Tuesday, August 24, 2010
ஒரே ஒரு முறை
இது ஏன்? நாம எல்லாரும் வாழ்க்கையில் ஒரு முறை இல்லை.. பலமுறை இந்த இடத்தில இருப்போம்.
கடவுளே இந்த ஒரே ஒரு முறை என்னை காப்பாத்திட்டா இனிமேல் நான் எல்லாமே சரியா செய்வேன்...
இந்த ஒரே ஒரு முறை அருணா மிஸ் ( அறிவியல் 10 ஆம் வகுப்பு) கிட்ட அடி வாங்காம காப்பாத்திட்டா உனக்கு 100 தேங்காய்.. இல்லை இல்லை ஒரு தேங்காய் உடைக்கிறேன்...
இந்த ஒரே ஒரு முறை எலக்ரிகல் லேபில் முருக்ஸ் சார் என்னோட லேப் ரெக்கார்டை தூக்கி லேபுக்கு வெளியே போடலைன்னா அடுத்த வாரம் எல்லாம் சரியா முதல் நாளே தயார் செய்வேன்...
இந்த ஒரே ஒரு முறை அந்த ஆப்பரேஷன் ரிசர்ச் பாடத்தில் அசைன்மென்ட்டுக்கு பாஸ்மார்க்குக்கும் மேல வரணும்... வந்த அடுத்த செம்ல இருந்து எப்படியாவது நல்லா படிப்பேன்...
இந்த ஒரே ஒரு முறை எப்படியாவது அந்த சிடுமூஞ்சி மேனேஜரிடம் இருந்து தப்பிக்கணும்...
பல நேரம் திங்கள் கிழமைகளில் மட்டும் இந்த "கடவுளே ஒரே ஒரு முறை..." மன்றாடல் நடக்கும்...
கடவுள் மட்டும் என்ன சளைச்சவரா?? இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கன்னு .. அதிலயும் குலுக்கல் முறையில் யாரையாவது காப்பாத்துவாரு...
மக்கள்ஸ் அதுக்கும் மேல.. அவங்களும் விடாக்கண்டன்ல கொடக்கண்டனா மறுக்கா அதே பல்லவிய பாடிகிட்டு திரியுவாங்க...
கொஞ்சம் கடலோரமா இருந்தா உப்பு காத்து கீத்து பட்டு(அடிச்சி) திருந்தினா உண்டு.. இல்லன்னா நாங்க கஜினி ( சூர்யா படம் கஜினி இல்லீங்க).. இது 7 ஆம் வகுப்பில படிச்ச கஜினி முகம்மது ரேஞ்சுக்கு முயற்சியோ முயற்சி செய்வோம் அதே பழைய தவறோட.. அப்புறம் எப்படி காரியத்தில வெற்றி ஆகறது....
இந்த பதிவில ஒரு மாரல் ஆஃப் த கதையும் கிடையாது...
ஏன் ஒரு நிகழ்வில இருந்து தப்பறோம்.. இல்லை ஏன் நடக்குதுன்னு நமக்கே தெரியாது.. இதெல்லாம் தெரிஞ்சிட்டா அவ்வளவு தாங்க " நானே கடவுள்"
சரி சரி சொல்ல வந்தது சரியா சொல்ல முடியலை..
ஆங்கிலத்தில் சொல்லறேன் :
If I were to know all the answers to everything then I would be God
பி.கு: படம் சுட்டது தான்
Tuesday, August 10, 2010
படித்தேன் ரசித்தேன் !
சமீபத்தில் படித்து ரசித்தது ! உங்கள் பார்வைக்கு..
அன்புடன்
இலா
The longer I live, the more I realize the impact of attitude on life.
Attitude to me is more important than facts. It is more important then the past, than education, than money, than circumstances, than failures, than successes, than what other people think or say or do.
It is more important then appearance, giftedness, or skill.
The remarkable thing is, we have a choice everyday regarding the attitude we embrace for that day.
We cannot change our past.
We cannot change the fact that people may act in a certain way.
We cannot change the inevitable.
The only thing we can do is play on the one string we have, and that is our attitude.
I am convinced that life is ten percent what happens to me and ninety percent how I react to it.
And so it is with you. We are in charge of our attitudes.
- Dr Charles Swindell
அன்புடன்
இலா
The longer I live, the more I realize the impact of attitude on life.
Attitude to me is more important than facts. It is more important then the past, than education, than money, than circumstances, than failures, than successes, than what other people think or say or do.
It is more important then appearance, giftedness, or skill.
The remarkable thing is, we have a choice everyday regarding the attitude we embrace for that day.
We cannot change our past.
We cannot change the fact that people may act in a certain way.
We cannot change the inevitable.
The only thing we can do is play on the one string we have, and that is our attitude.
I am convinced that life is ten percent what happens to me and ninety percent how I react to it.
And so it is with you. We are in charge of our attitudes.
- Dr Charles Swindell
Thursday, August 5, 2010
அழைத்தது யாரோ .. என்னையா கூப்புட்டீக !!
அதிராவின் அன்பு அழைப்பினை ஏற்று என் பதிவுலகில் முதன் முறையாக தொடர் பதிவிடுகிறேன்.. நீள்விடுப்பிற்கு பின் வந்தமையால் சொற்குற்றம் / பொருள் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்....
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?சொந்த பேருதாங்க... நல்லா இருந்த பேரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி இப்படி கொண்டு வந்துட்டாங்க... புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. அதுக்குள்ள...
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.
நல்லா எல்லாரும் லெச்சிமின்னு கூப்புட்டா ஒரு 4 பேரும் 2 நாலு கால் ஆக்களும் திரும்பி பாத்துட்டு இருந்தோம்.. அப்பா ரொம்ப தமிழாக்கம் செய்யறேன்னு இலக்குமி என்று வைத்து... அது சுக்குமி லகு திப்பிலி கூட சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொன்னதில் மிச்சம்... இலா என்றால் பொறுமையின் சிகரமாமே???!!!
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்... இன்னும் குழப்பி குழப்பி தமிழ் ஆங்கிலத்தில் தான் எழுதறேன்... நல்ல தமிழில் எழுத ஆசைதான்... தமிழில் எழுத ஹைஷ் அங்கிள் கொடுத்த ஊக்கம் தான்...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒன்னுமே செய்லீங்ண்ணா... இதுக்கே மயில் பண்ணைக்கு விசிட்டர்ஸ் வாராங்க... அவங்க அன்போ அன்பு...
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எழுதுவதெல்லாம் முக்காவாசி சொந்த விஷயம் தான்... மத்தவங்கள புண்படுத்தாத வகையில் எழுதறேன்...என்னோட ஆர்வங்கள் அதிகம் ஆனா அதுக்கு உயிர்ப்பு நேரமோ ரொம்ப கம்மி..
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
என்னோட மனசில தோன்றுவதை பதிவிடுகிறேன்... டைரியில் எழுதினா அடுத்த வருடம் அது குப்பைக்கு போய்விடும்.. இங்க இருப்பதால் எடுத்து பார்த்து அசைபோட வசதியா இருக்கு.. ( ஜெய்.. எழுதுனது 10 பதிவு அதுல அசை போட என்ன இருக்கா... பிரதர்.. இன்னும் ஒரு வாரம் பொறுங்க.. உங்களுக்கு சரியான பதிலோட வருகிறேன்)
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒரு பிளாகுக்கு வரவே நேரமில்லை... அவ்வளவு மேட்டர் இருந்தா நாங்க அசோசொயேட்ட பிரஸ்ல இல்ல வேலை பார்ப்போம் :)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
எனக்கு எந்த பதிவர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வந்ததில்லை.. வராது...
போகுமிடமெல்லாம் அன்பு.. கொஞ்சமா குழப்படி.. கொஞ்சம் சமூக ஆர்வம்.. கொஞ்சமே மிகுதியாய் நகைச்சுவை... அப்புறம்.. சில நேரம் தான் பயம்... அதுக்காக "நட்பிலே" ஒரு கட்டில் போட்டுருக்கில்ல... அதுக்கடியில் ஒளிஞ்சிருவோமில்ல.... ஒன்னுமே முடியலன்னா எஸ் ஆகிடுவோம்....
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
என்னோட முதல் புகைப்பட பதிவுக்கு பின்னுட்டமிட்ட ஷாதிகா ஆன்டி! பாத்ததுமே ஒரு சந்தேகம்.. சரியான இடத்துக்கு தான் வந்தேனான்னு...
அட நம்மள மதிச்சு வேற பின்னூட்டம் போடறாங்களேன்னு...
அப்புறம் ஹைஷ் அங்கிள் ஒரு புது பொலிவோட வரச்சொன்னதால் மெதுவா வந்து ஊர்ந்துகொண்டிருக்கிறேன்...
// வண்டி 10 நிமிசம் தான் நிக்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு சீக்கிரம் வாங்க...
10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
நல்ல எழுத்துகள் மூலம் எல்லாருக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க ஆசை.
என்னை பற்றி சொல்ல அதிகமில்லை.... அன்பான கணவர்.. நிறைவான வாழ்க்கை.. குறையொன்றுமில்லை.. அதீத இசை ஆர்வம்....சீக்கிரம் சிரிக்க வைக்க முடியும்... மிதமான இறை நோக்கம்... மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்... கன்னா பின்னாவென போட்டோ எடுப்பேன்... முக்கியமா போஸ் கொடுக்காதவங்கள ( குழந்தைகள்/ கட்டிடங்கள்/ இயற்கை காட்சி)
இந்த தொடர் பதிவுக்கு தோழி விஜி ( விஜி கிரியேஷன்ஸ்) அவர்களை அழைக்கிறேன்...
இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!
Subscribe to:
Posts (Atom)