Friday, October 1, 2010

இன்னபிற!


நிறைய எண்ணங்கள் அதில முழுசா ஒன்னும் சொல்ல முடியாம ரெண்டே ரெண்டு வரி மனசில ஓடும். அதை வச்சி கதை பண்ண தெரியாம ஐடியா கூடைக்குள்ள போயி அங்கயும் இருந்து ஓவர்ஃபளோ ஆகி.. இன்னபிற ( எக்சட்ரா :))

மத்தவங்கள நாம எதாவது ஒரு குறை சொல்ல போக மீதமிருக்கும் 4 விரல் நம்மை காட்டுதே ஏன்?? அப்ப மனசுக்குள்ள ஒரு வாய்ஸ் " இப்ப என்ன சொல்லறே! இப்ப என்ன சொல்லறே" அப்படி கூவும்(கூவணும் )???!!!

அப்போ நீங்க எல்லாம் என்ன செய்வீங்க... வீராப்பா நான் பெரிய லார்ட் டேஷ் தாஸ்ன்னு பேசிட்டு இருக்கும் போது சின்னதா அடே நானும் இப்படி ஒரு முறை செய்தேனே இல்லைன்னா இப்படி பேசினேனென்னு நினைவுக்கு வருமே "அப்ப என்ன செய்வீங்க ! அப்ப என்ன செய்வீங்க!"

சில நேரம் "நோ" என்று சொல்ல தெரியாம மென்னு முழுங்கி யார் என்ன சொன்னாலும் "பூம்" "பூம்" ந்னு தலையாட்டி வச்சிட்டு பின்னாடி நம்மள ஒரு காரியம் செய்ய சொன்னவங்கள ஒரு முழு நீள வசைபாட்டு பாடுவோமே ...அப்புறம் அவங்க நீங்க நேரமெடுத்து செய்த வேலைக்கு"நன்றி" ஒரே வார்த்தை தான் . அது மட்டும் சொன்னா போதாது இல்லையா :)
அது கூட சொல்லாம போறவங்களுக்கு என்ன பாட்டு பாட...

சிலர் இருக்காங்க.. அடுத்தவங்க வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயமும் தெரிஞ்சுக்குவாங்க ... ஒண்ணு ஒண்ணா தூண்டில் போடுறது அப்புறம் 199_ இல்லை 200_ல நாம சொன்ன விஷயம்/காரியம் எல்லாம் நினைவுக்கு வச்சி அதுக்கு ஸ்டேடஸ் அப்டேட் :) இப்படி ஒருத்தங்கள பிரெண்டா வச்சிக்க வேணும் தானான்னு தோணும். இதுல பரஸ்பர பகிர்தல் இருந்தாலாவது பரவாயில்லை. இவங்க எல்லாம் தங்கள ரொம்ப திறமைசாலின்னு வேற நினைச்சுக்குவாங்க...
இவங்கள என்ன பண்ண ??

இதெல்லாம் சகஜமப்பா அப்படின்னு சொல்லறீங்களா??
இப்படி எந்த வித டிராமாவும் இல்லாம ஒரு பாசிட்டிவ் பிரெண்ஷிப் ஏன் இருக்க கூடாது. எனக்கும் பலர் இப்போ இருக்காங்க.. எப்பவுமே சொல்லுவேன் அலைவரிசை சரி வரலைன்னு... இப்போல்லாம் என்னோட அணு சுழற்சி பாதையில் அதிகமாக எலெக்ட்ரான்கள் :))

ரொம்ப பொலம்பிட்டேனா??!!!!

எங்க பக்கத்து வீட்டு குட்டீஸ் ரொம்ப புத்திசாலி. இன்டெர்னெட்ல எதோ புதிர் எல்லாம் போட்டு அதில ஹானர்ஸ் ரோலில் அவன் பேர் வந்திருந்தது. நான் "கங்கிரஜிலேஷன் ஆர்யான்" என்று சொன்ன போது "ஆன்டி என் பேர் எப்போ எக் ரோலில் வரும் " என்று கேட்டான்.. ஒரே சிரிப்பு போங்க !

15 comments:

இமா க்றிஸ் said...

wow! அழகிய கைவண்ணம்.

இலா said...

Thanks Imma! Try AaMy too in black ink (Use Ink pad ). I used Sharpie pen :((

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு இலா.. புலம்பல்ஸ் இல்ல.. கேட்டர் பில்லர் :)

ம்ம்ம்.. சில சமயம் குறைபட்டுக்கறோம், சில சமயம் அவங்களையே மெச்சவும் செய்யறோம்.. சோ.. நட்புகளைப் பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல..

இலா said...

எல்ஸ்! அதுவா இது :))
நல்லவேளை எறும்புன்னு பேர் போடாம இருந்தேன்.

நல்லா சொன்னீங்க போங்க!

kavisiva said...

ம்ம்ம் சொந்தக் கதை சோகக் கதை இலா!

சில நேரங்களில் மனசுக்கு பிடிச்சவங்களுக்காக நோ சொல்லாம நமக்கு இஷ்டம் இல்லேன்னாலும் இஷ்டமாகி செய்யறது சுகம்தான் இலா :)

கேட்டர்பில்லர் அழகா இருக்கு :)

vanathy said...

//அடுத்தவங்க வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயமும் தெரிஞ்சுக்குவாங்க ... ஒண்ணு ஒண்ணா தூண்டில் போடுறது //
உண்மைதான். பெரும்பாலனவர்களுக்கு இந்தப் பழக்கம் இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

புலம்பல் + கேட்டர் பில்லர் நல்லாயிருக்கு.

அழகிய கைவண்ணம்.

இலா said...

கவி! நீங்க சொல்வதும் உண்மை தான்!

வான்ஸ்! ரொம்ப பேர் அப்படி... என்ன பண்ண??!!!

குமார்ண்ணா! நன்றி!

vanathy said...

இலா, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைச்சா/ கிடைக்கும் போது எழுதுங்க.

http://vanathys.blogspot.com/2010/09/blog-post_30.html

Unknown said...

பதிவு நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

கேட்டர் பில்லர் அழகா இருக்கு ..!!

நீங்க செல்ற பல விஷயங்கள் நானே ஆச்சிரியப்பட்டதுண்டு.. இதையெல்லாம் தோண்டி துருவ ஆரம்பிச்சா 1000 வருஷம் ஆனாலும் முடியாது .. இந்த நிமிடங்களை எப்படி சந்தோஷமா கழிக்கலாமுன்னு பாருங்க . மனித வாழ்க்கை ரொம்ப கம்மி :-))

Asiya Omar said...

அருமை இலா.நான் கேட்டர்பில்லரை சொன்னேன்.

மனோ சாமிநாதன் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இலா!!

Jaleela Kamal said...

என்ன் இலா ஒரே புலப்பம்.
அப்படி கூட் உட்கார்ந்து பேசுவது போல் எழுதி இருக்கீங்க.
கேட்டர் பில்லர் ரொம்ப சூப்பர்’

Mahi said...

கேட்டர்பில்லர் அழகா இருக்குங்க இலா! "இன்னபிற"..அப்படியே வேண்டாததை ஒதுக்கிட்டு இருக்கப் பழகிக்க வேண்டியதுதான்.:) காலம் எல்லாத்தையும் சரிசெய்யும்.ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைப்பது ரொம்ப அரிது!!