Sunday, March 27, 2011

என்ன நடந்துச்சின்னா


ரொம்ப நாளா எதுவும் செய்யாம இருந்தேனா அதனால ஒரு முடிவெடுத்தேன்.. முன்னாடியே பலருக்கும் சொல்லி இப்போ அது அங்கங்க கார்டூன் சப்ஜெக்ட்( நன்றி சசசதல அன்ட் மியா) ஆயிடுச்சா. நான் காலேசிக்கு போற விசயம் தான் :)

குடும்ப‌த்தில‌ வேற‌ ந‌ம்ம‌ள‌ வ‌ச்சி "டூட‌ன்ட் நெம்ப‌ர் 1" ப‌ட‌மெடுக்க‌ ஐடியா போட்டாங்க‌ :(

அதனால‌ ராப்ப‌க‌லா க‌ண்ணு முழிச்சி க‌ட்ட‌ங்காப்பியெல்லாம் போட்டு குடிச்சி ப‌டிச்சிட்டு இருந்தேன்...

இடைக்கிடை பிஸியா இருக்கேனா இல்லையான்னு செக் ப‌ண்ண‌ வேற‌ செய்தாங்க‌ ... யாருன்னு சொல்ல‌வே மாட்டேன் ...

ஒரு வ‌ழியா ரெண்டு பாட‌த்திலும் "பாஸ்(A) பாஸ்(A)..."

நான் பாசானா நிக்கிலுக்கு மொட்டை போட‌லாம்ன்னு நினைச்சேன் அவ‌ங்க‌ப்பா அதுக்குள்ள அவனுக்கு ச‌ம்ம‌ர் க‌ட் போட்டு அதுக்கு மொட்டையே ப‌ர‌வாயில்லைன்னு இருக்கா...அத‌னால‌ அ.கோ.மு அதீஸ் எல்லாருக்கும் ச‌ப்ளை செய்வாங்க‌ன்னு வேண்டியாச்சு...அங்க போய் கலெக்சன் போட்டுக்கோங்க மக்கள்ஸ்...

உங்க எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு தான் இருக்கேன். அப்பப்ப "அந்தமான் காதலி" கடிதம் போட்டுட்டு தான் இருக்கேன்... அதைவிட பேஸ்புக்கில ரொம்ப பிஸியா இருக்கேன். என்னோட ப்ரொபசரும் அங்க இருப்பதால்.. எதாச்சும் எக்குதப்பா சொல்ல நினைத்தால் தாய்மொழியாம் தமிழ் மொழியில சொல்லுங்க இல்லைன்னா தனி மடல் அனுப்பிடுங்க...

21 comments:

vanathy said...

வாழ்த்துக்கள் இரண்டு அ (A ) க்களுக்கு. வாத்தியாரும் பேஸ் புக்கில் இருக்கிறாரா??

Asiya Omar said...

ஆத்தா நீ பாஸாயிட்டியா? ரொம்ப நல்ல செய்தியாச்சே!நல்வாழ்த்துக்கள்.
இரண்டும் பெரிய A வா? பெரிய ட்ரீட் தரணுமே!

இமா க்றிஸ் said...

சந்தோஷம், வாழ்த்துக்கள் இலா @}->-- ;)

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் இலா....இந்த செமஸ்டர் 2 பேப்பர் தானா...

இலா said...

வான்ஸ் ! நன்றி ! ஆமாங்க்க்க்...இடைமனிதன் என்ற கடைசி பேரோட இருக்கார் :)

யக்கோவ்வ்.... அங்க முட்டை தரச்சொல்லி இருக்கேன்.. அத்தவிட பெரிய ரீட்டு வேணுமா :) ந‌ன்றி ஆசியாக்கா!

ரோசாப்பூ சின்ன‌ ர்ரோசாப்பூ! ந‌ன்றி இமா!

ந‌ன்றி கீதா! வேணுமின்னா 5 பாட‌ம் ப‌டிச்சி 6 மாச‌த்திலே டிகிரி வாங்க‌லாம்.. நிதான‌மா ப‌டிச்சா 2 பாட‌ம் ப‌டிச்சா போதும் புல்டைம் :)

'பரிவை' சே.குமார் said...

சந்தோஷம், வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

//இடைக்கிடை பிஸியா இருக்கேனா இல்லையான்னு செக் ப‌ண்ண‌ வேற‌ செய்தாங்க‌ ... யாருன்னு சொல்ல‌வே மாட்டேன் ...//

நாங்களும் கேக்கமாட்டோமுல்ல ...அதான் யாருன்னு தெரியோமுல்ல...!! ஹி..ஹி.. :-))) X 3457890

ஜெய்லானி said...

//ஒரு வ‌ழியா ரெண்டு பாட‌த்திலும் "பாஸ்(A) பாஸ்(A)..." //

இந்த ரெண்டு பாடத்துக்கே சூப்பர் பிஸியா இருந்தா மத்ததுக்கு ஆத்தா மலையேறிடுமோ அவ்வ்வ்வ்வ் ..!!

ஜெய்லானி said...

//ஒரு வ‌ழியா ரெண்டு பாட‌த்திலும் "பாஸ்(A) பாஸ்(A)..." //

வாழ்த்துக்கள்...!!வாழ்த்துக்கள்...!!இன்னும் அடுத்த பாடங்களுக்கெல்லாம் A + கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

//யக்கோவ்வ்.... அங்க முட்டை தரச்சொல்லி இருக்கேன்.. அத்தவிட பெரிய ரீட்டு வேணுமா :)//

கூடவே கோழியும் குடுத்துடுங்க ...நா முட்டை பண்ணையே வச்சிடுரேன் ஹி..ஹி...

ஜெய்லானி said...

//அதைவிட பேஸ்புக்கில ரொம்ப பிஸியா இருக்கேன்.//

””அந்த மான் காதலி”” அங்கே இல்லைன்னு இப்பிடி ஒரு டூப்பா..? ஹா..ஹா....!! :-))

athira said...

மணி கட்டிய பூஸார்... ஏன் உப்பூடி சவுண்ட் விடுறார்... :)).. இல்ஸ் பாஸ் பண்ணிட்டா என ஹப்பியோ? இருக்காதா பின்னே... எப்ப இல்ஸ் பேப்பரில என் பெயர் வரும்?.

சரி முதல்ல சொல்லியிருக்கவேணும்.. வாழ்த்துக்கள் இல்ஸ்ஸ்ஸ்.... என்னைப்போல, ஜெய்யைப்போல(ஒரு கதைக்குச் சொன்னேன்:)) அடிபட்ட வாகனங்களைப் ஃபிரெண்ட்ஸா வச்சுக்கொண்டும் A எடுப்பதென்பது பெரீஈஈஈஈஈஈய விஷயம்தானே...:).


அது சரி ஒரு A = அதிரா..., எனக்குப் போட்டியாக வந்த மற்ற A ஆரு?. அவ்வ்வ்வ்வ்வ்வ்

athira said...

இல்ஸ்ஸ்...!!! அதீஸ் அ.கோ.மு தருவா என இங்கின சொல்லிப்போட்டு.... அங்கின ஓடிவந்து லபக் என கோழிமுட்டையை நீங்களே எடுத்தால்... இனி கோழிக்கு எங்க போவேன் முட்டைக்கு எங்க போவேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

athira said...

///இந்த ரெண்டு பாடத்துக்கே சூப்பர் பிஸியா இருந்தா மத்ததுக்கு ஆத்தா மலையேறிடுமோ அவ்வ்வ்வ்வ் ..!!

// ஜெய், ஆத்தா மலையேறாவிடினும் மயில் மலையேறித்தான் படிப்பா... பூஸ் எப்பவும்போல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆத்தா இலா பாசாயிட்டாங்க.. வாழ்த்துக்கள் இலா..

எனக்கும் பரீட்சைகள் எழுத வேண்டியிருக்கு.. மூணு :)

எங்க வீட்டுலயும் பீல் பண்ணுவாங்க, இன்னமும் படிக்கணுமான்னு.. என்ன செய்ய, நம்ம நிலைமை நமக்கு மட்டுமே புரியக் கூடியது, இல்லையா?

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் இலா

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் இலா

தளிகா said...

அப்ப எப்டி கத்தினே நான் "பாசாகிட்டேஏஏஏஏஏன்"அப்படியா
ரொம்ப சந்தோஷம் எனக்கும் உன்னை பாத்து படிக்க போக ஆசை வந்துடுச்சு.

Thalika

ஜெய்லானி said...

தலைப்பு இன்னும் அப்படியே இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்...
என்ன நடந்துச்சின்னு சீக்கிரம் வந்து சொல்லுங்க

ஸாதிகா said...

//பிடித்தால் எல்லாமே செய்வேன்...பிடிக்கலைன்னா கோடி கொட்டிகொடுத்தாலும் செய்யமாட்டேன்...
நானும் சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))"ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே..."
// ஹா..ஹா..கலக்கல் இலா.