Sunday, March 27, 2011

என்ன நடந்துச்சின்னா


ரொம்ப நாளா எதுவும் செய்யாம இருந்தேனா அதனால ஒரு முடிவெடுத்தேன்.. முன்னாடியே பலருக்கும் சொல்லி இப்போ அது அங்கங்க கார்டூன் சப்ஜெக்ட்( நன்றி சசசதல அன்ட் மியா) ஆயிடுச்சா. நான் காலேசிக்கு போற விசயம் தான் :)

குடும்ப‌த்தில‌ வேற‌ ந‌ம்ம‌ள‌ வ‌ச்சி "டூட‌ன்ட் நெம்ப‌ர் 1" ப‌ட‌மெடுக்க‌ ஐடியா போட்டாங்க‌ :(

அதனால‌ ராப்ப‌க‌லா க‌ண்ணு முழிச்சி க‌ட்ட‌ங்காப்பியெல்லாம் போட்டு குடிச்சி ப‌டிச்சிட்டு இருந்தேன்...

இடைக்கிடை பிஸியா இருக்கேனா இல்லையான்னு செக் ப‌ண்ண‌ வேற‌ செய்தாங்க‌ ... யாருன்னு சொல்ல‌வே மாட்டேன் ...

ஒரு வ‌ழியா ரெண்டு பாட‌த்திலும் "பாஸ்(A) பாஸ்(A)..."

நான் பாசானா நிக்கிலுக்கு மொட்டை போட‌லாம்ன்னு நினைச்சேன் அவ‌ங்க‌ப்பா அதுக்குள்ள அவனுக்கு ச‌ம்ம‌ர் க‌ட் போட்டு அதுக்கு மொட்டையே ப‌ர‌வாயில்லைன்னு இருக்கா...அத‌னால‌ அ.கோ.மு அதீஸ் எல்லாருக்கும் ச‌ப்ளை செய்வாங்க‌ன்னு வேண்டியாச்சு...அங்க போய் கலெக்சன் போட்டுக்கோங்க மக்கள்ஸ்...

உங்க எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு தான் இருக்கேன். அப்பப்ப "அந்தமான் காதலி" கடிதம் போட்டுட்டு தான் இருக்கேன்... அதைவிட பேஸ்புக்கில ரொம்ப பிஸியா இருக்கேன். என்னோட ப்ரொபசரும் அங்க இருப்பதால்.. எதாச்சும் எக்குதப்பா சொல்ல நினைத்தால் தாய்மொழியாம் தமிழ் மொழியில சொல்லுங்க இல்லைன்னா தனி மடல் அனுப்பிடுங்க...