இவருக்காக தனியா ஒரு பதிவு போட்டே ஆகணும்.. ஏன்னா தினம் ஊருக்கு போன் செய்தா லொக்கு லொக்குன்னு இருமி "இல்லம்மா கொஞ்சம் சளி அதோட ஜுரம்" என்று சொல்லும் அம்மா கூட... இன்னைக்கு சின்ன கருப்பன் என்ன பண்ணான் தெரியுமா என்று ஆரம்பிச்சா அது ஒரு 10 நிமிஷம் நான் ஸ்டாப்பா பேசுவாங்க... இவருக்கு சின்ன கருப்பன் என்று எதுக்கு பேர் வந்தததுன்னு தெரியாது... இவங்க அம்மா இவனை பெற்றதும் இவர் இருந்த கருப்புக்கு பக்கத்து வீட்டு உஷா ஆன்டி வச்ச பேர் சின்ன கருப்பன்...
மக்கள் எல்லாம் சோஃபால உட்கார்வாங்களோ இல்லையோ இவருக்கு தனியிடம் தான்.. அவர் வந்தா எங்க அப்பாவே நகர்ந்து இடம் கொடுப்பார்... பயமில்லை... ஒரு பாசம் தான்.. பிறந்தது முதலே எங்க வீட்டை சுத்தி வரும் இவர் ஒரு அழகிய பூனைகுட்டி !!!
ஊருக்கு போன் செய்தா ஒரு 5 நிமிஷமாவது சின்ன கருப்பன் அப்டேட் இல்லாம இருக்காது...
போன வார டயலாக்:
அம்மா: டேய் ! என்னடா வெறும் பிரெட்டா தர்ரே அவனுக்கு...
சாப்பிடமாட்டான்ன்டா.. கொஞ்சம் பாலும் சேத்து ஊத்து...
...{என் டயலாக்: அம்மா இது உங்களுக்கே ஓவரா இல்லை :(( }
ரொம்ப வெக்கையா இருக்கு கருப்பன் கிச்சன் சிங்க்ல இருக்கான் :))
என் டயலாக் : அதுக்கென்ன ஏசி ஆன் பண்ணுங்க :))
உஷா ஆன்டி: அவனுக்கு பால் சோறு வைக்கறேன்ன்... இல்லன்னா கத்திட்டே இருப்பான்...
என் டயலாக்: ஆன்டி அங்க பாருங்க உங்க் சின்ன பையன் 15 நிமிஷமா சாப்பாடு கேக்கறான் :))
தம்பி: டேய் ஆனந்தூ!!! ராகம் பேக்கிரில போயி ஒரு 4 இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா.. கருப்பன் புளி சாதம் சாப்பிட மாட்டான்...
என் டயலாக்: டேய் பெரிய கருப்பூ!!! எனக்கு பரோட்டா வாங்க ஆள் அனுப்புன்னு சொன்னா வேலை இருக்கு .. இப்ப உனக்கு ஆள் இருக்கா :((
அப்பா: வாடா.. இந்தா பிஸ்கட்டு.... ஹ ஹ ஹ.. இல்லம்மா அவனுக்கு பிஸ்கட்டு ரொம்ப பிடிக்கும்....
என் டயலாக்: அப்பா எப்பல இருந்து இப்படி :))
அம்மா: நேத்து கூட ராஜேஷ் கருப்பன சுத்தி சுத்தி போட்டோ எடுத்தான்...
என் டயலாக்: ஹ்ம்ம்.. நானும் தான் ஐ ஏ பி போயி போட்டோ பிடிச்சேன் அளகா.. 60 ரூவாய்க்கு 20 போட்டோ குடுத்தானுங்க.. ஒருத்தனாச்சும் மருந்துக்கும் அக்கா உங்க போட்டோ குடுங்கன்னு கேட்டாங்களா :((
பின் குறிப்பு : என் டயலாக் எல்லாம் என் மனசில :))
எனக்கு பிடிக்கல பிடிக்கல.. இது வரை எல்லாருக்கும் செல்லமாய் இருந்த எனக்கு இப்படி ஒரு போட்டி!!
எப்படியோ எல்லாரும் சின்ன கருப்பனோட என்சாய் பண்ணுறாங்க.. அவங்களுக்கும் ஒரு பொழுது போக்கு!!!
17 comments:
ஆகா இலா இப்பதான் தெரியுது ஏன் இத்தனை கான்ஃப்ரென்ஸ் காலுன்னு :) அந்த கொடுமை தாங்காமல் தான் ராத்திரி வீராவை பட்டினி போட்டுட்டு (நான் சாப்பாட்டை சொன்னேன் ;)) நெட்டுல சின்னகருப்பன் உங்களை புகையவைச்சுட்டானா ?
March 15, 2010 12:21 AM
இலா... உங்கட போஸ்ட்டுகளுக்குள்ளேயே எனக்குப் பிடிச்சது இந்த “சின்ன கறுப்பன்” தான். டயலாக் எல்லாம் சூப்பரா இருக்கு. எனக்கே பொர்...அண்மையா இருக்கு.
ஊசிக்குறிப்பு:
அந்த கொடுமை தாங்காமல் தான் ராத்திரி வீராவை பட்டினி போட்டுட்டு (நான் சாப்பாட்டை சொன்னேன் ;)) //// அஆ........... நான் எல்லோரையும் முன்னேறவச்சுட்டேஏஏஏன்.... நான் பூஸைச் சொன்னேன்.
நல்ல போஸ்டிங்.
நல்ல 'பின்ஸ்'. ;)))
ஹா...ஹா..ஹா..ஜீனோவுக்கு போட்டியாக ஒரு சின்னக் கருப்பன். ம்ம்..ம்ம்..நல்லது,நல்லது!Grrr...rrr...rr
நீங்க சொல்லவே இல்லையே இலாக்கா? /ஐ ஏ பி போயி போட்டோ பிடிச்சேன் அளகா..ஒருத்தனாச்சும் மருந்துக்கும் அக்கா உங்க போட்டோ குடுங்கன்னு கேட்டாங்களா :((/ இப்பம் தான் ஜீனோக்கு தெர்யும். நீங்க ப்ளீஸ், geeno-------.com எனும் ஐடிக்கு உங்கட அளகான போட்டோஸ்-ஐ அனுப்பிக் குடுங்கோ..
நல்ல பதிவு இலா.
அது சரி, நான் இப்ப தான் சின்னகுயில் அதிரா பாடின பாட்டை பார்த்ததும் ஒடோடி வந்துவிட்டேன் இங்கு. என்ன இலா உங்களுக்கே பயமமா? என்னால நம்பவே முடியல்லை. சரி எதுக்கும் உஷாராவே இருங்க. பக்கத்தில் நம்மவர்கள் யாராவது இருக்காங்களோ இலா.
இலா சின்னக்கருப்பனால ரொம்ப நொந்து போய்ருக்கீங்களோ?!
உங்களுக்காக நான் ஒரு விருது வச்சிருக்கேன் வாங்க வந்து வாங்கிக்கோங்க
http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html
இலா,உங்களுக்கு ஒரு அவார்ட் தந்திருக்கிறேன்,என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.
இலா குட்டிக்கு மலர் விருது கொடுக்கலாம் வந்தால், இங்கு ஏற்கனவே இரண்டு விருது காத்து கொண்டு இருக்கு போல.
சின்ன கருபப்ன் பேர் நல்லா இருக்கு இலா>
டயலாக்கும் சூப்பர்
உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.
இலா எங்கே போயிட்டீங்க? சின்னக்கருப்பு பாட் ரூ வை ஆரம்பியுங்கோ.... தொடராக்கிப் போட்டாலும் சூப்பரப்பூ...
ப்ளூ க்ராஸ் பதிவா... ரைட்டு...
good one ilaa :)) u could have posted his photo :)
where are u?
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் , இலா
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இலா&வீரா இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
நல்ல பதிவு இலா.
Post a Comment