Monday, January 31, 2011

தெய்வத்தை அழைத்த குழந்தை

கடந்த சனிக்கிழமை மருமகன் நிக்கிலுடன்(19 months old) கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு நுழையும் முன் நிக்கிலிடம் "நிக்கில் சாமிகிட்ட "சாமி நிக்கிலுக்கு நல்ல புத்தி கொடு.. நல்லா ஹெல்தியா இருக்கணும்.. நல்லா சாப்பிடணும்.. சொன்ன பேச்சு கேக்கணும்ன்னு வேண்டிக்கோ" என்றேன்.
கோவிலில் நுழைந்ததும் கோட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு படியேறும் போது ஒன் .. டூ... த்ரீ..ஃபோ..பை..சிக்... என்று எண்ணிக்கொண்டே படியேறினார்... மேலே சென்றதும். நேரே பிள்ளையாரிடம் சென்று "சாமீ...சாமீ....சாமீ..." எல்லாம் கும்பிட்டு முடிந்து கீழே வரும் வரை "சாமீ.. சாமீ" என்றாரே பார்க்கலாம்...

என்ன மக்கள்ஸ் என் மருமகனை உங்களுக்கு பிடிச்சிருக்கா....

14 comments:

Kurinji said...

இது தான் குழந்தை மனது.

குறிஞ்சி குடில்

சே.குமார் said...

sweet Kutty.

Lakshmi said...

இது தாங்க குழந்தை.அவங்க எதைப்பண்ணினாலும் நம்ம ரசனைக்குறியதாகவே இருக்கு.

asiya omar said...

சாமீ நிச்சயம் நிக்கிலை பார்த்துப்பார்,மருமகனை ரொம்ப பிடிச்சிருக்கு.சோ சுவீட்.

ஜெய்லானி said...

யாருக்குதான் பிடிக்காது குழந்தையின் ஒவ்வொரு செயலும் ரசனைதான்.. :-))

athira said...

ஆ... இல்ஸ்ஸ் வந்திட்டா... எடுங்க பெரீய கயிறை... கட்டத்தான்:).

இல்ஸ்ஸ் மருமகன் கோயிலுக்கு வந்ததாலதானே எங்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிச்சுப் பிச்சு தின்னவாவது ~வட~ கிடைச்சிருக்கு(ஆ..... மின்னல்மாதிரி ஜெய்யின் பாடல் காதில வருதே... திங்க திங்க ஆசை..:)) .

குட்டீஷின் ஒவ்வொரு வார்த்தையும் அழகுதான். எங்கள் மூத்தவருக்கு 10 வயது இப்பவும்.. " நானுக்கு தாங்கோ" என்றுதான் சொல்வார், நான் திருத்துவதில்லை, மழலைச் சொற்கள் நெடுகவும் கேட்கக் கிடைக்காதெல்லோ..

நிக்கில் குட்டி தங்கியூ... மாமியை இங்கு அனுப்பியதுக்கு....

athira said...

ஜெய்லானி said...
யாருக்குதான் பிடிக்காது குழந்தையின் ஒவ்வொரு செயலும் ரசனைதான்.. :-))

////
உண்மை ஜெய்..உண்மை... அதுதான் நாங்க இப்பவும் கொயந்தையாகவே இருக்கிறோம் ...கட்டிலுக்குக் கீஈஈஈஈழ:)... பூஸ் எஸ்ஸ்ஸ்... இல்ஸ்ஸ் கெதியா அரக்கி இருங்கோவன்...

GEETHA ACHAL said...

குழந்தை எதை செய்தாலும் அழகு...அனைவருக்கும் பிடித்து விட்டது...

இமா said...

சாக்லேட் சாப்பிட்டா அந்த சுவை கொஞ்ச நேரமாச்சும் நாவுல இருக்கும்ல; படி இறங்கும் வரை இருந்து இருக்கு நிகில் குட்டிக்கு. ;)

புடிச்சிருக்கு.

இலா said...

இந்த பதில்களை எல்லாம் குட்டியர் பார்த்தால் எல்லாருக்குமே ஒரு மியாவ் மியாவ் சொல்லி இருப்பார் :)

வாங்க குறிஞ்சி! ரொம்ப கியூட் இல்லையா :)

குமார்ண்ணா!!! வாங்க... ரொம்ப நாளா யார் வீட்டுக்கும் போகாம "வீட்டுபாடமே" செய்துகிட்டு இருக்கேன். வர்ரேன் சீக்கிரமா.. உங்க கதைகள் நேரில நடந்தது போல இருக்கு...

வாங்க லக்ஷ்மி ! நாம ரசிக்கறோம்ன்னு தெரிஞ்சா இன்னுமே அழகா செய்வாங்க பாருங்களேன்.. நிஜத்தில் அந்த நொடி ரொம்பவே அழகா இருக்கும் :)

வாங்க ஆசியா அக்கா! உங்க ஆசிக்கு நன்றி... இந்த முறை போனால் உங்க சார்பா ஒரு உம்மா கொடுக்கறேன் :))

ஜெய்யி! அதுக்கு என்ன கொடுத்தாலும் தகும்...

அதீஸ்! வலைப்பூவுக்கு வரத்தான் நேரமில்லை.. அங்க மூஞ்சுறு புக்கிலே பாக்கணுமே :)) நான் வரலைன்ன்னாலும் என்னோட நட்பு உங்கள சுத்தித்தான் இருக்கு....
உங்க பெரியவர் சொல்லறது ரொம்ப கியூட்.. எனக்கு என்னோட பக்கத்து வீட்டு குட்டி ஒரு பல்ப் கொடுத்துச்சு... "ஆன்டி டீச் மி டமில் வோர்ட்ஸ்" அதுக்கே நான் ஙே ஙே... முதல் கேள்வி " what is switch in tamil " அய்யகோ.. அடிச்சானே ஆப்பு... சுட்சை கேட்டு பல்பு கொடுத்திட்டானே... அவ்வ்வ்வ்...

நன்றி கீதா!!! அக்ஷதா குட்டி என்ன செய்யறாங்க??? எனக்கு நீங்க சொன்ன" மம்மி யூ ஆர் வெரி குட் .. கீப் கெஸ்ஸிங் " அந்த எபிசோட் பிடித்திருந்தது...

இமா !!!! பொடியன் நியூஸ் என்றது ஓடி வந்தீங்களோ... இப்போ வேகமா அவர் சர்கிள்.. டிராயாங்கிள்.. அக்டாகன்.. சொல்லறத கேட்டா அவ்வளவு தான்... இன்னும் ஹெக்சகன் தான் சொல்ல வரலை.... சூப்பர் கியூட்...

asiya omar said...

உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

Jaleela Kamal said...

குழந்தைகளில் செயல் மிகவும் ரசிக்க தக்கது , இலா

ஜெய்லானி said...

//உண்மை ஜெய்..உண்மை... அதுதான் நாங்க இப்பவும் கொயந்தையாகவே இருக்கிறோம் ...கட்டிலுக்குக் கீஈஈஈஈழ:)... பூஸ் எஸ்ஸ்ஸ்... இல்ஸ்ஸ் கெதியா அரக்கி இருங்கோவன்...//

கொழந்தை சைஸ் எத்தனை..பார்த்துங்க அப்புறம் சைடில வளர்ந்திடப்போறீங்க ...க்கி..க்கி...

ஜெய்லானி said...

//சாக்லேட் சாப்பிட்டா அந்த சுவை கொஞ்ச நேரமாச்சும் நாவுல இருக்கும்ல; படி இறங்கும் வரை இருந்து இருக்கு நிகில் குட்டிக்கு. ;)

புடிச்சிருக்கு.//

ஆ....மாமீஈஈஈஈ...இந்த தடவை ஸ்மைலி போடாம ஒரு பதில் :-)))