Thursday, August 5, 2010

அழைத்தது யாரோ .. என்னையா கூப்புட்டீக !!


அதிராவின் அன்பு அழைப்பினை ஏற்று என் பதிவுலகில் முதன் முறையாக தொடர் பதிவிடுகிறேன்.. நீள்விடுப்பிற்கு பின் வந்தமையால் சொற்குற்றம் / பொருள் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?சொந்த பேருதாங்க... நல்லா இருந்த பேரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி இப்படி கொண்டு வந்துட்டாங்க... புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. அதுக்குள்ள...

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.
நல்லா எல்லாரும் லெச்சிமின்னு கூப்புட்டா ஒரு 4 பேரும் 2 நாலு கால் ஆக்களும் திரும்பி பாத்துட்டு இருந்தோம்.. அப்பா ரொம்ப தமிழாக்கம் செய்யறேன்னு இலக்குமி என்று வைத்து... அது சுக்குமி லகு திப்பிலி கூட சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொன்னதில் மிச்சம்... இலா என்றால் பொறுமையின் சிகரமாமே???!!!

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்... இன்னும் குழப்பி குழப்பி தமிழ் ஆங்கிலத்தில் தான் எழுதறேன்... நல்ல தமிழில் எழுத ஆசைதான்... தமிழில் எழுத ஹைஷ் அங்கிள் கொடுத்த ஊக்கம் தான்...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே செய்லீங்ண்ணா... இதுக்கே ம‌யில் ப‌ண்ணைக்கு விசிட்ட‌ர்ஸ் வாராங்க‌... அவ‌ங்க‌ அன்போ அன்பு...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எழுதுவ‌தெல்லாம் முக்காவாசி சொந்த‌ விஷ‌ய‌ம் தான்... ம‌த்த‌வ‌ங்க‌ள‌ புண்ப‌டுத்தாத‌ வ‌கையில் எழுத‌றேன்...என்னோட‌ ஆர்வ‌ங்க‌ள் அதிக‌ம் ஆனா அதுக்கு உயிர்ப்பு நேர‌மோ ரொம்ப‌ க‌ம்மி..


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
என்னோட‌ ம‌ன‌சில‌ தோன்றுவ‌தை ப‌திவிடுகிறேன்... டைரியில் எழுதினா அடுத்த‌ வ‌ருட‌ம் அது குப்பைக்கு போய்விடும்.. இங்க‌ இருப்ப‌தால் எடுத்து பார்த்து அசைபோட‌ வச‌தியா இருக்கு.. ( ஜெய்.. எழுதுன‌து 10 ப‌திவு அதுல‌ அசை போட‌ என்ன‌ இருக்கா... பிர‌த‌ர்.. இன்னும் ஒரு வார‌ம் பொறுங்க‌.. உங்க‌ளுக்கு ச‌ரியான‌ ப‌திலோட‌ வ‌ருகிறேன்)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒரு பிளாகுக்கு வரவே நேரமில்லை... அவ்வளவு மேட்டர் இருந்தா நாங்க அசோசொயேட்ட பிரஸ்ல இல்ல வேலை பார்ப்போம் :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
எனக்கு எந்த பதிவர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வந்ததில்லை.. வராது...
போகுமிடமெல்லாம் அன்பு.. கொஞ்சமா குழப்படி.. கொஞ்சம் சமூக ஆர்வம்.. கொஞ்சமே மிகுதியாய் நகைச்சுவை... அப்புறம்.. சில நேரம் தான் பயம்... அதுக்காக "நட்பிலே" ஒரு கட்டில் போட்டுருக்கில்ல... அதுக்கடியில் ஒளிஞ்சிருவோமில்ல.... ஒன்னுமே முடியலன்னா எஸ் ஆகிடுவோம்....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
என்னோட முதல் புகைப்பட பதிவுக்கு பின்னுட்டமிட்ட ஷாதிகா ஆன்டி! பாத்ததுமே ஒரு சந்தேகம்.. சரியான இடத்துக்கு தான் வந்தேனான்னு...

அட நம்மள மதிச்சு வேற பின்னூட்டம் போடறாங்களேன்னு...

அப்புறம் ஹைஷ் அங்கிள் ஒரு புது பொலிவோட வரச்சொன்னதால் மெதுவா வந்து ஊர்ந்துகொண்டிருக்கிறேன்...

// வண்டி 10 நிமிசம் தான் நிக்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு சீக்கிரம் வாங்க...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நல்ல எழுத்துகள் மூலம் எல்லாருக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க ஆசை.
என்னை பற்றி சொல்ல அதிகமில்லை.... அன்பான கணவர்.. நிறைவான வாழ்க்கை.. குறையொன்றுமில்லை.. அதீத இசை ஆர்வம்....சீக்கிரம் சிரிக்க வைக்க முடியும்... மிதமான இறை நோக்கம்... மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்... கன்னா பின்னாவென போட்டோ எடுப்பேன்... முக்கியமா போஸ் கொடுக்காதவங்கள ( குழந்தைகள்/ கட்டிடங்கள்/ இயற்கை காட்சி)

இந்த தொடர் பதிவுக்கு தோழி விஜி ( விஜி கிரியேஷன்ஸ்) அவர்களை அழைக்கிறேன்...

இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!

52 comments:

kavisiva said...

அடடா என்னா ஸ்பீடு?! கடகடன்னு மனுசுல பட்டதை நச்சுன்னு சொல்லிட்டீங்க இலா.

இன்னும் நிறைய எழுதுங்க நேரம் கிடைக்கும் போது.

kavisiva said...
This comment has been removed by the author.
kavisiva said...

அந்த ஃபோட்டோவுல இருக்கறது நீங்களா இலா? ரொம்ப அயகா இருக்கீங்க.
கவி எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இலா said...

கவிசிவா! என்னை விட நீங்க ஸ்பீடு தான் போல.. ஒரு காபி குடிச்சிட்டு வர்ரதுக்குள்ள.. பதிவுக்கு பின்னூட்டம் என் போட்டோவுக்கு பின்னூட்டம்...ரொம்ப நன்றி கவி!

ஹைஷ்126 said...

//புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. அதுக்குள்ள...//

இலா ஏதோ உள் குத்து அதிகமா வைச்சு எழுதனமாதிரி இருக்கு, போன வாரம் கூட ஒரு ஸ்மூதி கொடுத்தனே:)

//இலா என்றால் பொறுமையின் சிகரமாமே???!!!//

ரொம்ப மூச்சு பயிற்சி பண்ணி இருப்பீங்க புஸ் மாதிரி:))))

//ம‌யில் ப‌ண்ணைக்கு விசிட்ட‌ர்ஸ் வாராங்க‌... அவ‌ங்க‌ அன்போ அன்பு... // ஆறவது குட்டி போட்டு இருக்கில்ல:)

//ஜெய்.. எழுதுன‌து 10 ப‌திவு அதுல‌ அசை போட‌ என்ன‌ இருக்கா... பிர‌த‌ர்.. இன்னும் ஒரு வார‌ம் பொறுங்க‌.. உங்க‌ளுக்கு ச‌ரியான‌ ப‌திலோட‌ வ‌ருகிறேன்)//

அட்ரா சக்கை ஊருக்கு போகும் போது பாரதியின் நினைவகம் போய் சொல்லி விடுகிறேன்.

//அவ்வளவு மேட்டர் இருந்தா நாங்க அசோசொயேட்ட பிரஸ்ல இல்ல வேலை பார்ப்போம் :)//

இலா சூப்பரா உள்குத்து வைச்சு பூஸை இப்படி குத்தி போட்டீங்களே!!! ஒரு வரி பதில் பிடிகாதல்லோ:)))

//"நட்பிலே" ஒரு கட்டில் போட்டுருக்கில்ல... அதுக்கடியில் ஒளிஞ்சிருவோமில்ல.... ஒன்னுமே முடியலன்னா எஸ் ஆகிடுவோம்....//
இன்னும் இரண்டு கட்டில் வாங்கி போட்டீடுவோம்ல:)

//மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்//

ஜெய் நோட் திஸ் பாய்ண்ட். சகோவீரா சமாதான பறவையா?????

athira said...

ஆ.... இலாவா இது... கற்பூரம்மாதிரி.... நான் பச்சமரம் என்றெல்லோ தப்பா நினைச்சிருந்தேன்:))).

இலா!!!, ஹைஷ் அண்ணன் பத்த வைக்கப்பார்க்கிறார் .... நாங்க கட்டிலுக்குக் கீழதானே இருக்கிறோம் எப்பூடிப் பத்தும்?:).

ரொம்ப மூச்சு பயிற்சி பண்ணி இருப்பீங்க புஸ் மாதிரி:))))/// அவரும் மூச்சுப்பயிற்சியெல்லாம் பண்ராரோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் புஸ் ஐச் சொன்னேன்:).

சொல்லுங்க இலா... எங்களுக்கு ஒளிக்க, ஒரு கட்டில் போதும் என... நாங்க என்ன பெரீஈஈய உடம்போடயா இருக்கிறோம்:))).

kavisiva said...
அந்த ஃபோட்டோவுல இருக்கறது நீங்களா இலா? ரொம்ப அயகா இருக்கீங்க.
/// ரிப்பீட்டூஊஊ

ஜெய்லானி said...

ஜெய்லானீஈஈஈஈஈ....?

உள்ளேன் மிஸ்

ஜெய்லானி said...

//அதிராவின் அன்பு அழைப்பினை ஏற்று என் பதிவுலகில் முதன் முறையாக தொடர் பதிவிடுகிறேன்..//

அடப்பாவிங்களா அப்ப கூப்பிடாதது எங்க தப்பாஆஆஆ ச்சே..வடை போச்சே தெரிஞ்சிருந்தா போன மாமாங்கமே வந்து கூப்பிட்டு இருந்திருக்கலாமே ...(என்னது பிளாக் திறந்து 2 வருஷம்தான் ஆகுதா டீல்ல விடு---மைண்ட் வாய்ஸ்)

ஜெய்லானி said...

//புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. //

ஆ...சந்தூஊஊஊஊஊஊ சீக்கிரம் வாங்க .. இது உங்களுக்கு வைத்த வலை..( ஐ ரெண்டு பேரையும் கோத்து விட்டாச்சி )இதுக்குதான் சொன்னேன் எல் போர்ட கழட்ட சொன்னேன் கேட்டீங்களா டிக்கில வேற ஒன்ன வச்சிகிட்டு சுத்துறீங்க

ஜெய்லானி said...

//தமிழில் எழுத ஹைஷ் அங்கிள் கொடுத்த ஊக்கம் தான்...//

அப்படி அவரு குடுக்காம இருந்தா இந்நேரம் நிறைய பதிவு ஒரு வேளை போட்டிருப்பீங்கலா..ஹி..ஹி..

ஜெய்லானி said...

//இதுக்கே ம‌யில் ப‌ண்ணைக்கு விசிட்ட‌ர்ஸ் வாராங்க‌... அவ‌ங்க‌ அன்போ அன்பு... //

அப்படி அனுப்பி வச்சவங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் இருக்கா..!!

ஜெய்லானி said...

//இங்க‌ இருப்ப‌தால் எடுத்து பார்த்து அசைபோட‌ வச‌தியா இருக்கு.. //

நீங்க பதிவு போடும் வேகத்த பாத்தாலே தெரியுதே எவ்வளாவு அசை போடுறீங்கன்னு ஹா..ஹ..

ஜெய்லானி said...

//( ஜெய்.. எழுதுன‌து 10 ப‌திவு அதுல‌ அசை போட‌ என்ன‌ இருக்கா... பிர‌த‌ர்.. இன்னும் ஒரு வார‌ம் பொறுங்க‌.. உங்க‌ளுக்கு ச‌ரியான‌ ப‌திலோட‌ வ‌ருகிறேன்)//

அப்படியாவது வாங்க மேடம்...!!! பிளாக் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிரது...!!!

ஜெய்லானி said...

//அப்புறம் ஹைஷ் அங்கிள் ஒரு புது பொலிவோட வரச்சொன்னதால் மெதுவா வந்து ஊர்ந்துகொண்டிருக்கிறேன்...//

எந்த வருஷம் எந்த மாசம் எந்த பதிவுல ....??????

ஜெய்லானி said...

//// வண்டி 10 நிமிசம் தான் நிக்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு சீக்கிரம் வாங்க... //

அதெல்லாம் முடியாது நாங்க இன்னைக்கு விரதம் நீங்க பழைய படி எஸ்ஸாயிட்டா என்ன பன்றது ..?

ஜெய்லானி said...

//மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்... //

ஆஹா இப்பதான் நம்ம டாப்பிக்குக்கே வந்துருக்கீங்க ..ஹி..ஹி..

ஜெய்லானி said...

//எனக்கு எந்த பதிவர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வந்ததில்லை.. //

கரெக்டா சொன்னீங்க.. அது பிளாக் பக்கம் வரவங்களுக்குதானே வரும் .. வராதவங்களுக்கு எப்படி வரும் ..ஹா..ஹா..

ஜெய்லானி said...

//கன்னா பின்னாவென போட்டோ எடுப்பேன்... முக்கியமா போஸ் கொடுக்காதவங்கள//

கேமரா வச்சா இல்ல...........>

ஜெய்லானி said...

//
//மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்//

ஜெய் நோட் திஸ் பாய்ண்ட். சகோவீரா சமாதான பறவையா?????//

கட்டிலுக்கு கீழே ஒளிஞ்சுக்குவேன்னு சொன்ன வங்க கிட்ட எப்பவும் சாக்கிரதையா இருக்கோனும் ...

ஜெய்லானி said...

போதும் ஜெய்லானி ரெம்பவும் பொருமையை சோதிக்குரே சீக்கிரம் எஸ்ஸாயிரு “பொருமையின் சிகரம்” வரதுக்குள்ள....ஹா..ஹ..



ஹலோ எச்யூஸ்மீஈஈஈஈ இது எல்லாத்துக்கும் பதிலதரனும் இல்லாட்டி இன்னும் 50 கேள்வி கேப்பேன் .( அதுக்காக பயந்து கிட்டு கமெண்ட் மாடரேஷன் போட்டுடாதீங்க ..ஹி...ஹி... அப்படி ஒரு வேளை போட்டா 100 கேள்வி கேட்டு போடுவேன் )

(((எல்லாமே தமாசு கோவிச்சிகிட்டு பிளாக் பக்கம் வராம இருந்துடாதீங்க இதை காரணம் காட்டி )))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹலோ எச்யூஸ்மீஈஈஈஈ இது எல்லாத்துக்கும் பதிலதரனும் இல்லாட்டி இன்னும் 50 கேள்வி கேப்பேன் .( அதுக்காக பயந்து கிட்டு கமெண்ட் மாடரேஷன் போட்டுடாதீங்க ..ஹி...ஹி... அப்படி ஒரு வேளை போட்டா 100 கேள்வி கேட்டு போடுவேன் )
///// ஆ... ஜெய், கார்த்திகைப்பிறைபோல வந்த இலாவை, இப்பூடி விரட்டலாமோ?:))).

இலா said...

ஹைஷ் அங்கிள்! ஸ்மூதியா எப்போ... சரி சரி... உள்குத்து வெளிக்குத்து எல்லாம் கிடையாது சும்மா கிளப்பி விடாதீக... நமக்கு தெரிஞ்சதென்னவோ கும்மாங்குத்து தான்... அதெப்படி என்னோட பதிவை விட நீளமா பின்னூட்டம் தர்ரீங்க...ரொம்ப பீலிங்கா இருக்கு... பாரதி நினைவகம் ஓ! இது எந்த குத்தில சேருது :))

இலா said...

அதீஸ்! சிலருக்கென்னவோ நம்ம "நட்பை"க்கண்டாலே திரி கொளுத்தற வேலயா போச்சு....
வேகமா சொல்லாதீங்க... நாம இளச்சிட்டோம்ம்ன்னு தெரிஞ்சா அப்புறம் கண்ணு போட்டிட போறாங்க...
கீழ இருக்க படம் பாக்கலையா என்னோட பெஸ்ட் பிரெண்ட் என்று போட்டுருக்கேனே :)

இலா said...

ஜெய்! அட்டென்ன்டன்ஸ் போட்டாச்சில்ல... மிஸ் தான் கேள்வி கேக்கணும்.. குறுக்க குறுக்க கேள்வி கேட்டு மிஸ்சை எஸ் ஆக வைக்க கூடாது.. ஐ வில் ரெஃபர் அன்ட் டெல் யூன்னு :))

சும்மா கிடக்கற சந்துவை ஏன் தட்டி எழுப்பறீங்க.. என் கிட்ட கேளுங்க எந்த ஊரு நேம் பிளேட் வேணுமின்னு.. அழகா பேரே அடிச்சி தாரன்...

இலா said...

ஜெய்ண்ணா.. இப்படி அங்கிளை ஓட்டறீங்களே... அவர் மட்டும் "ஊக்கு"விக்காம இருந்தா என்ன கதி ஆகறது...

பெசல் டிஸ்கவுண்ட்டா.. அதுதான் நீங்களே எடுத்திட்டீங்களே... என்னோட வலைப்பூவில் ஒரே பதிவில் அதிகம் பின்னூட்டமிட்டவர் அவார்டை... எங்கப்பா அந்த பட்டயம்.. கொடுத்துடுங்க இவர்கிட்டயே...

அசைபோட நாங்க இன்னும் 4 டியொடினம் வாங்கி வச்சிருக்கோம்...

உண்மையிலே ஆயிரக்கணக்கான காட்டெருமைகளை படம் எடுத்து வச்சிருக்கேன்... ( அட.. மேட்டர வெளிய விடாதே :)) அதை பத்தி ஒருபதிவு போடவா... இங்க ஒரு குத்தும் இல்லீங்....

இலா said...

விரதமா... அதுக்கு எவ்வளவு பிளேட் பிரியாணி சாப்புடுவீக...
எல்லார் புளாக்கிலயும் உங்கள சரியான சந்தேக பிராணின்னு சொல்லறாங்களேன்னு நினைச்சென்... நீங்க அப்ப்டி இல்லவே இல்லீங்...

//அது பிளாக் பக்கம் வரவங்களுக்குதானே வரும் .. வராதவங்களுக்கு எப்படி வரும்
இனிமே வரும் பாருங்க... ஆனா அது நிச்சயம் சந்தேகமா தான் இருக்கு :))

//கேமரா வச்சா இல்ல...........>
ஆமாம் அதுவும் ராசியான கலியாண கேமரா.. எந்த பேச்சிலர் / பேச்சிலரெட் அவங்கள கலியாணத்துக்கு போட்டோ எடுத்தா கட்டாயம் அடுத்த 3 மாசத்தில கல்யாணம் ஆகும்... யார் அது கொஞ்சம் லைன்ல நில்லுங்க...


//கட்டிலுக்கு கீழே ஒளிஞ்சுக்குவேன்னு சொன்ன வங்க கிட்ட எப்பவும் சாக்கிரதையா இருக்கோனும் ...

ஆமா பூரிக்க‌ட்டையெல்லாம் இப்ப‌ பூம‌ராங் டிசைனோட‌ வ‌ருதாம்.. பெச‌லா ஆஸியில் இருந்து.. அதுதான்...ப‌ய‌மே இல்லாம‌ இருங்க‌..

இலா said...

//சீக்கிரம் எஸ்ஸாயிரு
ஆங்.. அந்த பயம்... அப்படியே இருக்கட்டும்...

//எல்லாமே தமாசு கோவிச்சிகிட்டு பிளாக் பக்கம் வராம இருந்துடாதீங்க இதை காரணம் காட்டி
இதுக்கெல்லாம் கோச்சிகிட்டா அப்புறம் சீ சால்ட் போட்டு சாப்பிடவே வேணாம்.. விடுங்க.. அது நமக்குள்ளேயே இருக்கட்டும்.. அந்த சால்ட் விசயம்..

இலா said...

// ஜெய், கார்த்திகைப்பிறைபோல வந்த இலாவை, இப்பூடி
விரட்டலாமோ?:))).


அதிரா.. இப்படி சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன்... அடுத்த வாரம் முக்கியமா ஒரு வேலை இருக்கு... அது முடியவும் பதிவோ பதிவு தான்...

kavisiva said...

ஜெய்லானி எங்க இலாவை இப்படி வூடி கட்டி அடிக்கப்படாது.
விளைவுகளை எங்க வீரா அண்ணால்ல சந்திக்கணும். அப்புறம் இலாவின் கையிலிருந்து அடிக்கடி பூரிக்கட்டை தவறி கீழ விழும் :)

ஜெய்லானி said...

//விளைவுகளை எங்க வீரா அண்ணால்ல சந்திக்கணும். அப்புறம் இலாவின் கையிலிருந்து அடிக்கடி பூரிக்கட்டை தவறி கீழ விழும் :)//

ஆஆஆஆஆ......அங்கேயுமாஆஆஆஆஆஆஆ.....?

'பரிவை' சே.குமார் said...

நீண்ட விடுப்புக்குப் பிறகு தொரட் பதிவுடன் நீங்கள். இனி தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

பதில்கள் அருமை.

http://www.vayalaan.blogspot.com

Asiya Omar said...

இலா பதில்கள் அருமை.very casual.

இலா said...

கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டிசைனை அங்க ஜெய் வூட்டுக்கு பார்சல் அனுப்புவோம்... கைய விட்டுபோச்சுன்னா நாம நினைக்கறவங்கள அடிக்காம திரும்பாது... பயானிக் ஐ மூலம் நாம அவங்கள பாத்த மட்டும் போதும்...

இலா said...

வாங்க பரிவை.சே.குமார் ! இனி இவ்வளவு நீள் விடுப்பு இருக்காது :))

இலா said...

ஆசியா அக்கா! உங்க வருகைக்கு நன்றி! ஊர்ல இருந்து வந்ததை வலைப்பூ மூலம் அறிந்து கொண்டேன்..

ஜெய்லானி said...

//கவி! பூரிக்கட்டை மேட்டர் என்னன்னு சொன்னா புது டிசைனை அங்க ஜெய் வூட்டுக்கு பார்சல் அனுப்புவோம்... //

இது வேறயா..யப்பா தாங்காதுடா சாமீஈஈஈஈஈ

//கைய விட்டுபோச்சுன்னா நாம நினைக்கறவங்கள அடிக்காம திரும்பாது... பயானிக் ஐ மூலம் நாம அவங்கள பாத்த மட்டும் போதும்...//

’பொருமையின் சிகர’முன்னு பேர வச்சிகிட்டு ஏன் இந்த கொலவெறி. எதுவா இருந்தாலும் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம். நோ வயலன்ஸ்(( உஸ்...யப்பா மூச்சி வாங்குது இப்பவே...ஓட முடியல))

Unknown said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா பட்டு பட்டு னு இலா ஸ்டைல்ல வந்திருக்கு :)) (யாரது.. பட்டுவா.. அப்படின்னா என்னன்னு சந்தேகங்... நோ.. மூச்சு விடப்படாது.. விட்டா அடி விழும்.. )

//புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. //

இதிலென்ன தயக்கம்.. நேரடியா வெளிப்படையா.. சந்து அளவுக்கு பயந்தாங்கொள்ளியில்லன்னு சொல்லிட்டு போகறது தானே :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணித் தாறேன்.. கட்டையச் சுத்தியும் சின்னச் சின்னதா ஆனா கூரான முட்கள் இருக்கனும்.. நல்ல கெனமானதா இருக்கனும்.. முடிஞ்சா நல்ல தரமான இரும்புல செஞ்சு தரலாம்..

ஜெய்லானி said...

//ஜெய்லானி வீட்டுக்கு பூரிக்கட்ட நான் டிசைன் பண்ணித் தாறேன்.. கட்டையச் சுத்தியும் சின்னச் சின்னதா ஆனா கூரான முட்கள் இருக்கனும்.. நல்ல கெனமானதா இருக்கனும்.. முடிஞ்சா நல்ல தரமான இரும்புல செஞ்சு தரலாம்..//

இதுல கூட்டு சதி வேறயா....எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

kavisiva said...

சந்தூ ஜெய்லானி வீடுக்கு அனுப்பற பூரிக்கட்டை நீங்க சொன்ன மாதிரி முள்ளுகளோட கனமா இருக்கணும். கூடவே அது கரெக்டா மூக்கை அட்டாக் பண்ற மாதிரி டிசைன் பண்ணணும் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))) அவரு இப்போத் தான் எஸ்ஸாயிப் போயிருக்காரு கவி..

kavisiva said...

எஸ்ஸ்ஸ் ஆயிட்டாரா?! சரி சரி எங்க போயிடப்போறாரு. இங்கதான் எங்கியாச்சும் பதுங்கியிருப்பாரு கண்டுபுடிச்சிடலாம்.

இலாவோட மயில் அடுத்த முட்டையை(பதிவைப்)போட்டா வடை சாப்பிட வந்துடுவார்:)

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

athira said...

இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!
/// மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)

ஜெய்லானி said...

//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//


http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?

ஜெய்லானி said...

//கூடவே அது கரெக்டா மூக்கை அட்டாக் பண்ற மாதிரி டிசைன் பண்ணணும் :)//

அப்ப இனி (கிரிக்கெட்) ஹெல்மெட்டோடதான் வெளிய வரனும் போலிருக்கு....!!

athira said...

ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//


http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?
//// ஹாக்க்க்...ஹாக்க்க்க்...ஹாஆஆஆஆ அடக்கவே முடியவில்லை.... நான் சிரிப்பைச் சொன்னேனாக்கும்:)) கர்ர்ர்ர்:)).

ஜெய்... “அது நான் அவ இல்லை:)”.. அது என் சகோதரம்..., அண்ணன்மாதிரி என வச்சுக்கொள்ளுங்கோவன்:))))) கடவுளே... என்னால முடியல்ல சாமீஈஈஈஈஈ பூஸ் எஸ்ஸ்ஸ்... இவர்தான் உண்மையிலயே என் அ.கோ.மு எல்லாம் சாப்பிடுறவர்போல இருக்கே.... :)))).

athira said...

ஜெய்லானி said...
//மக்கள்ஸ்ஸ் நான் இலாவோட ரொம்ப “தின்” பிரெண்டு:)),,,,,, அதாவது மெல்லிய பிரெண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:)//


http://blogs.nbcuni.com/petsideblog/4-29%20obese%20cat.jpg
எப்படி இது மாதிரியா..?
//// ஹக் ஹக்... ஹா.... ஜெய்..லானி...... “நான் அவர் இல்லை”, அதூஊஊஊஊஊ என்னோட சகோதரம்:), அண்ணன் மாதிரி என வச்சுக்கொள்ளுங்களன்:), கடவுளே என்னால முடியேல்லை:))).

என் அ.கோ.மு அடிக்கடி காணாமல் போகுதே, எங்க போகுதென நினைச்சேன், இப்பத்தான் தெரியுது,..... எங்க போயிருக்கென:)))).

பின் குறிப்பு:
மயில்ப்பண்ணைக்காரம்மா தலைமறைவு:), இலா... நீங்க சாப்பாடு போடாதத்தால மயில் எல்லாம்...இப்போ “மியாவ்... மியாவ்” எண்டெல்லோ கத்துது.... சவுண்டு மாறிப்போச்சு பசியில:))).

இமா க்றிஸ் said...

இலா.. பதில் எல்லாம் நல்லா இருக்கு. சிலது முதலே தெரிஞ்ச பதில்தான். ;)

அது சரீ... யாருக்கும் மயில் முட்டை அவிச்சுக் கொடுத்து கொமண்ட் போடச் சொன்னனீங்களோ!! இப்பிடிப் போட்டுத் தள்ளுறாங்கள். ;))

ஸாதிகா said...

இலா..நீண்ட நாட்களுக்கப்புறமாக வந்து தொடர்பதிவுக்கு சிரப்பாக பதில் அளித்திருக்கும் உங்அக்ளுக்கு ஒரு அன்பு வேண்டு கோள்..இனி அடிக்கடி உங்கள் வலைப்பூபக்கம் வந்து செல்லவும்.

Vijiskitchencreations said...

இலா ரொம்ப நன்றாக எழுதிட்டிங்க. என்னையும் வேற அழைப்பு குடுத்திட்டிங்க. கண்டிப்பா அழைப்ப ஏற்றுகொள்கிறேன். கொஞ்சம் தாமதாமாகிறது.

உங்களுக்கு மட்டுமில்ல திக் ப்ரெண்டி எனக்கும் இலா என்ற ஒரு திக் தோழி எப்பவுமே இருக்காங்க.
மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.