இது பாரதிதாசனின் கவிதை பற்றியது அல்ல... கண்ணதாசனின் பாடல் வரிகளை தினமும் நினைவுபடுத்தும் காவியமான ஓவியத்தை பற்றியது.
எனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடல்..டி எம் எஸ் ஸ்லோமோஷனில் பாடியதால் எப்பவும் எனக்கு நினைவலைகளை அசைபோட்டபடி ரசிக்க முடிந்த முத்தான பாடல்...
" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் "
குழந்தைகளுக்கு ஒருவரை கண்டால் ஏன் பிடிக்கிறது .. மற்றொருவரை கண்டால் ஏன் பிடிக்கவில்லை என்பது யாருக்கும் புரியாத விடயம்...எங்கள் சின்னகுட்டி "அத்தை" என்று சொன்னாலே அறை முழுவதும் என்னைத் தேடுவாள்.வாரம் தவறாமல் எங்களுக்கு அவளைப் பார்த்தாலே ஒரு வாரத்துக்கு தேவையான எனர்ஜி பூஸ்ட் கிடைக்கும்... நினைத்தாலே மனசுக்குள் பூக்கும் புன்னகையை மறைக்க இயலாது... இப்படியான நேரத்தில் என் மனதில் தோன்றும் பாடல்...."எட்ட இருந்தே நினைத்தாலும் மணக்கும் இனிக்கும் உன் உருவம்" ....
எல்லோருக்குமே பிடித்த பாடல் இருக்கும் .. பிடித்த மனிதர்கள்.. பிடித்த காட்சிகள் இருக்கும்... சில நேரம் பாடல்களை மனிதர்களோடும்/காட்சியோடும் சம்பந்தபடுத்தி அதனை நமது "கோ டூ" பாசிடிவ் இமேஜ் ஆக பயன் படுத்துவோம்...
சின்னகுட்டியுடன் விளையாடும் பொழுது அவள் செய்யும் ஓவ்வொரு செயலுக்கும் ஆர்ப்பரித்து அவளை ஊக்குவிப்பது வழக்கம்... ஒரு முறை அவள் முத்தம் கொடுக்க வந்தபோது வேண்டாம் என்று விளையாட்டாய் மறுத்த போது அவளுக்கு அதுவே ஒரு விளையாட்டாய் போனது... மூன்று மணி நேர அன்பு பறிமாறலுக்குப்பின்...மறக்காமல் மறுபடியும் எனக்கு எதிர்பாராத அன்பு முத்தம் கொடுத்தாள் ... எங்கள் வாழ்வில வசந்தம் தந்த ஆசை மருமகள் காவியாவுக்கு இந்த பதிவு ...
PS:வேறு ஊர் மாறியதால் மருமகளை பிரிந்து தினமும் நினைக்கிறேன்.