"ஏஏ நடுபுள்ளேஏஏ! செத்த நாழி இங்க வா! கொஞ்சம் இந்த தொவரம்பருப்ப சுத்தம் பண்ணு ! அத முடிச்சிட்டு அப்படியே நெல்லை குத்திட்டின்னா ராவைக்கு சோறாக்கிடலாம் " என்ற அண்ணியின் முகத்தை பார்த்தாள் தேவகி.
குமாரசாமிக்கு பிறந்த ஏழு பேரில் அவள் வரிசை முறைப்படி நான்காவது. அண்ணன்கள் ரெண்டு பேருக்கு பிறகு அக்கா , தேவகிக்கு கீழே ஒரு தங்கை மற்றும் இரண்டு தம்பிகள்.
இத்தனை பேர் இருக்கும் வீட்டில் எப்போதும் வேலையயிருக்கும். நல்ல தண்ணி எடுக்க கேணிக்கு போகணும். மத்தபடி மாடுக்கு, பாத்திரம் கழுவ , வாசல் தெளிக்கன்னு ஏரி தண்ணி எடுக்கணும். அப்பா யாவாரம் செய்யறதால எப்பவும் காப்பி தண்ணி சப்பாடுன்னு ஒரு பெரிய கூட்டத்துக்கு தினம் வேலை செய்யணும்.
நடுவில பிறந்ததால யாருமே அவ்வளவா தேவகி மேல அக்கறை படறதில்லை. அக்காளும் தங்கச்சியும் ஒரு வேலையும் செய்யறதில்லை. தேவகிக்கு வேலை செய்யறதில ஒரு கஷ்டமும் தெரியாது. எல்லாத்திலும் ஒரு பதவிசு இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு போனதென்னவோ ஆறாம் வகுப்பு வரைக்கும் தான்.ஆனா பயங்கர திறமைசாலி.
அவள் பிறந்த நேரம் அப்பா செய்த தொழில் விருத்தியானது. பெரியண்ணன் அவள் மேல உயிரே வச்சிருந்தார். அப்பாவும் எல்லா காரியங்களிலும் தேவகி செய்யறது மாதிரி வராதுன்னு அவ்வளவு அன்பா இருந்தார்.
சுத்துபட்டு கிராமத்தில எல்லாம் நடுபுள்ளன்னா தேவகி தான். பண்ணையடிக்கறவங்க எல்லாம் நடுபுள்ள கையால வாங்கினா விருத்தியாகும்ன்னு சொல்லிட்டு போவாங்க.
கலியாண வயசு வந்ததும் அண்ணனும் அப்பாவும் சேந்து நல்லா படிச்ச மாப்பிள்ளையா கவர்மென்ட் உத்தியோகஸ்தருக்கு கலியாணம் பண்ணி வச்சாங்க.
கவர்மென்ட்டு உத்தியோகம்ன்னாலும் கஷ்ட ஜீவனம் தான் நடுபுள்ளைக்கு.
ஆணும் பொண்ணுமா 4 குழந்தைகளும் ஆச்சி.. பொண்ணுக்கும் கலியாணம் கட்டி வெளிநாட்டுல இருக்கா. பசங்களுக்கும் கலியாணம் ஆயி கடைசிலவன் மட்டும் இப்போ வீட்டில இருக்கான்.
மூணாவதா பையன நள்ளவனேன்னு கூப்பிடும் போதெல்லாம் ஊரு நியபகம் வந்துடும் நடுபுள்ளைக்கு...பிள்ளாரெல்லாம் வந்ததும் பிள்ளைகள் பேரோட ராசா அம்மா இல்லைன்னா செல்வாம்மான்னு பேராச்சே தவிர யாருக்கும் நடுபுள்ளேன்னு கூப்புட வராது.ஊருக்கு போனாலும் பெரிசுக யாராவது நடுபுள்ளேன்னு கூப்பிட்டா தானுண்டு.
வயசான காலத்தில யாரவது நடுபுள்ளேன்னு கூப்புட மாட்டாங்களான்னு தேவகி மனசு ஏங்கும்!!!
கூப்பிட்டு பாருங்களேன்.....ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏ!!!
22 comments:
நடுபுள்ளே !நடுபுள்ளே!
அட நல்லாதான் இருக்கு இலா.
நீங்க எத்தனையாவது புள்ள வீட்ல ..!! ஹா..ஹா..
ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
//நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவேங்(க்கா)ண்ணா //
அதிகமில்லை கோன் பனேகா குரோர்பதிக்கு ஒரு டிக்கெட் வாங்கி தாங்க போதும் ஹா..ஹா..
இல்லாட்டி என்னை நியூ யார்க்க்கு மேயரா ஆக்கிடுங்க போதும் ..இதான் என்னுடைய சின்ன ஆசை ..!!
நன்றி ஆசியா அக்கா!
ஜெய்யீ!!! மீ டூ நடுபுள்ளை :)
//அதிகமில்லை கோன் பனேகா குரோர்பதிக்கு ஒரு டிக்கெட் வாங்கி தாங்க போதும் // இப்போ அந்த ப்ரோகிராம் நடக்கறதில்லையாம்... சீரியல் எதிலாச்சும் ஹீரோ வேசம் வேணுமா ??
ஆசைக்கு அளவில்லையா... நியூயார்க்குக்கு டிக்கேட்டு கூட மாம்ஸ்தான் எடுக்கணும் இதில மேயரா வேற.... இருங்க நல்ல தடிமனான சுவத்த பாத்து இடிச்சிகிறேன் :))
நானும் ஜெய்லானிய ரிப்பீட்டுக்கறேன்..
இலா.. உங்க ஊர் பாஷையா? நல்லா வந்திருக்கு.. தொடர்ந்து எழுதுங்கோ..
மயில் வளர்ந்துட்டுது. நல்லா தோகை விரிச்சு ஆட ஆரம்பிச்சு இருக்கு. நல்லா இருக்கு இலா. அடுத்து என்ன?
மருமகன் நல்லா கூவுறார். யாராச்சும் லெமன் ஜூஸ் கொடுங்கோ, பாவம் தொண்டை வத்திப் போயிருக்கும். ;)
எல்ஸ்! எல்லா ஊர் பாஷையும் கலந்து இருக்கு... நன்றி!
நன்றி இமா! இனி தான் யோசிக்கணும் அடுத்து என்னன்னு :))
//மருமகன் நல்லா கூவுறார். யாராச்சும் லெமன் ஜூஸ் கொடுங்கோ, பாவம் தொண்டை வத்திப் போயிருக்கும். ;) //
டவுட்டு கேட்டு வரளாத தொண்டை இப்ப கூவி வரண்டிடுமா ??
Super lakshmi.
இலா, நல்லா இருக்கு நடுபுள்ளே!!
ஜெய், நியூயோர்க் நகர மேயராகணுமா??? எனக்கு அப்படியே கொஞ்சம் வெட்டுங்க. பில் கிளிண்டனிடம் ரெகமென்ட் பண்றேன்.
அட நடுபுள்ளே...!
நல்லாதான் இருக்கு இலா.
நன்றி ஹேமா!
நட்புகளே ! நானும் ஹேமாவும் உயர்நிலை பள்ளியில் பெஞ்சு /பஸ் சீட்டு ஒன்னா தேச்சவங்க...
வான்ஸ்!நன்றி வான்ஸ். நீங்க பாசாகி கொசுவத்தி பத்தி வச்சீங்க.. இன்னும் முடிக்கல சைக்கிள்ள ஆரம்பிச்சு இப்போ தான் ஸ்கூட்டி வரை போயிருக்கேன்.. இன்னு அமெரிக்கா வரவே இல்லை..
நன்றி குமார்ண்ணா!
நடுபுள்ளே... இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
வட்டார வழக்குடன் இணைந்து அளித்த சிறுகதை அருமை இலா!
appa ilaa viiddula nadu pullaiyaa?
இப்படி கூப்பிடுரது நல்லா இருக்கே!!
ஹி..ஹி..
/மருமகன் நல்லா கூவுறார். யாராச்சும் லெமன் ஜூஸ் கொடுங்கோ, பாவம் தொண்டை வத்திப் போயிருக்கும். ;)//
ஒருதடவை கூப்பிட்டு பாக்க சொன்னாங்க அதான் நான் மூனு தடவை கூப்பிட்டேன் ..!! :-))
//இப்போ அந்த ப்ரோகிராம் நடக்கறதில்லையாம்... சீரியல் எதிலாச்சும் ஹீரோ வேசம் வேணுமா ??//
அழாத ஹீரோ வேஷம் இருந்தா வாங்கி குடுங்க போதும் ..
///மருமகன் நல்லா கூவுறார். யாராச்சும் லெமன் ஜூஸ் கொடுங்கோ, பாவம் தொண்டை வத்திப் போயிருக்கும். ;)//
மாமீஈஈஈ எனக்கே ஜுஸா..!! ஹி.ஹி..ஹி..
Post a Comment