Tuesday, August 24, 2010
ஒரே ஒரு முறை
இது ஏன்? நாம எல்லாரும் வாழ்க்கையில் ஒரு முறை இல்லை.. பலமுறை இந்த இடத்தில இருப்போம்.
கடவுளே இந்த ஒரே ஒரு முறை என்னை காப்பாத்திட்டா இனிமேல் நான் எல்லாமே சரியா செய்வேன்...
இந்த ஒரே ஒரு முறை அருணா மிஸ் ( அறிவியல் 10 ஆம் வகுப்பு) கிட்ட அடி வாங்காம காப்பாத்திட்டா உனக்கு 100 தேங்காய்.. இல்லை இல்லை ஒரு தேங்காய் உடைக்கிறேன்...
இந்த ஒரே ஒரு முறை எலக்ரிகல் லேபில் முருக்ஸ் சார் என்னோட லேப் ரெக்கார்டை தூக்கி லேபுக்கு வெளியே போடலைன்னா அடுத்த வாரம் எல்லாம் சரியா முதல் நாளே தயார் செய்வேன்...
இந்த ஒரே ஒரு முறை அந்த ஆப்பரேஷன் ரிசர்ச் பாடத்தில் அசைன்மென்ட்டுக்கு பாஸ்மார்க்குக்கும் மேல வரணும்... வந்த அடுத்த செம்ல இருந்து எப்படியாவது நல்லா படிப்பேன்...
இந்த ஒரே ஒரு முறை எப்படியாவது அந்த சிடுமூஞ்சி மேனேஜரிடம் இருந்து தப்பிக்கணும்...
பல நேரம் திங்கள் கிழமைகளில் மட்டும் இந்த "கடவுளே ஒரே ஒரு முறை..." மன்றாடல் நடக்கும்...
கடவுள் மட்டும் என்ன சளைச்சவரா?? இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கன்னு .. அதிலயும் குலுக்கல் முறையில் யாரையாவது காப்பாத்துவாரு...
மக்கள்ஸ் அதுக்கும் மேல.. அவங்களும் விடாக்கண்டன்ல கொடக்கண்டனா மறுக்கா அதே பல்லவிய பாடிகிட்டு திரியுவாங்க...
கொஞ்சம் கடலோரமா இருந்தா உப்பு காத்து கீத்து பட்டு(அடிச்சி) திருந்தினா உண்டு.. இல்லன்னா நாங்க கஜினி ( சூர்யா படம் கஜினி இல்லீங்க).. இது 7 ஆம் வகுப்பில படிச்ச கஜினி முகம்மது ரேஞ்சுக்கு முயற்சியோ முயற்சி செய்வோம் அதே பழைய தவறோட.. அப்புறம் எப்படி காரியத்தில வெற்றி ஆகறது....
இந்த பதிவில ஒரு மாரல் ஆஃப் த கதையும் கிடையாது...
ஏன் ஒரு நிகழ்வில இருந்து தப்பறோம்.. இல்லை ஏன் நடக்குதுன்னு நமக்கே தெரியாது.. இதெல்லாம் தெரிஞ்சிட்டா அவ்வளவு தாங்க " நானே கடவுள்"
சரி சரி சொல்ல வந்தது சரியா சொல்ல முடியலை..
ஆங்கிலத்தில் சொல்லறேன் :
If I were to know all the answers to everything then I would be God
பி.கு: படம் சுட்டது தான்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
ஐ வட... இட்லி, சட்னி, பிட்ஷா எல்லாமே எனக்குத்தேஏஏஏஏஏன்:)
நல்லாயிருக்கே...!
என்னவோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது ஆனா புரியல ..
//இந்த பதிவில ஒரு மாரல் ஆஃப் த கதையும் கிடையாது... //
யார் சொன்னது இல்லன்னு மயில் தூங்கி முழுச்சிருக்கு அப்புறம் என்ன ..!! இதுவே பெரிய விஷயமாச்சே ...
எனக்கு ஒன்னு மட்டும் சொல்லிடுங்க .. படம் போட வேற படமா கிடைக்கல...அட்லீஸ்ட் மயில் குட்டி படமாவது போடவேனாம் ..அம்புட்டு கொழப்பமா.. ஹி..ஹி.. இதுல வேற இந்த கடையில் திருடியதுன்னு நல்ல மொத்தமா வேற போட்டிருக்கீங்க அவ்வ்வ்....
(((இதை டைப் பண்ண எனக்கே சிரிப்பு தாங்கல ஹா..ஹா... க்கி..க்கி...))
யார் சொன்னது இல்லன்னு மயில் தூங்கி முழுச்சிருக்கு அப்புறம் என்ன ..!! இதுவே பெரிய விஷயமாச்சே .../// ஜெய், மயில் முழிச்சது மட்டுமில்லை.... ஆறாவது முட்டையும் போட்டிடிச்சி... ஆ... நான் கரெக்ட்டா எண்ணிட்டேன்ன்ன்ன்ன்.
ஆகா இலா நான் கூட மயில் குட்டி நர்சரிக்கு போய் படிச்சுட்டு வந்து பதிவு போட இரண்டு வருஷமாவது ஆகும் என நினைதேன்.
அருணா மிஸ் வாழ்க அருணா மிஸ் வாழ்க ...அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி & அங்கிள் உதவமாட்டார்கள்.
அந்த பயத்தில மயில் குட்டியும் சீக்கிரம் பாஷை கற்று கொண்டு பதிவும் போட்டு விட்டது.
வாழ்க வளமுடன்
;))
//அருணா மிஸ் வாழ்க ...அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி & அங்கிள் உதவமாட்டார்கள்.//
+++
//இமா said... ;))// ஆன்ரியோட ஸ்மைலி கூட உதவாது :)))))
ஆரது! தூங்கிக் கொண்டு இருக்கிற ஆமையைத் தட்டி எழுப்புறது!!
//ஆரது! தூங்கிக் கொண்டு இருக்கிற ஆமையைத் தட்டி எழுப்புறது!! //
ஹா..:-))))))))))))))))))
அதீஸ்! வாங்க! இன்னைக்கு கொஞ்சம் நேரமிருப்பதால் பிரியாணி ( அ.கோ.மு உடன் :))
குமார் அண்ணா! உங்க வருகைக்கு நன்றி!
ஜெய்! என்னாது புரியலையா.. எந்த வரில டவுட்டு சொல்லுங்க "விளக்கிடறேன்" :))
நீங்க மயிலை ரொம்ப தப்பா எடை போட்டுட்டிங்க.. மயில் எப்போதும் யாரும் எதிர்பார்க்காததை தான் செய்யும் :)) எ.கா: கொத்துவது :))
இந்த படம் போட்டு எல்லாரையும் குழப்பத்தான்... எனக்கே சிரிப்பா வரும் இந்த படம் பார்த்து...
அதீஸ்! வாங்க... அப்படி போடுங்க.. கணக்கில நீங்க கெட்டி போல...
ஹைஷ் அங்கிள்!
//மயில் குட்டி நர்சரிக்கு போய் படிச்சுட்டு வந்து பதிவு போட இரண்டு வருஷமாவது ஆகும் என நினைதேன்.
அது தான் இருக்கவே இருக்கே ம.பொ.ர பூட் கேம்ஃப் :))
இமா!
ஸ்மைலி பேக் அட் யூ :)))
ஹைஷ் அங்கிள்!
இமா எல்லாம் அடிக்காத ரீச்சரா இருப்பாங்கோ... நாங்கல்லாம் படிக்கும் போது தண்ட மாருதம் தான் சரியா படிக்கலைன்னா....
/இந்த ஒரே ஒரு முறை அந்த ஆப்பரேஷன் ரிசர்ச் பாடத்தில் அசைன்மென்ட்டுக்கு பாஸ்மார்க்குக்கும் மேல வரணும்... வந்த அடுத்த செம்ல இருந்து எப்படியாவது நல்லா படிப்பேன்.../கிக்,கிக்,கி!!அம்பூஊஊட்டு கஷ்டமா உந்த ஆபரேஷன்ஸ் ரிசர்ச்சு? கி,கி,கீ!
சிம்ப்ளக்ஸூ..அட்வான்ஸ் சிம்ப்ளக்ஸூ..ட்ரான்ஸ்போர்ட்டேஷன்,நெட்வொர்க்கு..ஹிஹிஹிஹி!
நல்லாயிருக்கு இலா.. நானும் செஞ்சிருக்கேன்.. இப்போ ஒரே ஒரு வாட்டி மட்டும் சொல்றதில்ல :)
இப்படி இந்த ஒரே ஒரு வாட்டி மட்டும் இல்லாம எப்பவுமே அடிக்கடி பதிவு போடுங்க
நான் சொன்னது ஏதாச்சும் உங்களுக்கு புரிஞ்சுதா?! ஏன்னா எனக்கு புரியல :(
//இமா said...
ஆரது! தூங்கிக் கொண்டு இருக்கிற ஆமையைத் தட்டி எழுப்புறது!!// என்னா இது கதையவே மாத்துறீங்க மொப்பிதானே மரத்தடியில் தூங்கும் ஆமை ரேஸை தொடர்ந்து கொண்டுதானே இருக்கும்:))))
பி.கு:தூங்காத ஆமையை தட்ட முடியும் ஆனால் எப்பூடி எழுப்ப முடியும்???
Post a Comment