்கள் வாழ்வில வசந்தம் தந்த ஆசை மருமகள் காவியாவுக்கு இந்த பதிவு ...

PS:வேறு ஊர் மாறியதால் மருமகளை பிரிந்து தினமும் நினைக்கிறேன்.

Saturday, January 9, 2010

You To-Do !!!

Hello Everyone ! Welcome to the New Year 2010!
We all expect something great to happen when the new year strikes. There is no magic pill you can pop to change what you want to . So long as you don’t put yourself first and take care of you mentally and physically there is no way we can offer a 100% to our family and friends who love and respect us.
This new year vow to put yourself first and do things that can make you feel happy atleast one moment in a day . It could be as simple as enjoying a cup of steaming hot tea with your favourite gossip magazine or that delicious piece of fine chocolate .

Taking time to do things that will not only make you healthy but help lead a fulfilling life. Healthy does not mean joining expensive gym or going on crash diet.Instead play with your kid or do some your tube video dance with them. No one ever understands what baby steps mean anymore in this world of instant gratification.

No one expects us to run a marathon or do some olympian effort , so start slow .I personally like it to play under-dog ( A person from whom people don’t expect much :)).
Think of you as an under-dog. Still do it so you can surprise yourself.I may not be in the perfect shape/phase but here are the things that I have developed over the years

- Eat fruits
- Drink milk
- Cut down on caffine
- Drink Water
- Park car far away and walk to the store
- Climb stairs when I can
- Adapt healthy cooking methods
- Dtich 2 wheeler/4 wheeler once a week and try to walk.
- Cut down on too much soda/sugary drinks
- Replace one meal a week with non-traditional carb such as quiona/cracked wheat/barley
- Develop a beatuy regime :)
This past year I have been to doctor to do a master health. Don’t ignore your health concerns .If you see too many people falling sick due to flu , get a flu shot if you can. As a woman I tend to have more tolerance for pain . This year I decide to keep it 5on a scale of 1 to10. We don’t manage our pains but mostly live with it. Don’t be paranoid but be informed about your wellbeing.

I wish that this year everyone takes better care of themselves especially those who take care of others :)

Happy New Year !!!