Tuesday, January 12, 2010

எதிர்பாராத முத்தம் !!!!


இது பாரதிதாசனின் கவிதை பற்றியது அல்ல... கண்ணதாசனின் பாடல் வரிகளை தினமும் நினைவுபடுத்தும் காவியமான ஓவியத்தை பற்றியது.

எனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடல்..டி எம் எஸ் ஸ்லோமோஷ‌னில் பாடிய‌தால் எப்ப‌வும் என‌க்கு நினைவ‌லைக‌ளை அசைபோட்ட‌ப‌டி ர‌சிக்க‌ முடிந்த‌ முத்தான‌ பாட‌ல்...

" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் "

குழந்தைகளுக்கு ஒருவரை கண்டால் ஏன் பிடிக்கிறது .. மற்றொருவரை கண்டால் ஏன் பிடிக்கவில்லை என்பது யாருக்கும் புரியாத விடயம்...எங்கள் சின்னகுட்டி "அத்தை" என்று சொன்னாலே அறை முழுவதும் என்னைத் தேடுவாள்.வாரம் தவறாமல் எங்களுக்கு அவளைப் பார்த்தாலே ஒரு வாரத்துக்கு தேவையான எனர்ஜி பூஸ்ட் கிடைக்கும்... நினைத்தாலே மனசுக்குள் பூக்கும் புன்னகையை மறைக்க இயலாது... இப்படியான நேரத்தில் என் மனதில் தோன்றும் பாடல்...."எட்ட இருந்தே நினைத்தாலும் மணக்கும் இனிக்கும் உன் உருவம்" ....

எல்லோருக்குமே பிடித்த பாடல் இருக்கும் .. பிடித்த மனிதர்கள்.. பிடித்த காட்சிகள் இருக்கும்... சில நேரம் பாடல்களை மனிதர்களோடும்/காட்சியோடும் சம்பந்தபடுத்தி அதனை நமது "கோ‍‍ டூ" பாசிடிவ் இமேஜ் ஆக பயன் படுத்துவோம்...

சின்னகுட்டியுடன் விளையாடும் பொழுது அவள் செய்யும் ஓவ்வொரு செயலுக்கும் ஆர்ப்பரித்து அவளை ஊக்குவிப்பது வழக்கம்... ஒரு முறை அவள் முத்தம் கொடுக்க வந்தபோது வேண்டாம் என்று விளையாட்டாய் மறுத்த போது அவளுக்கு அதுவே ஒரு விளையாட்டாய் போனது... மூன்று மணி நேர அன்பு பறிமாறலுக்குப்பின்...மறக்காமல் மறுபடியும் எனக்கு எதிர்பாராத அன்பு முத்தம் கொடுத்தாள் ... எங்கள் வாழ்வில வசந்தம் தந்த ஆசை மருமகள் காவியாவுக்கு இந்த பதிவு ...

PS:வேறு ஊர் மாறியதால் மருமகளை பிரிந்து தினமும் நினைக்கிறேன்.

8 comments:

athira said...

காவியா!! அழகான பெயர்.

எதிர்பாராத முத்தமென்றாலே இன்ப அதிர்ச்சிதானே இலா.

உங்கள் தமிழ் அழகோ அழகு. அதிலும் எங்கட கண்ணதாசனை உதாரணம் காட்டி, என்னை உடன் பதிவு போட வைத்துவிட்டீங்கள். அவருக்கும் எனக்கும் நெருங்கிய நம்பர் பொருத்தம் உண்டு.

இலா, இதுக்கு முன் நிறைய ரைப் பண்ணி ... அனுப்ப இருந்த வேளை, காற்றோடு மறைந்துவிட்டது.. இது 2 வது பதிவு.

தொடருங்கள்.

அன்போடு அதிரா.

ஹைஷ்126 said...

இலா நீங்களும் லைலா மாதிரி ரூம் போட்டு யோசிச்சி இப்படி எல்லாம் எழுதுவீங்களோ? அப்படியே சிறுவாணி நீர்விழ்ச்சிப் போல் கொட்டுகிறது.

உங்களின் முதல் பத்தியின் ஒரு ரகசியம் பிறகு எழுதுகிறேன். (குழநதைகள் அட்டை போல் ஒட்டிக் கொள்ளும்)

வாழ்க வளமுடன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இலா.. அழகா எழுதியிருக்கீங்க.. நீங்க தானே எழுதினீங்க? :) தமிழ் வராதுன்னு நினைச்சேன் உங்களுக்கு.. நல்லாயிருக்கு உங்க பதிவு...

இலா said...

அதிரா! எனக்கும் பிடிக்கும் கண்ணதாசனை... சென்னையில் அவர் வீட்டின் மும் இருக்கும் இட்லி கடையில் சாப்பிடுவேன். கொஞ்சமாவது மண்வாசனை கிடைக்குமே என்று :)
உங்க ஊக்கத்துக்கு நன்றி !!!

ஹைஷ் அங்கிள்!!! கிண்டல் தானே... உங்க அன்பான வழிகாட்டுதலுக்கு நன்றி!!

சந்தனா! தமிழ் வராது என்றில்லை.. எழுத்து வழக்கு எனக்கு கொஞ்சம் தகராறு தான்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

ஹைஷ்126 said...

காவியா ரொம்ப க்யூட், சுத்தி போட சொல்லுங்க.

வாழ்க வளமுடன்

இலா said...

ஹைஷ் அங்கிள்!!! காவியா இப்போ இந்தியால வெகேஷன்.. அவங்க பாட்டியிடம் போன் செய்து சொல்கிறேன்.

ஸாதிகா said...

அடடா.. இலாவுக்கு மருமகள் மீதுதான் எவ்வளவு பாசம்...!உங்கள் பகிர்வை மிகவும் ரசித்தேன் இலா.

இலா said...

ஷாதிகா ஆன்டி! எனக்கு எல்லாருடைய குழந்தைகளையும் பிடிக்கும். இது என் ஸ்பெஷல் செல்லம். இப்போ பல் எல்லாம் முளைத்து.. சோ கியூட்டா இருக்காங்க :))