Sunday, March 14, 2010

சின்ன கருப்பன்!!!

இவருக்காக தனியா ஒரு பதிவு போட்டே ஆகணும்.. ஏன்னா தினம் ஊருக்கு போன் செய்தா லொக்கு லொக்குன்னு இருமி "இல்லம்மா கொஞ்சம் சளி அதோட ஜுரம்" என்று சொல்லும் அம்மா கூட... இன்னைக்கு சின்ன கருப்பன் என்ன பண்ணான் தெரியுமா என்று ஆரம்பிச்சா அது ஒரு 10 நிமிஷம் நான் ஸ்டாப்பா பேசுவாங்க... இவருக்கு சின்ன கருப்பன் என்று எதுக்கு பேர் வந்தததுன்னு தெரியாது... இவங்க அம்மா இவனை பெற்றதும் இவர் இருந்த கருப்புக்கு பக்கத்து வீட்டு உஷா ஆன்டி வச்ச பேர் சின்ன கருப்பன்...

மக்கள் எல்லாம் சோஃபால உட்கார்வாங்களோ இல்லையோ இவருக்கு தனியிடம் தான்.. அவர் வந்தா எங்க அப்பாவே நகர்ந்து இடம் கொடுப்பார்... பயமில்லை... ஒரு பாசம் தான்.. பிறந்தது முதலே எங்க வீட்டை சுத்தி வரும் இவர் ஒரு அழகிய பூனைகுட்டி !!!

ஊருக்கு போன் செய்தா ஒரு 5 நிமிஷமாவது சின்ன கருப்பன் அப்டேட் இல்லாம இருக்காது...

போன வார டயலாக்:

அம்மா: டேய் ! என்னடா வெறும் பிரெட்டா தர்ரே அவனுக்கு...
சாப்பிடமாட்டான்ன்டா.. கொஞ்சம் பாலும் சேத்து ஊத்து...

...{என் ட‌ய‌லாக்: அம்மா இது உங்க‌ளுக்கே ஓவ‌ரா இல்லை :(( }


ரொம்ப‌ வெக்கையா இருக்கு க‌ருப்ப‌ன் கிச்ச‌ன் சிங்க்ல‌‌ இருக்கான் :))

என் ட‌ய‌லாக் : அதுக்கென்ன ஏசி ஆன் பண்ணுங்க :))

உஷா ஆன்டி: அவனுக்கு பால் சோறு வைக்கறேன்ன்... இல்லன்னா கத்திட்டே இருப்பான்...

என் டயலாக்: ஆன்டி அங்க பாருங்க உங்க் சின்ன பையன் 15 நிமிஷமா சாப்பாடு கேக்கறான் :))

தம்பி: டேய் ஆன‌ந்தூ!!! ராகம் பேக்கிரில போயி ஒரு 4 இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா.. கருப்பன் புளி சாதம் சாப்பிட மாட்டான்...

என் டயலாக்: டேய் பெரிய கருப்பூ!!! எனக்கு பரோட்டா வாங்க ஆள் அனுப்புன்னு சொன்னா வேலை இருக்கு .. இப்ப உனக்கு ஆள் இருக்கா :((

அப்பா: வாடா.. இந்தா பிஸ்கட்டு.... ஹ ஹ ஹ.. இல்லம்மா அவனுக்கு பிஸ்கட்டு ரொம்ப பிடிக்கும்....
என் டயலாக்: அப்பா எப்பல இருந்து இப்படி :))

அம்மா: நேத்து கூட ராஜேஷ் கருப்பன சுத்தி சுத்தி போட்டோ எடுத்தான்...
என் டயலாக்: ஹ்ம்ம்.. நானும் தான் ஐ ஏ பி போயி போட்டோ பிடிச்சேன் அளகா.. 60 ரூவாய்க்கு 20 போட்டோ குடுத்தானுங்க.. ஒருத்தனாச்சும் மருந்துக்கும் அக்கா உங்க போட்டோ குடுங்கன்னு கேட்டாங்களா :((

பின் குறிப்பு : என் ட‌ய‌லாக் எல்லாம் என் ம‌ன‌சில‌ :))

எனக்கு பிடிக்கல பிடிக்கல.. இது வரை எல்லாருக்கும் செல்லமாய் இருந்த எனக்கு இப்படி ஒரு போட்டி!!

எப்படியோ எல்லாரும் சின்ன கருப்பனோட என்சாய் பண்ணுறாங்க.. அவங்களுக்கும் ஒரு பொழுது போக்கு!!!

Thursday, March 4, 2010

சொல்ல மறந்த கதை!

என் வாழ்க்கையில் பல நேரம் பலரும் பல விதங்களில் வந்து போயிருக்கிறார்கள் . சிலரை மறக்கவே முடியாது , அவர்கள் எனக்கு நெருங்கியவராக கூட இருக்க வேண்டியதில்லை. இந்த வாழ்க்கை பயணத்தில் எப்பவுமே ரஷ் அவர் டிராபிக் தான். ஆனாலும் ஒரு நொடியில் சொல்லகூடிய ஒரு வார்த்தை "நன்றி" "ஷுக்ரியா" "டஃன்க" "க்ராட்சியாஸ்" "தேங்யூ".நம்மட கலாச்சாரத்தில் நன்றி நெருங்கிய உறவுகளுக்குள் சொன்னால் நமக்குள்ள எதுக்கு என்று சொல்வார்கள். மேலை நாடுகளில் கதவை திறந்து விட்டாலோ அல்லது எதிர்பாராது செய்யும் செயலும் ஒரு நன்றியை சம்பாதித்து தரும்.

இப்ப பழகியதில் அம்மா காலையில் காஃபி கொடுத்தாலும் தேங்ஸ்மா என்று சொன்னால் தான் காஃபி இனிக்கிறது போல இருக்கும்... அது ஒரு இர‌ண்டாம் குண‌மாகிவிட்ட‌து...

சில‌ சந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் ந‌ன்றி என்று சொல்ல‌வும் முடியாம‌ல் இருக்கும்... அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்னோட‌ ம‌ன‌தில் த‌னியிட‌ம் வ‌கிக்கிறார்க‌ள்.த‌னி ஏசி ரூம் என் ம‌ன‌சில‌ :)

சில வருடங்களுக்கு முன் ஒர் இரவில் வாழ்க்கை மாறியது. எமெர்ஜென்சி ரூம் விடிய காலையில் சர்ஜரி. கண்விழித்து பார்த்ததில் என் கனவு கலைந்திருந்தது . முதல் விசிட்டர் ! அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து வந்த சகோதரி ! கலங்காதே கண்ணே என்று கை பிடித்து ஆறுதல் சொன்னார்... ஆறாய் பெருகிய கண்ணீரில் ஆறுதல் சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

இப்படி அறிமுகமே இல்லாமல் இருப்பவர்கள் எனக்கு செய்த உபகாரம் பல.நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை...

Tuesday, March 2, 2010

எனக்குள்ள இருக்க நல்லவ!!!!




எதை பத்தி எழுதணும்ன்னு யோசிக்கவே வேணாம் இப்பல்லாம்.... சில பல நாளா கொஞ்சம் உடல் மன கஷ்டம் இருக்கு... அப்ப தான் யோசிச்சேன்... மன கஷ்டம் எதனால வருதுன்னு... தேவையில்லாம அழுகாச்சி காவியம் எல்லாம் ரீப்ளே பண்ணிட்டு இருந்ததால்.பிரச்சனை என்னன்னு தெரிஞ்சா அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிக்கலாம் இல்லையா...
நமக்கு ஒரு சந்தோஷமோ துக்கமோ நாம உடனே பகிர்ந்து கொள்வது நம்மோட பெஸ்ட் பிரெண்ட்ஸ் கிட்டதான்... இந்த பிரெண்ட்ஸ்ல பலவகை.. எனக்கு பல பேரோட பழகற சந்தர்ப்பம் வந்தாலும் சிலர் மட்டுமே இன்னும் என்னோட இன்னர் ஆர்பிட்ல இருக்காங்க.. அது ஏன் ??

அந்த‌ தோழிக‌ள் எல்லாம் என்னோட‌ ந‌ல்ல‌ குண‌ங்க‌ளை மிளிரச் செய்த‌வ‌ர்க‌ள்...
என்னை ஊக்குவித்து என் திற‌மையை மெருகேற்றிய‌வ‌ர்க‌ள்...
நான் செய்த‌ முட்டாள்த‌ன‌ங்க‌ளை வ‌ன்மையாக‌ க‌ண்டித்த‌வ‌ர்க‌ள்...
ப‌ல‌ காத‌ தூர‌ங்க‌ளில் வ‌சித்தாலும் ந‌டுக்கும் குளிரில் ந‌டு இர‌விலும் " ஹேய் எவெரிதிங் ஆல்ரைட் டிய‌ர்??!!" என்று கேட்டு புண்ணுக்கு புனுகு சாற்றுப‌வ‌ர்க‌ள்...
இவர்களிடம் மட்டும் நான் நானாக இருக்கமுடியும்...
முன்னே கட்டியணைத்து முத்தமிட்டு கத்தி வருமோ பின்னே என்று கவலைபட வேண்டியதில்லை...
யாரை பற்றி வேணும் என்றாலும் குறை சொல்லலாம்.. கேட்பார்கள்.. அதிலே நம் தப்பிருந்தால் " இது உன் தப்பு தானே" என்று கேட்கவும் செய்வார்கள்...
ரொம்பவே புலம்பினால் ... "பிளீஸ் ஸ்னாப் அவுட் ஆஃப் இட்" என்று ஒரு ஷொட்டு விழும்...

நட்புக்கு வயது தான் ஏது???

இவ்வளவு நல்ல நண்பர்களை வச்சிட்டு யாராவது பழகறவங்க எதாவது சொல்லிட்டா போதும்... அதையே நினச்சி ஏன் வருத்தபடணும்...
நல்ல நண்பர்கள் பெறுவது ரொம்ப கஷ்டம்... அவர்களை மறப்பது முடியவே முடியாத காரியம்...

Bringing the best in people makes you thier BFF ( Best Friend forever)!!!