Friday, February 26, 2010

என்னத்த படிச்சு !!!!


நான் வெறுமே பாட புத்தகங்கள படிக்கறத பத்தி சொல்லலை.. அது படிச்சு தான் ஆகணும் வேற வழி.. அது இல்லாம நான் சொல்லப்போவது வாசிக்கும் பழக்கம் பத்தி... எத்தனை பேர் பாட புத்தகங்கள் தவிர வேற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி இருக்கீங்க... ஆனால் பலர் இங்க பார்க்கிறேன் அவங்க குழந்தைகளை லைப்ரரி( நூலகம்) கூட்டிட்டு போறது... ஸ்டோரி டைம்... போறது எல்லாம் இருக்கும்...ஆனா பெற்றோர் ஒரு நல்ல புத்தகம் மருந்துக்கு கூட படிப்பதில்லை... ஒரு முறை ஒரு ஞானி( உண்மையான ஞானி இல்லை) சொன்னார் ... பெற்றோர்கள் உலகிலே சிறந்த ஹிப்போக்கிரெட்ஸ்...எதுக்கு தெரியுமா.. அவங்க குழந்தைக்கு சொல்லும் எதையும் கடைபிடிப்பதில்லை .. யாரும் என்னை அடிக்க வர வேணாம்... இப்ப படிக்கறத பத்தி மட்டும் பேசுவோம் ....

எதற்காக வாசிக்கறோம்
= பொழுது போக்குக்கு
= அறிவை விசாலப்படுத்த‌
= சொல்வளத்தை அதிகரிக்க‌
= இன்ஸ்பிரேஷனுக்கு
இப்படி பலரும் பல காரணங்களுக்கு வாசிக்கிறார்கள்... இதுக்கு பயிற்சி எல்லாம் தேவை இல்லை. எதை பற்றி வாசிக்கணும் என்று குழம்பாமல் உங்களுக்கு பிடித்தமான பிரிவு எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.லைப்ரரிக்கு போனா பல பிரிவு இருக்கும் ஃபிக்க்ஷ்ன் / நான்-பிக்க்ஷன் / பயணம்/ மொழிகள்/ வாழ்க்கை வரலாறு/ பொது அறிவு/குழந்தைகள் பகுதி என்று பல விதமா பிரிச்சு வச்சிருப்பாங்க.புதுசா வாசிக்க ஆரம்பிக்கரவங்க நேரடியா லியோ டால்ஸ்டாயின் "அஃனா கர்னீனா" இல்லை "வார் அன்ட் பீஸ்" இப்படி ரொம்ப அதிக பக்கங்களும் அதிக நேரமும் எடுக்கும் புத்தகங்களை வாசிக்க வேண்டாமே... எளிதா படிக்க கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது மறுபடியும் எதாவது படிக்கணும் என்று ஆர்வம் வரும்.

இந்த இன்டெர்னெட் யுகத்தில நியூஸ் பேப்பர் எல்லாம் கூட டிஜிட்டல் பேப்பர் ஆகுது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம்ம ஊரில நடக்கற விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும். அதே போல தான் புத்தகங்களும் . எனக்கு புத்தகம் படிப்பது ஏன் பிடிக்கும் தெரியுமா ??!!! பல நேரம் புத்தகத்தில வரும் இடங்களை கற்பனை செய்து பார்க்கும் குணம் இருக்கு... ஒரு ஊருக்கு போகாமலே அந்த ஊர்ல எப்படி சாப்பிடுவாங்க... என்ன டிரெஸ் போடுவாங்க... அவங்க பழக்க வழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.பாரிஸ் சென்றதில்லை ஆனால் லூவர் எப்படி இருக்கும் என்று தெரியும். சில நேரம் படிக்கும் போது அட நம்ம ஊர்லயும் இப்படி ஒரு பழமொழி இருக்கேன்னு தோணும்.

படிக்கும் ஆர்வம் வந்ததே என் அண்ணாவை பார்த்துதான்..அவ்ர் அதிகம் படிப்பார்.. அவரை பார்த்து ஒரு ஜே ( அது தாங்க பொறாமை) நானும் பெரிய பெரிய புக்கா படிக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வந்தது. இதுல அவர் ஒரு ஸ்பீட் ரீடிங் புத்தகம் வச்சிருந்தார் அதுல ஒரு டெக்னிக் எப்படின்னா ஒரு பாராவை புத்தகத்தை தலை கீழாக வைத்து படிக்கணும் அப்போ நேரா வாசிக்கும் போது வேகமா வாசிக்கலாம் என்று படித்தேன் :)).
ஒரு கட்டத்தில என் கூட படிச்ச ஸ்னேகிதிகள் மூலமா ஆர்வம் பெருகி அப்புறம் நானும் தேடி தேடி படிச்சேன்.. ரொம்ப படிச்சிட்டியான்னு/கிழிச்சிட்டியான்னு யாரும் கேள்வி கேக்க கூடாது. எனக்கு சில பிரிவுகள் தான் பிடிக்கும் அது ஏன் பிடிக்குது எதுக்கெல்லாம் தெரியாது. ஒரு எழுத்தாளர் பிடிச்சா அவர் எழுதிய எல்லாம் ஒரே மூச்சில படிக்கணும் அப்படி ஒரு வெறி !!!
ஒவ்வொரு கால‌ க‌ட்ட‌த்திலும் யாராவ‌து ஒருவ‌ர் என்னோட‌ ப‌டிக்கும் ஆர்வ‌த்துக்கு தீனி போடுறாங்க‌.. இப்ப‌ லேட்ட‌ஸ்ட் பிஸ்கோத்து கொடுத்த‌வ‌ர் இந்த‌‌ வ‌ய‌சில‌ ( எது இள‌ம் வ‌ய‌சு :)) கார்டியால‌ஜி/இன்டெர்னெட்ன்னு க‌ல‌க்க‌றார்... எங்க‌ அப்பா அதுக்கும் மேல‌ ஒரு ப‌டி போயி "அம்மா!!! ( நான் தான்) இந்த‌ பிராஜெக்ட் மேனேஜ்மென்ட்ல‌ எப்ப‌டி டைம் மேனேஜ்மென்ட் செய்வாங்க‌"ன்னு கேட்டு என் இமேஜை டேமேஜ் ப‌ண்ணிட்டு இருக்கார்...

கேள்வி கேட்டாலே நாங்க தான் தருமி ரேஞ்சுக்கு எஸ்ஸ்ஸ் ஆகிடுவோமில்ல...

படிக்கற பழக்கம் எல்லாம் நாமா வளர்த்துக்கொள்வது... அதுக்கு வேற எதுவுமே வேணாம் ஜஸ்ட் ஒரு புத்தகம் !!!

Tuesday, February 2, 2010

ஐடியா கூடையில் இருந்து!!!


பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம‌ பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....

முத‌லில் தோன்றிய‌து .... அக்ச‌ப்ட‌ன்ஸ் அதாவ‌து சுய‌ அங்கீகார‌ம்....சில‌ர் இருக்காங்க‌ அவ‌ங்க‌ செய்வ‌து தான் உல‌கிலே மிக‌ச்சிறந்த‌ வேலை ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஒரு 100 ப‌டிக்கும் குறைவு என்று.. இவ‌ங்க‌ள‌ சொல்லி ஒன்னுமில்ல‌.. ந‌ம‌து ச‌முதாய‌ம் இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை அதிக‌மா ஐடிய‌லைஸ் செய்வ‌து தான் இவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை... சில‌ர் இருக்காங்க‌... கொஞ்ச‌ம் த‌ன்ன‌ம்பிக்கை குறைவு.. இவ‌ர்க‌ளுக்கு எப்பொழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொல்லும் புக‌ழ் வார்த்தைக‌ள் ஊக்க‌ம் அளிக்கும்...இந்த‌ ரெண்டு பிரிவிலும் இல்லாத‌ ஒரு விஷ‌ய‌ம் என்னான்னா.. ந‌ம்ம‌ள‌ நாமே அங்கீக‌ரிக்க‌ற‌து... சில‌ர் க‌ண்ணாடி முன்னே நின்று த‌ங்க‌ளை குறை கூறிக்கொள்வார்க‌ள்... என் மூக்கு கொஞ்ச‌ம் சின்ன‌தா இருக்க‌லாம்.. க‌ண் கொஞ்ச‌ம் பெரிசா இருக்க‌லாம்ன்னு... இதெல்லாம் கூட‌ என‌க்கு ஓகே தான்.. சில‌ நேர‌ங்க‌ளில் சாதார‌ண‌மாக‌ இருக்கும் ஒருவ‌ருக்கு வெளியில் தெரியாத‌ உட‌ல் குறைபாடு இருக்கும்... ஆனா ம‌னித‌ ம‌ன‌ம்.. இல்லை இல்லை.. நான் ந‌ல்ல‌ உட‌ல் ந‌ல‌த்தோட‌ தான் இருக்கேன்னு அவ‌ங்க‌ உண்மையான‌ நிலையை ஏத்துக்க‌ மாட்டாங்க‌... சொல்ல‌ப்போனா சில‌ நேர‌ம் இந்த‌ அக்ச‌ப்ட‌ன்ஸ் வ‌ந்திட்டாலே அவ‌ர்க‌ள் வேற‌ என்ன‌ செய்ய‌லாம்.. எப்ப‌டி பூர‌ண‌ குண‌ம‌டைய‌லாம்ன்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌....

இரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி!!!!

எப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....
கடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...