Wednesday, September 8, 2010
இலுப்பை பூவும் இன்ஸ்டன்ட் காப்பியும் !
இப்ப நாம் பார்க்கும் எல்லாருக்குமே எல்லாம் உடனே நடக்கணும். குழந்தை முதல் முதியவர் வரை இதே கதை தான்... குழந்தை பிறந்ததுமே படிச்சிடணும்.. உடனே ஸ்கூலுக்கு போயி அங்க ஃப்ர்ஸ்ட் ரேங் எடுத்து.. காலேஜிக்கு போயி.. கேம்பஸிலே வேலை கிடைச்சி....சொல்லற /விரும்பற பொண்ணை/பையனை கல்யாணம் பண்ணி... குழந்தை பெற்று.. இந்த வாழ்க்கை சுழற்சி மறுபடியும் அதே பாதையில் தான் தொடருது...
இங்க யாருக்கும் நின்னு நிதனமா எதையும் அனுபவிக்க முடியலை.. அனுபவிக்கவும் மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க....ஏன்??!!! எல்லாமே உடனுக்குடன் நடக்க தொழில்நுட்பம்( டெக்னாலஜி) உதவுது. இப்படி உடனுக்குடன் கிடைப்பதாலோ இல்லை அந்த எதிர்பார்ப்பு இருப்பதாலோ என்னவோ மக்களுக்கு மனோதிடம் குறைந்து வருதோன்னு தோணுது.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. எல்லாமே உடனே நடக்கணும்ன்னா நீங்க மத்தவங்களுக்கு/உலகத்துக்கு என்ன செய்தீங்க அதாவது... என்டைடில்மென்ட் என்று ஒரு வார்த்தை இருக்கு ( கேள்வி ஆங்கிலத்தில்: What did I do to deserve this good? )
எதுவுமே எளிதா கிடைத்தால் அது நமக்கு சரியானது தானா என்றும் யாரும் யோசிப்பதில்லை. கடின உழைப்பும் காத்திருத்தலும் இல்லாமல் கிடைக்கும் பொருளின் அருமையை யாரும் உணர்வதில்லை.
15 வருஷம் சாப்பிட்ட நெய் தோசையின் தாக்கத்தை சில மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றுகிறார்கள். ஆரோக்கியமா வாழ்வது ஒரே நாளில் வருவதில்லை இல்லையா??!! சின்ன சின்ன பழக்கங்கள் பெரிய பலனை அளிக்கும் என்பதை நம்புவதில்லை யாரும். என்னையே எடுத்துக்கொள்ளுங்க... சில வருஷங்களுக்கு முன் மருத்துவரிடம் சென்றபோது "ஆரோக்கியமா இருக்க மருந்து கொடுங்க" என்று கேட்டேன்... டாக்டர் தாத்தா "சமச்சீரான உணவு முறையும் மிதமான உடற்பயிற்சியும்" என்று பிரிஸ்கிரிப்ஷன் பேடில் எழுதினார் .
என்னைப் பொறுத்தவரை அணுவளவேனும் முயற்சி செய்யணும். முயற்சிக்கு ஏற்ற கூலியை எதிர்பார்க்கும் மனநிலையை கொண்டு வந்தால் எல்லாம் அழகாக இருக்கும். என்ன தான் தொழில் நுட்ப முன்னேற்றம் நாம் நினைத்ததை அந்த எண்ணம் முடியும் முன் கிடைக்க செய்யுதாலும் , ஒரே ஒரு பழைய விசயம் மாறாது.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்"
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
உங்கள் எண்ணங்களில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது இலா! நான் இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கிறது :)
வாங்க கவி! கீரை பஃப்ஸும் கொஞ்சமா ஆரஞ்சு ஜூசும் எடுங்க...
//எண்ணங்களில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது //
நன்றி கவி ! போற இடம் தூரமில்லை !
கரெக்டா சொல்லியிருக்கிங்க இலா.
இப்ப இருக்கிற நூற்றாண்டில் எல்லாமே நொடி பொழுதில் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலும் மேலும் கூடிகிட்டே போகுது.
//நல்ல முதிர்ச்சி தெரிகிறது இலா!//
இலா கவிதா என்ன சொல்ல வராங்க என்று புரியுதா?? நல்லா வயசாயிடுச்சாம் உங்களுக்குதான் :)
என்ன மூச்சு பயிற்சி ஓவரா செய்ய்து திடீர் ஞானம் வருதோ!!!!
வாங்க விஜி சேச்சி! நேரம் கிடைக்கும் போது உங்களை பத்தி எழுதுங்க வலையுலகில் சேச்சி!
வாங்க ஹைஷ் அங்கிள்! நான் எவ்வளவு மெதுவா பூஸ் மாதிரி ( ஸ்டில் மிஸ்ஸிங் பூஸ்) மெதுவா அடியெடுத்து அந்த கேள்விக்கு நடிகை வயசை கேட்ட மாதிரி பதில் சொன்னேன்.. ஹூம் விட மாட்டிங்களே...இனி லேயர் லேயரா பிரியாணியும் அ.கோ.முவும் சாப்பிட்டு வருவார் இதே கேள்விக்கு ஒரு சந்தேகம் கேட்டுகிட்டு...
//என்ன மூச்சு பயிற்சி ஓவரா செய்ய்து திடீர் ஞானம் வருதோ!!!!//
அதான் சொன்னேனே மயிலை ம.பொ.ர பூட் காம்ஃப் அனுப்பி வைத்ததால்...
//எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. எல்லாமே உடனே நடக்கணும்ன்னா நீங்க மத்தவங்களுக்கு/உலகத்துக்கு என்ன செய்தீங்க அதாவது... என்டைடில்மென்ட் என்று ஒரு வார்த்தை இருக்கு ( கேள்வி ஆங்கிலத்தில்: What did I do to deserve this good? )//
ஆம் காலையில் இருந்து உ.ம் மட்டுமே(காசு நீங்கள் கொடுத்தாலும்)
1. காலை உணவின் உட்பொருட்கள் உற்பத்தியில் உங்கள் பங்கு என்ன?
2. நீங்கள் அணிந்து இருக்கும் ஆடைகளின், உற்பத்தி, வடிவமைப்பில் உங்கள் பங்கு என்ன?
3. நீங்கள் வசிக்கும் வீடு கட்ட உங்களின் பங்கு என்ன?
4. நீங்கள் உபயோகப்படுத்தும் வாகனம், ரோடு நீங்கள் போட்டதா? ஆனால் எல்லோரும் கூச்சம் இல்லாமல் நம்ம தாத்த போட்ட ரோடு போல் உபயோக படுத்துகிறோமே.
இவை அனைத்துமே அடுத்தவரின் உழைப்பில் வந்தது. இந்தியாவில் அந்த காலத்தில் ஆதிவாசிகளும், நாடோடிகளும் குறிப்பாக ஆந்திராவை சேர்ந்தவர்கள் ரோடு போட்டுக் கொண்டு அதன் அருகிலேயே குடும்பத்தையும் நடத்தி மடிந்து இருக்கிறார்கள்.
அந்த காலத்தில் பண்டம் மாற்றும் முறை இருந்த போது ஏதும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த பணம் என ஒன்று வந்த உடன் அதனுடனே ”லாபம் @ டெவில்” என்ற ஒன்றும் கூடவே வந்து விட்டது. அது லாபம் என்பதே அடுத்தவரின் உழைப்பை, இரத்ததை அட்டை போல் உரிஞ்சுவதாகும்.
இன்னும் ஒன்று அந்த காலத்தில் ஃப்ளஷ் அவுட் வசதியுடன் கழிவறைகள் கிடையாது, அப்போது அந்த காலத்து மாமன்னர்களும், மகா ராணிகளுக்கும் இல்லாத வசதி நமக்கு இந்நாளில் கிடைத்து இருக்கிறதே அதை பற்றி ஒரு நிமிடம் யோசித்து இருப்போமா? அதில் ஏதாவது கோளாறு என்றால் அதை சீர் செய்யவரும் தொழிலாளியை சமூகம் எப்படி நடத்துகிறது.
Our society is without any gratitude for their blessing, it is very sad to say when their is no gratitude, soon GOD will withdraw all of them.
அதனால் நமக்கு இந்த சமூகத்தினாரல் கிடைக்கும் வசதிகளுக்கு நம் எண்ணம், சொல் செயலால் திருப்பி தரவேண்டும் இல்லையேல் கடனாளிதான்.
இலா பயப்பட வேண்டாம் எப்படி நம் பூமிக்கு: பார்வதி வரைந்த சித்திரத்தை சிவன் உயிர் கொடுத்து “சித்திரக்குப்தன்” ஆக்கி நம் வரவு செலவு வங்கி கணக்கராக்கினாரோ அதுபோலவே...
எழு பூமி ஏழு சிவன், எழு சித்திரகுப்தனுக்கு ஒரு பாஸ் “லீபிகா-Leepika" இருக்கார்ரே அவர் டெஸ்ட் ஆடிட் பார்த்துக்குவார் நாம் கவலையை மறந்து நம்மால் முடியாவிட்டாலும் அடுத்தவருக்கு துன்பம வராமல் வாழ பழகிக் கொள்வோம்.
அந்த படத்தில் நீலகலர் பாக்ஸர், கருப்பு ரீசர்ட்டுடன் ஓடுவது வீரா தம்பியா???
அப்போ தண்ணிய விட்டு வெகு தூரத்தில் நின்னு அவரை போட்டோ எடுத்தது இலாவா???
இலுப்பை பூ போட்டு நிஜமாவே காப்பி குடித்து இருக்கிறீர்களா?
//அப்போ தண்ணிய விட்டு வெகு தூரத்தில் நின்னு அவரை போட்டோ எடுத்தது இலாவா???// இது பூங்கதிர் தேசத்து “தண்ணீர்” அல்ல சும்மா கடல் தண்ணிதான்!
வலைபூவின் மேக்கப் நல்லா போட்டு இருக்கீங்க:)
ஹைஷ் அண்ணே! பாவம் மயில்குட்டி, ஏற்கனவே சீரியஸா திங்க் பண்ணிட்டு இருக்கு. இப்பிடி பண்ணப்படாது நீங்க. பிறகு குட்டி போடாம விட்டுரும். ;)
@@ ஹைஷ் அங்கிள்! வெரி நைஸ். சொல்வதெல்லாம் உண்மை.
அங்க ஓடறது யாரோ அங்கிள்! தெரியாத முகம்.. இங்கயுமே தெரியல பாருங்க.. ரன்னர்ஸ் வேர்ல்ட் மேகசினுக்கு அனுப்ப நினைத்தேன். இதை எடுத்து வருஷமாச்சு ! வீரா போன பதிவில காய் வாங்கிட்டு இருக்காரே பாக்கல??!!
//இலுப்பை பூ போட்டு நிஜமாவே காப்பி குடித்து இருக்கிறீர்களா?//
காப்பி குடிச்சேனான்னு நினைவில்லை... ஆனா அத்தையவங்க வீட்டில நல்ல டைப்.. நான் மட்டும் அவங்க வீட்டில தங்கி இருந்தேன் ஒரு முறை...
சோழன்மாதேவி கிராமம். 6 அல்லது 7 ஆம் வகுப்பு விடுமுறையில்.
//இது பூங்கதிர் தேசத்து “தண்ணீர்”// தெரியல அங்கிள்
இது பாஸ்டன் ரிவேர்ரா பீச் :)
//வலைபூவின் மேக்கப் நல்லா போட்டு இருக்கீங்க:)//
நன்றி !
ஹய் இமா! இந்த பதிவை போட்டு கொஞ்ச நேரத்திலே பொதுக்குழு கூட்டி எனக்கு கொஞ்சம் வேலைய கொடுத்திட்டார் :))
ஆனாலும் வருவேன் :))
//"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" //
நோ கமெண்டஸ்
நா கேக்க வேண்டியதை நமது அண்ணாதே கேட்டு விட்டதால் அப்படியே வழி மொழிகிறேன் ..நன்றி..நன்றி...நன்றி..( சோடா பிளிஸ்..)
கரெக்டா சொல்லியிருக்கிங்க இலா.
இலா, சரியாச் சொன்னீங்க. இந்த அவசர உலகத்தில் நினைத்த உடன் எல்லாமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நல்ல பதிவு.
மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க இலா
//இங்க யாருக்கும் நின்னு நிதனமா எதையும் அனுபவிக்க முடியலை//
என்ன செய்வது தேடும் முன் கிடைத்து விடுகிறது/
//அணுவளவேனும் முயற்சி செய்யணும். முயற்சிக்கு ஏற்ற கூலியை எதிர்பார்க்கும் மனநிலையை கொண்டு வந்தால் எல்லாம் அழகாக இருக்கும்.// பொன்னெழுத்துக்களில் பொறிக்கபடவேண்டிய வரிகள் இலா!
இலா.. பெருசா சிந்திக்கிறீங்க... எழுதறீங்க.. ஆனா என்ன எழுதினாலும், எங்கள மாதிரி ஆட்கள் திருந்தமாட்டோம்.. :))
ஹைஸ் சொன்னதும் நல்லாயிருக்கு..
Post a Comment