Thursday, March 4, 2010

சொல்ல மறந்த கதை!

என் வாழ்க்கையில் பல நேரம் பலரும் பல விதங்களில் வந்து போயிருக்கிறார்கள் . சிலரை மறக்கவே முடியாது , அவர்கள் எனக்கு நெருங்கியவராக கூட இருக்க வேண்டியதில்லை. இந்த வாழ்க்கை பயணத்தில் எப்பவுமே ரஷ் அவர் டிராபிக் தான். ஆனாலும் ஒரு நொடியில் சொல்லகூடிய ஒரு வார்த்தை "நன்றி" "ஷுக்ரியா" "டஃன்க" "க்ராட்சியாஸ்" "தேங்யூ".நம்மட கலாச்சாரத்தில் நன்றி நெருங்கிய உறவுகளுக்குள் சொன்னால் நமக்குள்ள எதுக்கு என்று சொல்வார்கள். மேலை நாடுகளில் கதவை திறந்து விட்டாலோ அல்லது எதிர்பாராது செய்யும் செயலும் ஒரு நன்றியை சம்பாதித்து தரும்.

இப்ப பழகியதில் அம்மா காலையில் காஃபி கொடுத்தாலும் தேங்ஸ்மா என்று சொன்னால் தான் காஃபி இனிக்கிறது போல இருக்கும்... அது ஒரு இர‌ண்டாம் குண‌மாகிவிட்ட‌து...

சில‌ சந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் ந‌ன்றி என்று சொல்ல‌வும் முடியாம‌ல் இருக்கும்... அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்னோட‌ ம‌ன‌தில் த‌னியிட‌ம் வ‌கிக்கிறார்க‌ள்.த‌னி ஏசி ரூம் என் ம‌ன‌சில‌ :)

சில வருடங்களுக்கு முன் ஒர் இரவில் வாழ்க்கை மாறியது. எமெர்ஜென்சி ரூம் விடிய காலையில் சர்ஜரி. கண்விழித்து பார்த்ததில் என் கனவு கலைந்திருந்தது . முதல் விசிட்டர் ! அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து வந்த சகோதரி ! கலங்காதே கண்ணே என்று கை பிடித்து ஆறுதல் சொன்னார்... ஆறாய் பெருகிய கண்ணீரில் ஆறுதல் சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

இப்படி அறிமுகமே இல்லாமல் இருப்பவர்கள் எனக்கு செய்த உபகாரம் பல.நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை...

3 comments:

Asiya Omar said...

நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை.
-அருமை இலா.

இமா க்றிஸ் said...

//ஆறாய் பெருகிய கண்ணீரில்// she would have have understood your 'Thank you' Ila.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. சொன்னால் தான் நன்றியா இலா?? :))))))))