Tuesday, December 28, 2010

New Year Resolution I intend to Keep



Tease unsuspecting toddlers / Preschoolers and early graders who wont talk back( I know i will get a big bulb ).. Hey I need entertainment when i am not watching TV :))

what is yours ?

Thursday, December 16, 2010

ஏன் ?


எல்லாருமே என்னடா கமென்ட் போட்டா அதுக்கு பதில் போடலை ஆனால் பதிவு மட்டும் வேகமா போடறாங்களேன்னு பார்க்கறீங்களா?

இந்த மாதம் முழுவதுமே வேலைகள் அதிகமா இருக்கும்( எல்லாருமே மனசில திட்டறது கேக்குது :)). இன்னும் சில மணி நேரத்தில் ஒரு பயணம் இருக்கு. அடுத்த வாரம் கிரிஸ்மஸ் கொண்டாட்டம்
அதுக்கு அடுத்த வாரம் புது வருடம் என்று வரிசையா வருது.

2010ல் போட்ட கமென்ட்டுக்கு ஜனவரி 2011ல கட்டாயமா பதில் போட்டிடுவேன்.

அதுக்கு முன்னாடி உங்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் டீவியில் வருகிற மாதிரி ஒரு பதிவு போடுங்களேன். உங்க கண்ணோட்டத்தில் 2011 ‍ உங்க வாழ்க்கையில் 2010ன் ஹைலைட் / லோ லைட் :) . டிசம்பர் 31 க்குள்ள போடணும் ஓகேவா !!!

படம்: ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன் இப்படி !

Sunday, December 12, 2010

கண்டுபிடி !!!



இது என்ன கண்டுபிடிங்க பார்க்கலாம்.. ஒரே க்ளூ ! ஆர்ட்.. ஆர்ட்ட்.. ஆர்ட்டு ... ஆர்ட்டூஊஊஊஊ!!!!


My Note : Picture taken from http://goinggreenscience.com/wp-content/uploads/2010/02/figure8turtle.jpg

எல்லாரும் கோக்/ஃபான்டா/பெப்சி இப்படி வீட்டில வாங்கும் போது இந்த பிளாஸ்டிக் வளையங்களை பார்த்து இருப்பீங்க இல்லையா... இந்த வளையங்கள் கிட்டத்தட்ட 390 கிராம் எடையுடன் இருக்கும்( பதில்கள்.காம்)6 சோடா கேன்களை சேர்த்து வைத்து இருக்கும். அப்போ இந்த வளையங்களில் 6 கேன்கள் கோர்த்து இருக்கும் போது இரண்டு கிலோ 340 கிராம் எடையுள்ள ஒரு சிக்ஸ்பேக் :) எப்படி ஆட்டினாலும் அசக்கினாலும் வெளியே வராம செய்யும் இல்லையா .. இப்பொ நம்மட பேபி ஆமை மாட்டிகிச்சின்னா :((

நம்மாலான உதவி செய்யலாமே .. இப்படி வளையங்களை சேர்த்து வைத்து ஒரு ஆர்ட் ஆக செய்யலாம்..

தேவையானவை : பிளாஸ்டிக் சோடா கேன் வளையங்கள்... அக்ரிலிக் பெயின்ட் , பிளாஸ்டிக் நூல்.. ஆர்டை தொங்கவிட ஒரு கம்பி அல்லது கர்டன் ராட்

தேவையான கலரில் பெயின்ட் அடித்து வளையங்கள் எல்லாம் கட்டி...கர்டன் ராடில் மாட்டிவிட்டா அழகோ அழகு

ஐடியா கிடைத்தது: கார்னர் ஸ்டோன் காலரி , சோனாமா, கலிபோர்னியா

Friday, December 3, 2010

பாடல் ஒன்று கேட்டேன்!

இதோ வந்திட்டேன் கச்சேரிக்கு :))
பாட்டுன்னாதான் நமக்கு ரொம்ப பிடிக்குமே

1) ஸ்ரீதேவி படத்தில ரொம்ப கியூட்டா இருப்பாங்க :) முதல் 30 நொடி அவங்க முகபாவனை பாருங்க ... யாராலயும் அடிச்சுக்க முடியாது

ஜானி படத்தில் இருந்து : என் வானிலே

http://www.youtube.com/watch?v=wC_dBvKh-4Y

2) இந்த படம் ரிலீஸ் ஆன காலத்தில எல்லாரும் மழைல நனைஞ்சு ரேவதி மாதிரி ஆட ஆசைபட்டு இருப்பாங்க.. எங்க ஸ்கூலில பல வருஷம் இந்த படம் காமிச்சாங்க :)

மௌனராகம் படத்தில் இருந்து "ஓஹோ மேகம் வந்ததோ"

http://www.youtube.com/watch?v=QvKXYda4CsI&

3) பாட்டி பேத்தி சென்டில அடிச்சிட்டு போகும் இந்த பாட்டு :)
போங்க ஒரே அழாச்சியா வருது :((

பூவே பூச்சூடவா பாட்டு ....

http://www.youtube.com/watch?v=6b-qZaVj72w
http://www.youtube.com/watch?v=3xy3eYNKShw&

4) தமிழ் பாட்டு தான் சொல்லணுமா .... சேச்சி இவிட நோக்கு....
எந்து பறஞ்சாலும் நீ என்டேத‌ல்லே வாவே ( பேபி)....

அச்சுவின்டே அம்மா!

http://www.youtube.com/watch?v=UD5qwzsCB9c


5) தேவதை வம்சம் நீயோ ‍ஸ்னேகிதியே படத்தில் இருந்து
http://www.youtube.com/watch?v=k5W_J9leDNg

6) காலை தென்றல் பாடி வரும் பாடல் உயர்ந்த உள்ளம்
http://www.youtube.com/watch?v=2R7KfyTP1s4

7) ரொம்ப பிடிக்கும் இவங்க வாய்ஸ் எனக்கு... Falguni Pathak

http://www.youtube.com/watch?v=EAX6RHczs2s&

8) சத்ரியன் படத்தில இருந்து மாலையில் யாரோ பாடல்

http://www.youtube.com/watch?v=v-9Gx0gJmfo&

9) ஆசை படத்தில் இருந்து "புல்வெளி புல்வெளி தன்னில்"

http://www.youtube.com/watch?v=unoJMSdVeJw&


10) சத்தம் போடாதே படத்தில் இருந்து பேசுகிறேன் பாடல்

http://www.youtube.com/watch?v=Fr1Velz91Zs&


என்ன என்னோட கலெக்க்ஷன் பிடிச்சிருக்கா ??