
என்னடா தலைப்பில பீட்டர் விட்டு பதிவு தமிழ்ல இருக்கேன்னு பாக்கறீங்களா.. மேட்டர் என்னவோ இதயத்துக்குள்ள இருந்து வருதில்ல அதான்... இன் ஆர்டிகுலேட் என்றால் ரொம்ப அறிவாளித்தனமா பேசணும்ன்னு நினைப்போம் ஆனா மனசில இருக்கும் எமோஷன் எல்லாம் "அது வந்து" போயி என்று திக்கிக்கொண்டு இருக்கும்.இல்லைன்னா அபிராமி அபிராமி ந்னு சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ரேஞ்சில சொல்லாம போன பீலிங்ஸ் தான் ஜாஸ்தி . எனக்கு பிடிச்ச டெபனிஷன் கொஞ்சம் அளுகாச்சி காவியம் தான் .. சிவாஜி சார் பாசமலர் ரேஞ்சுக்கு "மலர்ந்தும் மலராத ....."இப்படியான உறவுகள் கொடுத்த உணர்வுகள் தான் அதிகம்.
சிலருக்கு நம்மை பிடிக்கும் நமக்கு அவர்களை பிடிக்காது. சிலரைக்கண்டாலே எப்படியாவது பிரெண்ட் பிடிச்சுக்கணும் என்று தோணும் ஆனா நம்ம மனசில மட்டும் இருந்தா போதுமா... அதே போல அண்ணன் தம்பி / அக்காள் தங்கை உறவுகளில் ( இந்த சிண்டு பிடி கேஸ் இல்லை) ஒருவருக்கொருவர் பாசமும் மரியாதையும் தான் அதிகமாக இருக்கும். அண்ணனைப் பார்த்தாலே உருகுவார் ஒருவர்.. அண்ணனோ தம்பியை கண்டாலே கடுகடுப்பார். சிலர் தங்கைகளுக்கு அக்கா வார்த்தை என்றாலே வேதம்... அக்காள்களோ "எப்படி இருக்கே??? நல்லா இருக்கேன்" இப்படி ஒரு வரிப்பதில்கள் உறவாடிப்போகும்.
இது ஒரு வகை .. இவர்கள் எல்லாம் "கனி இருந்தும் காய் " பிரிவு. சிலருக்கு ரொம்ப பாசம் இருக்கும் ஆனா அவர்கள் பாசம் காட்டும் விதம் மற்றவருக்கு புரியாது.யாராவது பாரு தம்பிக்கு உன் மேல் தான் எவ்வளவு பாசம்ன்னு எடுத்துச்சொன்னாதான் விளங்கும்.
அப்படியே விளங்கிக்கொண்டாலும் சின்னவயசில பிணக்கு தீர்ந்து விளையாடியது போல இருக்க முடிவதில்லை.
வளரும் போது இருக்கும் பாசம் வளர்ந்து வலியவனாகியதும் கொஞ்சம் மெலிந்து தான் போகும்.
சொல்ல தெரியலைன்னா பரவாயில்லை கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கோங்க...
யாராயிருந்தாலும் ...
1)வாய் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்தும் போது கண்ணாடியில் உங்கள் கண்கள் சிரிக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்... லெட் யுவர் ஐஸ் ஸ்மைல்.
2)யாராவது பாசமாய் பேசினால் உடனே ஒரு கலர் கண்ணாடி கொண்டு "ஹூம் இப்ப எதுக்கு இவன் நல்லா பேசுறான்" இப்படி நினைக்க வேண்டாம்... கிவ் எவ்ரிபடி பெனிபிட் ஆஃப் டவுட்...
3)கடவுளுக்கே துதி பிடிக்கும் போது.. அவர் படைத்த மக்களுக்கா பிடிக்காது... தாராளமாய் புகழுங்கள். புகழ்ச்சி உங்கள் சுய நலத்துக்காக இருக்க வேண்டாம்... பி ஜெனெரஸ் இன் யுவர் அப்ரிசியேஷன்....
4)சரியான நேரத்துக்கு காத்திருக்க வேண்டாம்... "இன்னைக்கு உப்புமா சூப்பர்" "இந்த சர்ட் நல்லா இருக்கு" "உங்க காதணி அழகா இருக்கே"
"வெண்டர்புல்" "ஆசஃம்" "நைஸ் ஜாப்" ...
நினைவில் வைக்க "எனி டைம் இஸ் அ குட் டைம்"
5)நண்பர்களுடனோ/உறவினர்களுடனோ/குடும்பத்திலுள்ளவர்களுடனோ பகிர்ந்துகொண்ட சந்தோஷமான தருணங்களை அவர்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்... குட்டி பிள்ளையாய் இருந்தபோது செய்த குறும்புகள் யாருக்குத்தான் பிடிக்காது...
6) நன்றியால் துதி பாடுங்கள்... உங்கள் நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறேன்... உங்களோடு இருந்தபோது இனிமையாக நேரம் செலவிட்டோம்.... உங்க அம்மா கையால் சமைத்து சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறோம்...அதே சமயம் "பி கிரேஸ்புஃல் இன் யுவர் கிராட்டிடுயூட்"
இவ்வளவு நேரம் படிச்சீங்களே ரொம்ப டான்க்ஸுங்கோ!!!
இதெல்லாம் படிச்சு கொஞ்சம் மாறுங்கப்பா பாசக்கார பய புள்ளைகளா!!!