Wednesday, January 13, 2010
இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்!!
இன்ஸ்பிரேஷன் என்றால் என்ன? ஒரு செயலை செய்வதற்கான தூண்டுதல் . பொதுவாக இரண்டு வகைப்படும்.தன்முனைப்பு தூண்டுதல் மற்றும் வெளிபுற கருவிகளின் தூண்டுதல்...சின்ன குழந்தைகளை அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாராட்டி"குட் ஜாப்" "வெல் டன்" என்று சொல்லும் போது அவர்களுக்கு உங்கள் அன்பை/பாராட்டை பெற வேண்டி மேலும் நாம் விரும்பும் செயல்களை செய்வார்கள்... இதுவே வளர்ந்த பின் புறதூண்டுதல்கள் மூலம் வேறு பரிணாமத்தை அடைகிறது. பள்ளிப்பிள்ளைகளுக்குத்தான் எத்தனை சுமைகள்.. பாடத்தில முதல் மார்க்க எடுக்கணும்... டான்ஸ் கிளாசில் மற்றவரை விட ஜதி தப்பாமல் ஆடணும்... பாட்டு கிளாசில் ஸ்ருதி தவறாமல் பாடணும்...இது இல்லாமல் போட்டிகளில் பரிசு பெறணும்... விளையாட்டில முதன்மையாக வரணும்..... இப்படியாக எத்தனையோ "ணும்"கள் .. எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்...
நான் படிக்கும் காலத்திலும் இதெல்லாம் இருந்தது தான்.. ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்... சரியான பெற்றோர்/உடன் பிறந்தவர்கள்/ஆசிரிய பெருந்தகைகள் இப்படியான வழிகாட்டிகளின் உதவியால் இந்த "ப்ரஷர்" தெரியாமல் வளர்ந்தேன்... ஆனாலும் சில நேரம் ஒரு இலக்கில்லாமல் இருந்தது போல இருக்கும்....
ஒரு நாள் அந்த பிரச்சனையும் தீர்ந்தது. பள்ளி ஆண்டு விழா எப்பொழுதும் மாலையில் தான் நடக்கும்..பள்ளி ஆண்டு விழாவில் ஒரு ப்ரோக்கிராமுக்கும் அடுத்ததுக்கும் இடையில எதாவது பாட்டு போடுவாங்க. படித்தது கிருஸ்தவ பள்ளி என்பதால் ரொம்ப சினிமா பாட்டு இருக்காது.அப்போ எம்சியார் பாட்டுன்னு தெரியாது. பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் ஒரே ஸ்கூல் தான்.எல்லாருமே தரை டிக்கட் தான்.. அங்கங்க ட்யூப் லைட் இருந்த்ததால் எல்லா இடத்திலும் வெளிச்சமில்லை.அதனால அப்பப்ப தூங்கிடலாம் :)) அக்கா எழுப்பி விடுவாங்கல்ல வீட்டுக்கு போகும் போது. நல்லா தூங்கிட்டு இருந்த நான் திடீர்னு பாட்டு போட்டதும் எழுந்தேன்...
கேட்டது ஒரே வரி " மாபெரும் மேடையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்"... அப்படியே ஒரு இன்ஸ்பிரேஷன் வந்துதே பாக்கலாம்... அதுக்கு இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்... அதுவரைக்கும் பேசுவேன் ஆனா இப்ப எல்லாரும் சொல்லற மாதிரி ஓவரா பேசமாட்டேன்...என்னோட ஆங்கில மொழி திறமையை வளர்க்க இந்த பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது ....
இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...
நம் வாழ்வில் நம் வளர்ச்சியின் அளவு கோல் நாம் தான். மற்றவர்கள் ஒரு "பெஞ்ச் மார்க்" ஆக இருக்கமுடியுமே தவிர ஒரு போதும் நமது வளர்ச்சி அவர்களாக முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இலா.. அழகா எழுதறீங்க.. எனக்கும் இந்த மாதிரி அப்பப்போ இன்ஸ்பிரேஷன் தரக் கூடிய பாட்டு கேட்டது உண்டு.. எல்லாம் பாட்டு கேட்டு முடிக்கும் மட்டு தான்.. அப்புறம் பழையபடி தூங்கப் போயிட வேண்டியது :))
தங்க கட்டி இலா இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்,
என்ன செய்தீங்கன்னு சொல்லனும்.
..// ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்//
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க இலா/
இன்ஸ்ப்ரெஷன் பற்றி அருமையான பகிர்வு
இலா, இந்த இதயத்திலிருந்து தத்துவங்களெல்லாம் வருகிறதே...
இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன், வெளிச்சத்தைக் காண உதவியது...
இலா நீங்கள் சொல்வது முதல்தர உண்மை ஆனால் பலர் அறிவதில்லை. பள்ளியில் படிக்கும் போது என் அறிவியல் ஆசிரியர் சொல்வார் “Do your best, don't look at other horses”
வாழ்க வளமுடன்
வாங்க சந்தனா!!! பாட்டு எனக்கு எப்பவும் இன்ஸ்பிரேஷன்... அதனாலோ என்னவோ இப்ப வரும் பாடல்களில் அர்த்தம் தேடி புரியாம கஷ்டமா இருக்கு !!!
வாங்க ஜலீலாக்கா!!! பொங்கல் இனிமையாக கழிந்தது.. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!!!
வாங்க ஹைஷ் அங்கிள்!!!பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோர் செய்யவேண்டியது.டீச்சர்கள் அடிக்கடி சொல்வதும் இதுதான் :))
அதிரா!!! தத்துவம் எல்லாம் கடனாய் பெற்றது தான்..
நல்ல இன்ஸ்பிரேஷன்
இலாம்மா,உங்களின் இந்த வரிகள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.//இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...//
இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா.]]
நல் அவா
அது இனிதே நடக்க
எம் துவா
//எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்.. //
என்ன சொன்னாலும், நம்மையும் அறியாமல் கிச்சனையும் கொண்டுவந்துர்றோம இல்லையா இலா? ;-)
/இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்.../
ஆமாம்ப்பா..
@ ஷாதிகா ஆன்டி! வாங்க .. எண்ணமெல்லாம் செயலாக்கணும் ...
@ வாங்க ஜமால்!!! உங்க வருகைக்கு நன்றி! உங்க துவாவுக்கும் நன்றி!!!
@ ஹூசைன் அம்மா!!! நலமா??!!! கிச்சனில்லாம இருக்க முடியுமா அதுதான் ஒட்டிபிறந்த ஐடி ஆச்சே :))
பாத்திமா! ரொம்ப நன்றிங்க!!!
Post a Comment