Friday, February 26, 2010

என்னத்த படிச்சு !!!!


நான் வெறுமே பாட புத்தகங்கள படிக்கறத பத்தி சொல்லலை.. அது படிச்சு தான் ஆகணும் வேற வழி.. அது இல்லாம நான் சொல்லப்போவது வாசிக்கும் பழக்கம் பத்தி... எத்தனை பேர் பாட புத்தகங்கள் தவிர வேற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி இருக்கீங்க... ஆனால் பலர் இங்க பார்க்கிறேன் அவங்க குழந்தைகளை லைப்ரரி( நூலகம்) கூட்டிட்டு போறது... ஸ்டோரி டைம்... போறது எல்லாம் இருக்கும்...ஆனா பெற்றோர் ஒரு நல்ல புத்தகம் மருந்துக்கு கூட படிப்பதில்லை... ஒரு முறை ஒரு ஞானி( உண்மையான ஞானி இல்லை) சொன்னார் ... பெற்றோர்கள் உலகிலே சிறந்த ஹிப்போக்கிரெட்ஸ்...எதுக்கு தெரியுமா.. அவங்க குழந்தைக்கு சொல்லும் எதையும் கடைபிடிப்பதில்லை .. யாரும் என்னை அடிக்க வர வேணாம்... இப்ப படிக்கறத பத்தி மட்டும் பேசுவோம் ....

எதற்காக வாசிக்கறோம்
= பொழுது போக்குக்கு
= அறிவை விசாலப்படுத்த‌
= சொல்வளத்தை அதிகரிக்க‌
= இன்ஸ்பிரேஷனுக்கு
இப்படி பலரும் பல காரணங்களுக்கு வாசிக்கிறார்கள்... இதுக்கு பயிற்சி எல்லாம் தேவை இல்லை. எதை பற்றி வாசிக்கணும் என்று குழம்பாமல் உங்களுக்கு பிடித்தமான பிரிவு எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.லைப்ரரிக்கு போனா பல பிரிவு இருக்கும் ஃபிக்க்ஷ்ன் / நான்-பிக்க்ஷன் / பயணம்/ மொழிகள்/ வாழ்க்கை வரலாறு/ பொது அறிவு/குழந்தைகள் பகுதி என்று பல விதமா பிரிச்சு வச்சிருப்பாங்க.புதுசா வாசிக்க ஆரம்பிக்கரவங்க நேரடியா லியோ டால்ஸ்டாயின் "அஃனா கர்னீனா" இல்லை "வார் அன்ட் பீஸ்" இப்படி ரொம்ப அதிக பக்கங்களும் அதிக நேரமும் எடுக்கும் புத்தகங்களை வாசிக்க வேண்டாமே... எளிதா படிக்க கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது மறுபடியும் எதாவது படிக்கணும் என்று ஆர்வம் வரும்.

இந்த இன்டெர்னெட் யுகத்தில நியூஸ் பேப்பர் எல்லாம் கூட டிஜிட்டல் பேப்பர் ஆகுது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம்ம ஊரில நடக்கற விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும். அதே போல தான் புத்தகங்களும் . எனக்கு புத்தகம் படிப்பது ஏன் பிடிக்கும் தெரியுமா ??!!! பல நேரம் புத்தகத்தில வரும் இடங்களை கற்பனை செய்து பார்க்கும் குணம் இருக்கு... ஒரு ஊருக்கு போகாமலே அந்த ஊர்ல எப்படி சாப்பிடுவாங்க... என்ன டிரெஸ் போடுவாங்க... அவங்க பழக்க வழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.பாரிஸ் சென்றதில்லை ஆனால் லூவர் எப்படி இருக்கும் என்று தெரியும். சில நேரம் படிக்கும் போது அட நம்ம ஊர்லயும் இப்படி ஒரு பழமொழி இருக்கேன்னு தோணும்.

படிக்கும் ஆர்வம் வந்ததே என் அண்ணாவை பார்த்துதான்..அவ்ர் அதிகம் படிப்பார்.. அவரை பார்த்து ஒரு ஜே ( அது தாங்க பொறாமை) நானும் பெரிய பெரிய புக்கா படிக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வந்தது. இதுல அவர் ஒரு ஸ்பீட் ரீடிங் புத்தகம் வச்சிருந்தார் அதுல ஒரு டெக்னிக் எப்படின்னா ஒரு பாராவை புத்தகத்தை தலை கீழாக வைத்து படிக்கணும் அப்போ நேரா வாசிக்கும் போது வேகமா வாசிக்கலாம் என்று படித்தேன் :)).
ஒரு கட்டத்தில என் கூட படிச்ச ஸ்னேகிதிகள் மூலமா ஆர்வம் பெருகி அப்புறம் நானும் தேடி தேடி படிச்சேன்.. ரொம்ப படிச்சிட்டியான்னு/கிழிச்சிட்டியான்னு யாரும் கேள்வி கேக்க கூடாது. எனக்கு சில பிரிவுகள் தான் பிடிக்கும் அது ஏன் பிடிக்குது எதுக்கெல்லாம் தெரியாது. ஒரு எழுத்தாளர் பிடிச்சா அவர் எழுதிய எல்லாம் ஒரே மூச்சில படிக்கணும் அப்படி ஒரு வெறி !!!
ஒவ்வொரு கால‌ க‌ட்ட‌த்திலும் யாராவ‌து ஒருவ‌ர் என்னோட‌ ப‌டிக்கும் ஆர்வ‌த்துக்கு தீனி போடுறாங்க‌.. இப்ப‌ லேட்ட‌ஸ்ட் பிஸ்கோத்து கொடுத்த‌வ‌ர் இந்த‌‌ வ‌ய‌சில‌ ( எது இள‌ம் வ‌ய‌சு :)) கார்டியால‌ஜி/இன்டெர்னெட்ன்னு க‌ல‌க்க‌றார்... எங்க‌ அப்பா அதுக்கும் மேல‌ ஒரு ப‌டி போயி "அம்மா!!! ( நான் தான்) இந்த‌ பிராஜெக்ட் மேனேஜ்மென்ட்ல‌ எப்ப‌டி டைம் மேனேஜ்மென்ட் செய்வாங்க‌"ன்னு கேட்டு என் இமேஜை டேமேஜ் ப‌ண்ணிட்டு இருக்கார்...

கேள்வி கேட்டாலே நாங்க தான் தருமி ரேஞ்சுக்கு எஸ்ஸ்ஸ் ஆகிடுவோமில்ல...

படிக்கற பழக்கம் எல்லாம் நாமா வளர்த்துக்கொள்வது... அதுக்கு வேற எதுவுமே வேணாம் ஜஸ்ட் ஒரு புத்தகம் !!!

10 comments:

ஹைஷ்126 said...

எனக்கும் இந்த பழக்கம் 10 வயதில் ஆரம்பித்தது. என் அம்மா சொல்லுவாங்க “நீ செத்தா உன்னை எரிக்க விறகு வாங்க வேண்டாம்” அவ்வளவு ஆர்வம், திருமணத்திற்கு முன் வாங்கும் சம்பளத்தில் 10% புத்தகங்கள் (அது ஒரு இனிமையான காலம் அப்போது பொறியியலில் நுண்ணுவியலும், தொலை தொடர்பும் படித்த் காலம், பின் சம்பந்தம் இல்லாமல் பொழுது போக்குக்காக உளவியல் இன்னும் பல...)

வீட்டு நூலகத்திலேயே அவ்வளவு புத்தகம், தற்சமயம் ஈபுக்ஸ் 5000 க்கும் மேல்...

ம்ம்ம்ம்ம்ம்

வாழ்க வளமுடன்

ஜீனோ said...

mm...correct ila akka!! Geno is a reader too!!

Ennaththa padichu kizhiche?-nnu kettu aarum genovoda image-a damage pudaatheengo..;)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கும் பிடிக்கும் இலா.. நடுவில குறைந்தது இப்போ கூகிள் புக்ஸ் பாத்ததும் மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு.. எனக்கு பிடிச்சிருந்தா பைத்தியம் மாதிரி உக்காந்த இடத்த விட்டு அசையாம படிப்பேன்.. யாராச்சும் பேசினாக் கூட காது கேக்காது.. அப்ப மூவிஸ் அவ்வளவா பிடிக்காது, இப்போ எல்லாம் தலைகீழ்.. லைக்கிங்க் மூவிஸ் பெட்டர்..

ஜீனோ திடீர்ன்னு தமிழ் மறந்துடுச்சு! அப்டேட் ப்ளீஸ்..

அப்புறம்.. இந்த ஃபாலோயர் விட்ஜெட் ப்ளாக்ல போட்டா நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்ல??

athira said...

பதிவுகள் போடும் எல்லோருமே அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்களே... எல்லோரும் புக் படிக்கிறார்கள் எனச் சொன்னேன்...

என் காண்ட் பாக்கில் எப்பவும் 2 புத்தகங்கள் இருக்கும், எங்குபோனாலும் வெயிட் பண்ணவேண்டிவந்தால் அதோடயே பொழுது போய்விடும். இப்பவும் எம் வயதை ஒத்த நிறையப்பேர் இருக்கிறார்கள் பக்கத்தில் புக் ஏதும் இருந்தாலும் திறக்காமல்... பொழுதே போகவில்லை என அழுவார்கள்.. தொட்டில் பழக்கம்தான் எல்லாம்..

சந்து... கால்ல வீல் இருக்கு.. விரைவில் வாறேன்... ஹைஷ் அண்ணன் உங்களுக்கு 250 வயசு.இலா ஜீனோவும் புக் படிப்பாராம்.. எழும்பிநிண்டோ படுத்திருந்தோ எனக் கேட்டுச் சொல்லுவீங்களோ?

லேட்டா வந்தாலும் நல்ல தலைப்பு இலா.. நிறைய எழுத வருது பின்னர் வாறேன்... இப்போ நேரமில்லை... நான் போயிட்டுவாறேன்... பிரியாவிடை..

Asiya Omar said...

என்னத்த படிச்சு என்பதை பார்த்தவுடன்,இந்த ஆசியா படிச்சு என்னத்த கிழிச்சான்னு கேள்வி கேட்கிற உறவினர் கூட்டம் தான் நினைவிற்கு வருது.ஒரு காலத்தில் புத்தகங்கள் தான் துணை,இப்ப அவரும் பிள்ளைகளும் துணை.இப்படி போவுது வாழ்க்கை.சரி இலாவிற்காக் புத்தகப்பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்.

ஸாதிகா said...

ஒரு காலத்தில் புத்தகப்புழுஆக் இருந்தேன்.ஊரில் ஒரு அறையையே புத்தகம அடுக்கிவைக்கும் இடமாக வைத்து இருந்தேன்.இப்பொழுது புத்தகத்தைத்திறந்தாலே தூக்கம் வருகிறது இலா.இதற்கு ஏதாவது தீர்வை அடுத்த பதிவில் போடுங்களேன்.

இலா said...

ஆஹா.. வந்த எல்லாருமே படிப்பேன்னு சொல்லிட்டாங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...
ஹைஷ் அங்கிள்!!! Hats off to you!!!

ஜீனோ!!! படிப்பியா எப்படி ??!!! யாரோ இப்படி கேள்வி எல்லாம் கேப்பாங்க?? ப‌தில் ??

சந்தனா!!! நானும் அப்படியே .. பக்கத்தில இடி விழுந்தாலும் தடி விழுந்த மாதிரி நகர்ந்து உக்காந்து படிப்பேன் :))

அதிரா!!! அதுதான் தெரியுமே "கை" பிரச்சனை.. வாங்க மறுபடியும்...


ஆசியா அக்கா!!! சீக்கிர‌ம் புக் கிள‌ப்ல‌ சேருங்க‌... ப‌டித்த‌ ப‌டிப்பு என்றும் வீணாகாது...

ஸாதிகா ஆன்டி!!! என‌க்கும் இடையில் விட்ட‌தால் இப்ப‌ குடும்ப‌மா ஒரு வ‌ருடத்துக்கு குறைந்த‌து 50 புத்த‌க‌ம் ப‌டிக்க‌ணும் என்று ஒரு குறிக்கோள் வ‌ச்சு இருக்கோம்... ரெண்டு பேரும் ஒரே புத்த்க‌ம் ஒரே நேர‌த்தில‌ வாசிப்ப‌தில்லை... ரொம்ப‌ பிடிச்சா ம‌ட்டும் தான் அடுத்த‌வ‌ர் சொல்லும் ரெக்க‌மென்டேஷ‌ன் இல்லைன்னா அவ‌ர‌வ‌ர் செல‌க்ஷ‌ன் ம‌ட்டும்...

Jaleela Kamal said...

ஆமாம் இலா முன்பு இரவில் அரைமணி நேரம் ஒதுக்கி ஏதாவது புக் படித்து விட்டு தான் தூங்குவது ஆனால் இபப் புக்க எடுத்தாலே தூக்கம் தான் வருது,

பார்க்கிற புக்கெல்லாம் வாங்கி ஷெல்ப் நிறைந்தது தான் மிச்சம்,

இப்ப ஹனீப் தினம் இரவில் படிக்கிறார்,

kavisiva said...

ஆஹா நம்மைப்போல இங்க பலர் இருக்காங்களே! எனக்கும் புத்தகம் எடுத்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்கும் பழக்கம் கிடையாது. ஒரே ஒரு கண்டிஷன் எனக்குப் பிடித்த எதேனும் விஷயத்தைப் பற்றியதாக அது இருக்க வேண்டும். முக்கியமாக human anatomy மற்றும் pathology பற்றிய புத்தகங்கள் மிக மிக பிடிக்கும்.

இலா said...

வாங்க ஜலீலாக்கா!!! நல்ல பழக்கம்... என் ப்ரெண்ட் படிக்கறார் இல்லையா... வெரி குட்!!!

வாங்க கவி!!! நீங்களுமா... எங்க அம்மா சொல்வாங்க புக் கிடைச்சிட்டா போது சாப்பாடு தண்ணி எதுவுமே வேண்டாம் ...