இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? பூ பந்தா அப்படின்னா பொண்ணுங்க மட்டும் தான் விளையாட முடியும்.. சரி சரி...
லோகத்திலே கிரிக்கெட்டு தெரியாதவங்க /புரியாதவங்க இருப்பாங்களான்னா.. இருக்கேனே ... அப்பல்லாம் ஸ்கூல்படிக்கும் போது புரியுதோ இல்லையோ பக்கத்து வீட்டு கருப்பு வெள்ளை டீவியில டென்னிஸ் பார்ப்போம் . எப்படி ஸ்கோர் ஆகுது எது அவுட்டு எல்லாம் அத்துப்படி... அதில எத்தனை மேஜர் சாம்பியன்ஷிப் இருக்கு இதெல்லாம் மனப்பாடமா தெரியும்.. பிரெஞ்சு மொழி தெரியுதோ இல்லையோ.. ரெண்டு பிளேயரும் ஒரே ஸ்கோர் (40 40 ) எடுத்தா அவான்டேஜ் ( அட்வான்டேஜ் இல்லை) அப்படின்னு கூவிட்டு இருப்போம்... இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ஆன்ரே அகாசி... ஸ்டெஃபி கிராஃப் இப்படியான ஆக்களோட அறிமுகம் என்னோட டென்னிஸ் விளையாட்டு உலகம்..
முதன் முதலில் டென்னிஸ் கோர்ட் காலேஜில படிக்கபோன போது தான் பார்த்தேன்.. அதுக்கு ராக்கெட் ( டென்னிஸ் மட்டை) வாங்கவே என்னோட ஒரு செமஸ்டர் முழுக்கா கட்டற பணம் செலவழிக்கணும் போலன்னு.. விளயாடறதெல்லாம் இல்லை.. சும்மா போற போக்கில பாக்கறதோட சரி...அதுவும் புள்ளங்க யாரும் விளையாடததால பாக்க சான்சே இல்லை.. டீவியோட சரி...
கல்யாணம் ஆகி வந்து பார்த்தா இவர் எதோ அவார்ட் எல்லாம் வாங்கி இருப்பரு போல...நாமளும் அடிக்கலாம்ன்னு கோர்டுக்கு போனா அங்க எல்லா லேடீஸும் சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க.. நாம இந்த கோர்டில அடிச்சா ஆறவதுகோர்ர்டில தான் ரிட்டன் கொடுக்க முடியும் போல.. அப்படி இப்படி கொஞ்சம் கத்துக்கலாம்ன்னு பாத்தா நம்மள பந்து பொறுக்க கூட விடல..பின்னே பந்து வீசறேன்னு யாரையாவது அடிச்சி வச்சா என்ன பண்ணன்னு பயம் தான் இவருக்கு :)
இப்படியே கேவலமா விளையாண்டு ஒரு வழியா என் சைடுக்கு பந்து வந்தா அடிக்காம விடுறதில்லை அந்த ரேஞ்சுக்கு விளையாடிட்டு இருந்தேன்... இதில என்னை விடகேவலமா விளையாடிட்டு இருக்கவங்கள பாத்து ஒரு நக்கல் வேற... இதுக்கு தான் ஒரு பழமொழி இருக்கே..ஆங் அதே தான்...
சரி கொஞ்சம் கொஞ்சமா கேம் இம்ப்ரூப் பண்ணிடலாம்ன்னு பார்த்தா எதுவுமே சரிப்பட்டு வரலை.. இதுக்கிடையில அமெரிக்கன் டென்னிஸ் கிளப்பில மெம்பர் ஆகறதென்ன...அதுக்கு சன்மானமா கொடுத்த ஓவர் சைஸ் டீசர்ட்டில காணாம போயி .. அவங்க அனுப்பற மேகசினை எல்லாம் வரி விடாம படிக்கறது என்னன்னு.. ஒரே சீனா போயிட்டு இருந்தது..
ஒரு கோடை விடுமுறையில் ஒழுங்கவே கத்துக்கலாம்ன்னு நினைச்சி நம்ம டென்னிஸ் அஸோசியேஷன் ல கேட்டா உங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கே அங்க விலையும் குறைவு தான் அப்படின்னு சொன்னாங்க.
மொத்தம் 8 வகுப்பு அதுக்கு 80 டாலர் தான்.. ஒரு மணி நேர வகுப்பில 4பேருக்கு சொல்லி கொடுத்தாங்க.. கோச் ஒரு குரோசியா நாட்டை சேர்ந்தவர்..வழக்கமா இந்தியர்களை பத்தி கேப்பதுபோல இவரும் கேப்பாருன்னு நினைச்சா இவர் எதோ ஓபிராய் குடும்பத்தில என்னிடம் கோச்சிங் எடுத்தாங்கன்னு சொன்னார்.. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஓபிராய் என்றால் ஹோட்டல் தான் நினைவுக்கு வரும்... அவர் பேசுவதே புரியல அப்படி எப்படியோ கடமுடான்னு பேசுவார்.. என் நேரம் பாருங்க என் டீமில அவ்ர் நாட்டை சேர்ந்த கல்லூரி பெண்ணும் இருந்தாள்... அந்த பொண்ணுக்கு அவங்க மொழியில சொல்லி கொடுத்ததை நான் புரிஞ்சிட்டு விளையாடணுமாம்.. முதல்ல மட்டையை எப்படி பிடிப்பதுன்னு சொன்னார்...எனக்கு சரியா பிடிக்க வரல.. அதுக்கு வேற திட்டு.. மொதல்லயே நம்ம வரலாறு வேற சொல்லிட்டோமா.. அவரும் இவ்வளவு படிச்சிருக்கே இது சரியா வரலையான்னு திட்டு... நமக்கு வெய்யில் ஆகாது.. கருப்பு கண்ணாடி போட பிடிக்காது. இப்படியா ரொம்ப திட்டுவாங்கி... 8 வார கிளாஸ்ல 2 வாரம் லீவு வேற..கடைசில சொல்லிட்டார் திருவாயை திறந்து.. மோஸ்ட் இம்ரூவ்ட் :))
இங்க வீட்டையாவுக்கு பெரும தாங்கல... பின்னே எல்லா ஸ்ட்ரோக்கும் சரியா அடிப்பேன்...இப்பவும் ஆனா விளையாட ஆள் கிடைக்கலன்னா மட்டும் என்னைய ஆட்டத்துக்கு சேத்திக்குவாங்க...ஜஸ்ட் லைக் உப்புக்கு...
இது வரை 4 யூ எஸ் ஓப்பன் ஆட்டங்கள் பார்த்து இருக்கேன்.
ராஜர் பெடரர் - லேட்டன் ஹியூவிட்ட்
மரியா ஷரபோவா - சான்யா மிர்சா
செரீனா வில்லியம்ஸ் - ஆமிலி மௌரிஸ்மோ
ஒரு மென்ஸ் மேச் படத்தில இருக்கு ஆனா ஆள் பேர் நினைவில்லை...
ஒரு வயசானவங்க மேச்.. அந்த படங்கள் இருக்கு யானா நாவாட்னா - மார்டின நவரட்லோவா
http://picasaweb.google.com/ilaveera/Tennis_Pic#
எல்லா படங்களும் இல்லை.. உங்கள் பார்வைக்கு..பிகாசாவில்..