Saturday, July 30, 2011

3

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் தொலைதூர பயணம் செல்வது. (ச‌த்திய‌மா காப்பி அடிக்க‌லை).
2. ந‌ல்ல‌ புத்த‌க‌ம் அதை முடிக்கும் வ‌ரை தொல்லையில்லாத‌ நேர‌ம்... கூட‌வே கொறிக்க‌ ம‌ற்றும் டீ காப்பி இன்ன‌பிற‌ எல்லாம் வேண்டும்....
3. யாருமே எழும்பாத‌ விடிய‌லில் எழுந்த ப‌ற‌வையின் ஒலி கேட்க‌ எழும்ப‌ பிடிக்கும்...

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. அன்பில்லாத‌ ம‌னித‌ர்கள் ( யெஸ்... ஐ டோன்ட் கேர் )
2. அதிக‌மாக‌ அட‌ம்பிடிப்ப‌வ‌ர்க‌ள்
3. உள்ளொன்று வைத்து புற‌மொன்றும் பேசுவோர் உற‌வு

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.என் நிழ‌ல்
2.ம‌ன‌சாட்சி
3.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
சில‌ விச‌ய‌ம் புரிஞ்ச‌ மாதிரி இருக்கும் ஆனா ஒன்னுமே புரியாது.. உங்க‌ளுக்கு புரியுதா??

எ.கா: கோழியில‌ இருந்து முட்டை வ‌ந்த‌தா.. இல்லை...
ஒகே... அதை விடுங்க‌... ஏன் ஆப்பிள் நியூட்ட‌னின் த‌லையில‌ விழ‌ணும் :)
இது எதுவுமே என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌லை... இன்னுமா இந்த‌ கேள்வில‌ இருக்கீங்க‌?? அது தான் என‌க்கும் புரிய‌லை....


5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
நான் எவ்வ‌ள‌வுக்க‌ள‌வு சுத்த‌மா வைக்கிறேனோ அவ்வ‌ள‌வுக்க‌ள‌வு ம‌றுப‌டியும் குப்பையாகும்...

வொய் வொர்ரி... ப‌டுக்கைய‌றை மேசையில் ஒரு அலார‌ம்!!!

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
என்னை ரொம்ப ஈசியா சிரிக்க‌ வைக்க‌லாம்...

என்னை அதிக‌ம் சிரிக்க‌ வைத்த‌வ‌ர்க‌ள்.. எம் ந‌ட்புக‌ள்...கணவர்... என் உட‌ன்பிற‌ந்த‌ ச‌கோஸ் .. உட‌ன்பிற‌வாத‌ ச‌கோஸ்.. மொத்த‌த்தில் என்னை சிரிக்க‌ வைப்ப‌து ரொம்ப‌ ஈசி...

7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1. தைய‌ல் க‌த்துக்க‌ ஆர‌ம்பித்து இருக்கேன்
2. பேக்கிங்
3. புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌து

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1. ஸ்கை டைவிங்
2. முடிந்த‌வ‌ரை இய‌ற்கையின் அற்புத‌ங்க‌ளை பார்க்க‌ணும்
3. ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தணும்

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

பிடித்தால் எல்லாமே செய்வேன்...பிடிக்கலைன்னா கோடி கொட்டிகொடுத்தாலும் செய்யமாட்டேன்...
நானும் சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))"ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே..."


10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. கொசிப்ஸ் :) நோ தேங்யூ
அது ம‌ட்டுமே...

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. ம‌ன்னிக்க‌
2. ம‌ற‌க்க‌
3. கேட்க ( to really listen to people)

11) பிடிச்ச மூன்று உணவு வகை?

1. மெடிட்டரேனியன் உணவுகள்
2. இலை தழை ( சாலட் வகையறா)
3. எல்லா ஊர் உணவையும் சுவைத்து பார்ப்பேன் ( கடைசியாக கோலாச்சி - Kolache... நம்ம ஊரு ஸ்டப்ட் பன் தான் )


12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

எல்லா பாட்டும் பாடுவேன்.. எதுவுமே குறிப்பா சொல்ல முடியாது :)
Yesterday in gym I was singing "Row row row your boat gently down the stream"

13) பிடித்த மூன்று படங்கள்?

இப்ப கடைசியா பார்த்ததில் The Kings speech

அப்புறம் லைஃப்டைம் சானலில் பார்த்த‌ Homless to harvard

தமிழில் - மொழி

14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

இப்படியான விசயங்கள் இருந்ததில்லை... ஆனா இருக்கற கை/கால் இத்யாதி உடல் பாகங்கள் இருந்தாலும் கண் தெரியாம காது கேக்காம.. வாய் பேச முடியாம .. இப்படி இருக்கறவங்களை பார்த்தா இருக்கறத வச்சி சந்தோஷமா இருக்க தோணும்... என் கணவரின் ஆபிசில் ஒரு பெண்மணிக்கு இடுப்பு கீழே மரத்து போயிருக்கு.. தனியா கார் ஓட்டிட்டு வந்து வேலையிலும் ரொம்ப திறமைசாலியா இருக்காங்க... இப்ப சொல்லுங்க.. என்னால எது இல்லாம இருக்க முடியாது :)
3 பேர் கண் தெரியாத 65க்கும் மேல இருக்கவங்க.. நடந்தா ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுகிட்டே போவாங்க அதிலும் ஒரு பெண்மணிக்கு மட்டும் கொஞ்சமா பார்வை தெரியும் போல அவங்க தான் பஸ் நம்பர் பார்த்து சொல்லுவாங்க... கரெக்டா பஸ்ல ஏறி கரெக்ட்டா இறங்க வேண்டிய இடத்தில இறங்கி ரோட்டை கிராஸ் செய்து... ஹூம்.. அவங்க வயசில என்னால் இவ்வளவு தன்னிச்சையா இருக்க முடியுமான்னு தெரியல...

Yeah you asked for it :)

Sunday, March 27, 2011

என்ன நடந்துச்சின்னா


ரொம்ப நாளா எதுவும் செய்யாம இருந்தேனா அதனால ஒரு முடிவெடுத்தேன்.. முன்னாடியே பலருக்கும் சொல்லி இப்போ அது அங்கங்க கார்டூன் சப்ஜெக்ட்( நன்றி சசசதல அன்ட் மியா) ஆயிடுச்சா. நான் காலேசிக்கு போற விசயம் தான் :)

குடும்ப‌த்தில‌ வேற‌ ந‌ம்ம‌ள‌ வ‌ச்சி "டூட‌ன்ட் நெம்ப‌ர் 1" ப‌ட‌மெடுக்க‌ ஐடியா போட்டாங்க‌ :(

அதனால‌ ராப்ப‌க‌லா க‌ண்ணு முழிச்சி க‌ட்ட‌ங்காப்பியெல்லாம் போட்டு குடிச்சி ப‌டிச்சிட்டு இருந்தேன்...

இடைக்கிடை பிஸியா இருக்கேனா இல்லையான்னு செக் ப‌ண்ண‌ வேற‌ செய்தாங்க‌ ... யாருன்னு சொல்ல‌வே மாட்டேன் ...

ஒரு வ‌ழியா ரெண்டு பாட‌த்திலும் "பாஸ்(A) பாஸ்(A)..."

நான் பாசானா நிக்கிலுக்கு மொட்டை போட‌லாம்ன்னு நினைச்சேன் அவ‌ங்க‌ப்பா அதுக்குள்ள அவனுக்கு ச‌ம்ம‌ர் க‌ட் போட்டு அதுக்கு மொட்டையே ப‌ர‌வாயில்லைன்னு இருக்கா...அத‌னால‌ அ.கோ.மு அதீஸ் எல்லாருக்கும் ச‌ப்ளை செய்வாங்க‌ன்னு வேண்டியாச்சு...அங்க போய் கலெக்சன் போட்டுக்கோங்க மக்கள்ஸ்...

உங்க எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு தான் இருக்கேன். அப்பப்ப "அந்தமான் காதலி" கடிதம் போட்டுட்டு தான் இருக்கேன்... அதைவிட பேஸ்புக்கில ரொம்ப பிஸியா இருக்கேன். என்னோட ப்ரொபசரும் அங்க இருப்பதால்.. எதாச்சும் எக்குதப்பா சொல்ல நினைத்தால் தாய்மொழியாம் தமிழ் மொழியில சொல்லுங்க இல்லைன்னா தனி மடல் அனுப்பிடுங்க...

Friday, February 11, 2011

ஆர்வக்கோளாறு - 1

முதல் ரெண்டு படங்கள் .. சுருட்டிய பேப்பரில் செய்தது. விலை அதிகமில்லை 5 டாலர் 99 சென்ட்.

கடைசி இரண்டு படங்கள்.. சாக்லேட் பேப்பர் பர்ஸ்.. விலை ரொம்ப இல்லை 30 டாலர் :)





ஆ.கோ அதிகமாகிப்போனா நாங்க போட்டோ எடுப்போமே !

Monday, January 31, 2011

தெய்வத்தை அழைத்த குழந்தை

கடந்த சனிக்கிழமை மருமகன் நிக்கிலுடன்(19 months old) கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு நுழையும் முன் நிக்கிலிடம் "நிக்கில் சாமிகிட்ட "சாமி நிக்கிலுக்கு நல்ல புத்தி கொடு.. நல்லா ஹெல்தியா இருக்கணும்.. நல்லா சாப்பிடணும்.. சொன்ன பேச்சு கேக்கணும்ன்னு வேண்டிக்கோ" என்றேன்.
கோவிலில் நுழைந்ததும் கோட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு படியேறும் போது ஒன் .. டூ... த்ரீ..ஃபோ..பை..சிக்... என்று எண்ணிக்கொண்டே படியேறினார்... மேலே சென்றதும். நேரே பிள்ளையாரிடம் சென்று "சாமீ...சாமீ....சாமீ..." எல்லாம் கும்பிட்டு முடிந்து கீழே வரும் வரை "சாமீ.. சாமீ" என்றாரே பார்க்கலாம்...

என்ன மக்கள்ஸ் என் மருமகனை உங்களுக்கு பிடிச்சிருக்கா....

Friday, January 7, 2011

ஒரே ஒரு ஜோக் !

A Man was sitting on a donkey and travelling on the road.

The Police constable stopped him and asked "Stop ! Where are you going ??!!" and the man said " I am going to my village "

Police: Ok!!! Show me your licence !
Man on Donkey : Why do I have to show a licence?
Police: Because you are going on a 4 wheeler...You will be fined if you dont show licence
Man : Oh.... In that case take the plate number from behind :)))))