
அதிராவின் அன்பு அழைப்பினை ஏற்று என் பதிவுலகில் முதன் முறையாக தொடர் பதிவிடுகிறேன்.. நீள்விடுப்பிற்கு பின் வந்தமையால் சொற்குற்றம் / பொருள் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்....
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?சொந்த பேருதாங்க... நல்லா இருந்த பேரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி இப்படி கொண்டு வந்துட்டாங்க... புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. அதுக்குள்ள...
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.நல்லா எல்லாரும் லெச்சிமின்னு கூப்புட்டா ஒரு 4 பேரும் 2 நாலு கால் ஆக்களும் திரும்பி பாத்துட்டு இருந்தோம்.. அப்பா ரொம்ப தமிழாக்கம் செய்யறேன்னு இலக்குமி என்று வைத்து... அது சுக்குமி லகு திப்பிலி கூட சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொன்னதில் மிச்சம்... இலா என்றால் பொறுமையின் சிகரமாமே???!!!
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்... இன்னும் குழப்பி குழப்பி தமிழ் ஆங்கிலத்தில் தான் எழுதறேன்... நல்ல தமிழில் எழுத ஆசைதான்... தமிழில் எழுத ஹைஷ் அங்கிள் கொடுத்த ஊக்கம் தான்...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?ஒன்னுமே செய்லீங்ண்ணா... இதுக்கே மயில் பண்ணைக்கு விசிட்டர்ஸ் வாராங்க... அவங்க அன்போ அன்பு...
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? எழுதுவதெல்லாம் முக்காவாசி சொந்த விஷயம் தான்... மத்தவங்கள புண்படுத்தாத வகையில் எழுதறேன்...என்னோட ஆர்வங்கள் அதிகம் ஆனா அதுக்கு உயிர்ப்பு நேரமோ ரொம்ப கம்மி..
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா? என்னோட மனசில தோன்றுவதை பதிவிடுகிறேன்... டைரியில் எழுதினா அடுத்த வருடம் அது குப்பைக்கு போய்விடும்.. இங்க இருப்பதால் எடுத்து பார்த்து அசைபோட வசதியா இருக்கு.. ( ஜெய்.. எழுதுனது 10 பதிவு அதுல அசை போட என்ன இருக்கா... பிரதர்.. இன்னும் ஒரு வாரம் பொறுங்க.. உங்களுக்கு சரியான பதிலோட வருகிறேன்)
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? ஒரு பிளாகுக்கு வரவே நேரமில்லை... அவ்வளவு மேட்டர் இருந்தா நாங்க அசோசொயேட்ட பிரஸ்ல இல்ல வேலை பார்ப்போம் :)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.எனக்கு எந்த பதிவர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வந்ததில்லை.. வராது...
போகுமிடமெல்லாம் அன்பு.. கொஞ்சமா குழப்படி.. கொஞ்சம் சமூக ஆர்வம்.. கொஞ்சமே மிகுதியாய் நகைச்சுவை... அப்புறம்.. சில நேரம் தான் பயம்... அதுக்காக "நட்பிலே" ஒரு கட்டில் போட்டுருக்கில்ல... அதுக்கடியில் ஒளிஞ்சிருவோமில்ல.... ஒன்னுமே முடியலன்னா எஸ் ஆகிடுவோம்....
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.. என்னோட முதல் புகைப்பட பதிவுக்கு பின்னுட்டமிட்ட ஷாதிகா ஆன்டி! பாத்ததுமே ஒரு சந்தேகம்.. சரியான இடத்துக்கு தான் வந்தேனான்னு...
அட நம்மள மதிச்சு வேற பின்னூட்டம் போடறாங்களேன்னு...
அப்புறம் ஹைஷ் அங்கிள் ஒரு புது பொலிவோட வரச்சொன்னதால் மெதுவா வந்து ஊர்ந்துகொண்டிருக்கிறேன்...
// வண்டி 10 நிமிசம் தான் நிக்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு சீக்கிரம் வாங்க...
10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... நல்ல எழுத்துகள் மூலம் எல்லாருக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க ஆசை.
என்னை பற்றி சொல்ல அதிகமில்லை.... அன்பான கணவர்.. நிறைவான வாழ்க்கை.. குறையொன்றுமில்லை.. அதீத இசை ஆர்வம்....சீக்கிரம் சிரிக்க வைக்க முடியும்... மிதமான இறை நோக்கம்... மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்... கன்னா பின்னாவென போட்டோ எடுப்பேன்... முக்கியமா போஸ் கொடுக்காதவங்கள ( குழந்தைகள்/ கட்டிடங்கள்/ இயற்கை காட்சி)
இந்த தொடர் பதிவுக்கு தோழி விஜி ( விஜி கிரியேஷன்ஸ்) அவர்களை அழைக்கிறேன்...
இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!