1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் தொலைதூர பயணம் செல்வது. (சத்தியமா காப்பி அடிக்கலை).
2. நல்ல புத்தகம் அதை முடிக்கும் வரை தொல்லையில்லாத நேரம்... கூடவே கொறிக்க மற்றும் டீ காப்பி இன்னபிற எல்லாம் வேண்டும்....
3. யாருமே எழும்பாத விடியலில் எழுந்த பறவையின் ஒலி கேட்க எழும்ப பிடிக்கும்...
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. அன்பில்லாத மனிதர்கள் ( யெஸ்... ஐ டோன்ட் கேர் )
2. அதிகமாக அடம்பிடிப்பவர்கள்
3. உள்ளொன்று வைத்து புறமொன்றும் பேசுவோர் உறவு
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.என் நிழல்
2.மனசாட்சி
3.
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
சில விசயம் புரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா ஒன்னுமே புரியாது.. உங்களுக்கு புரியுதா??
எ.கா: கோழியில இருந்து முட்டை வந்ததா.. இல்லை...
ஒகே... அதை விடுங்க... ஏன் ஆப்பிள் நியூட்டனின் தலையில விழணும் :)
இது எதுவுமே என் சிற்றறிவுக்கு எட்டலை... இன்னுமா இந்த கேள்வில இருக்கீங்க?? அது தான் எனக்கும் புரியலை....
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
நான் எவ்வளவுக்களவு சுத்தமா வைக்கிறேனோ அவ்வளவுக்களவு மறுபடியும் குப்பையாகும்...
வொய் வொர்ரி... படுக்கையறை மேசையில் ஒரு அலாரம்!!!
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
என்னை ரொம்ப ஈசியா சிரிக்க வைக்கலாம்...
என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்கள்.. எம் நட்புகள்...கணவர்... என் உடன்பிறந்த சகோஸ் .. உடன்பிறவாத சகோஸ்.. மொத்தத்தில் என்னை சிரிக்க வைப்பது ரொம்ப ஈசி...
7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1. தையல் கத்துக்க ஆரம்பித்து இருக்கேன்
2. பேக்கிங்
3. புத்தகங்கள் வாசிப்பது
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1. ஸ்கை டைவிங்
2. முடிந்தவரை இயற்கையின் அற்புதங்களை பார்க்கணும்
3. ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தணும்
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
பிடித்தால் எல்லாமே செய்வேன்...பிடிக்கலைன்னா கோடி கொட்டிகொடுத்தாலும் செய்யமாட்டேன்...
நானும் சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))"ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே..."
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. கொசிப்ஸ் :) நோ தேங்யூ
அது மட்டுமே...
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. மன்னிக்க
2. மறக்க
3. கேட்க ( to really listen to people)
11) பிடிச்ச மூன்று உணவு வகை?
1. மெடிட்டரேனியன் உணவுகள்
2. இலை தழை ( சாலட் வகையறா)
3. எல்லா ஊர் உணவையும் சுவைத்து பார்ப்பேன் ( கடைசியாக கோலாச்சி - Kolache... நம்ம ஊரு ஸ்டப்ட் பன் தான் )
12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
எல்லா பாட்டும் பாடுவேன்.. எதுவுமே குறிப்பா சொல்ல முடியாது :)
Yesterday in gym I was singing "Row row row your boat gently down the stream"
13) பிடித்த மூன்று படங்கள்?
இப்ப கடைசியா பார்த்ததில் The Kings speech
அப்புறம் லைஃப்டைம் சானலில் பார்த்த Homless to harvard
தமிழில் - மொழி
14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
இப்படியான விசயங்கள் இருந்ததில்லை... ஆனா இருக்கற கை/கால் இத்யாதி உடல் பாகங்கள் இருந்தாலும் கண் தெரியாம காது கேக்காம.. வாய் பேச முடியாம .. இப்படி இருக்கறவங்களை பார்த்தா இருக்கறத வச்சி சந்தோஷமா இருக்க தோணும்... என் கணவரின் ஆபிசில் ஒரு பெண்மணிக்கு இடுப்பு கீழே மரத்து போயிருக்கு.. தனியா கார் ஓட்டிட்டு வந்து வேலையிலும் ரொம்ப திறமைசாலியா இருக்காங்க... இப்ப சொல்லுங்க.. என்னால எது இல்லாம இருக்க முடியாது :)
3 பேர் கண் தெரியாத 65க்கும் மேல இருக்கவங்க.. நடந்தா ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுகிட்டே போவாங்க அதிலும் ஒரு பெண்மணிக்கு மட்டும் கொஞ்சமா பார்வை தெரியும் போல அவங்க தான் பஸ் நம்பர் பார்த்து சொல்லுவாங்க... கரெக்டா பஸ்ல ஏறி கரெக்ட்டா இறங்க வேண்டிய இடத்தில இறங்கி ரோட்டை கிராஸ் செய்து... ஹூம்.. அவங்க வயசில என்னால் இவ்வளவு தன்னிச்சையா இருக்க முடியுமான்னு தெரியல...
Yeah you asked for it :)
20 comments:
ஆஅ.... மயிலைப் பிடிங்க... மயிலைப் பிடிங்க...... அப்பூடி ஆரது கத்திப் பயப்படுத்துறது மயிலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஒளிச்சிருந்திட்டு இப்பத்தான் வந்திருக்கிறா... கொஞ்சம் றெஸ்ட் எடுங்க விடுங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கீழே ஊசிக்குறிப்பு: அதிராவைப் பார்த்துக் கொப்பி பண்ணியது எனப் போட்டிருக்கோணும்:))))...
ரொம்ப ரயேட்ட்.. பேசாமல் படுப்போம் என வந்தேன், சே.. ஒரு தடவை எட்டிப் பார்ப்போம் :) எனப் பார்த்தேன்.... பலபேர் இன்றுபார்த்து தலைப்பு போட்டிருக்கினம் மனம் கேட்கல்ல..:)) களம் இறங்கிட்டேன்...:)) வெல்கம் பக் இல்ஸ்ஸ்.
மீண்டும் நல்வரவு இலா. சந்தோஷமாக இருக்கு உங்களைக் காண.
அமைதியா அழகா பதில் சொல்லி இருக்கீங்க இலா.
//3. ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தணும்// என்னால ஏதாச்சும் ஹெல்ப் ஆகணும்னா கேளுங்க.
ஆ.... மயில் ...பிடிச்சு வையுங்க ..பிறகு வரேன் :-))
அழகா பதில் சொல்லி இருக்கீங்க.
கலக்கல் பதில்கள் :)
//3. யாருமே எழும்பாத விடியலில் எழுந்த பறவையின் ஒலி கேட்க எழும்ப பிடிக்கும்...//
அட அலாரமுன்னு சொல்லுங்களேன் ஹி...ஹி...
//
3) பயப்படும் மூன்று விஷயங்கள்//
மூனாவது யாரு மாமியாரா..??? :-)))
பேர் சொல்லக்கூட இவ்வள்வு பயமா ஹா..ஹா..
//ஏன் ஆப்பிள் நியூட்டனின் தலையில விழணும் :)//
பூசணிகாய் விழுந்தா அவர் பிழைச்சிருக்க மாட்டார் .அதான் அவர் தலயில விழல..:-)) இப்போ புரியுதா..!!
//இன்னுமா இந்த கேள்வில இருக்கீங்க?? அது தான் எனக்கும் புரியலை....//
நான் தெளிவா இருக்கேன் :-))))))))
///நான் எவ்வளவுக்களவு சுத்தமா வைக்கிறேனோ அவ்வளவுக்களவு மறுபடியும் குப்பையாகும்...//
குப்பையா அப்படியே ஒரு தரம் விட்டுப்பாருங்க தானா சுத்தமாகும் . :-))
//என்னை ரொம்ப ஈசியா சிரிக்க வைக்கலாம்.//
அப்போ நைட்ரஸ் ஆக்ஸைட் கேஸுக்கு(gas ) வேலை இல்லைன்னு சொல்லுங்க :-))
//1. ஸ்கை டைவிங் // எதுக்கும் மூனு பாராசூட் வைச்சுக்கோங்க ..இப்பவெல்லாம் பாதிக்கு மேலே டூப்ளிகேட்டாவே வருது ஹா..ஹா..!! :-)))))))))
//வெல்கம் பக் இல்ஸ்ஸ்.//
பூஸ் இப்படி பக்(பூச்சி)ன்னு கூப்பிட்டா திரும்ப ஓடிடப்போறாங்க ..பரீட்டை எல்லாம் ஒரு வேளை முடிஞ்சிப்போச்சோ இல்லையான்னு தெரியல ..சூப்பர் பிஸி போர்டையே கானோம் :-))
////3. ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தணும்// என்னால ஏதாச்சும் ஹெல்ப் ஆகணும்னா கேளுங்க.//
அதானே , ஸ்டூடண்டா நான் வேனா வருகிறேனே..!! ஒரு நாளைக்கு ஒரு சந்தேகம் மட்டும்தான் கேப்பேன் பிஸீஸ் :-)))
//சில விசயம் புரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா ஒன்னுமே புரியாது.. உங்களுக்கு புரியுதா??//
ஹி...ஹி... இதானே என்னோட பாலிஸியே :-)
மூன்றுகள் அனைத்தும் அருமை
டொக்...டொக்...ஹலோ...ஹலோவ்...யாரது வீட்டில ..?யாரையும் கானோம் ..!!
இந்த பதிவு போட்டு(ம்) ஒரு செமஸ்டர் முடிஞ்சிருக்குமே..!!!! :-)))
Hi Ila.Luv this interesting post of answers to the query.Luv ur blog and glad to follow U.
நீங்க குறிப்பிட்ட விசயங்கள் ரசிக்கும்படியா இருக்கு. இந்த விஷயம் மட்டும் யோசிக்கும்படியா இருந்தது.. எது அது? கீழ பாருங்க...
<<<< கண் தெரியாத 65க்கும் மேல இருக்கவங்க.. நடந்தா ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுகிட்டே போவாங்க அதிலும் ஒரு பெண்மணிக்கு மட்டும் கொஞ்சமா பார்வை தெரியும் போல அவங்க தான் பஸ் நம்பர் பார்த்து சொல்லுவாங்க... கரெக்டா பஸ்ல ஏறி கரெக்ட்டா இறங்க வேண்டிய இடத்தில இறங்கி ரோட்டை கிராஸ் செய்து... ஹூம்.. அவங்க வயசில என்னால் இவ்வளவு தன்னிச்சையா இருக்க முடியுமான்னு தெரியல...>>>>
நான் கூட நாமக்கல் பஸ்டாண்டில் இப்படிப்பட்டவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. நம்மால் சிறிது தூரம் கூட கண்ணைமூடிக்கொண்டு சரியான பாதையில் செல்ல முடிவில்லையே. இவர்கள் எப்படி வாழ்க்கையில் இவ்வளவு தன்னம்பிக்கையோடு?!! என்று ஆச்சர்யப்பட்டு போய் இருக்கிறேன்.!!
இவர்களின் தன்னம்பிக்கை நான் தலைவணங்குகிறேன்..பகிர்ந்தமைக்கு நன்றி!
என்றும் அன்புடன், உங்கள் தங்கம்பழனி!!
Post a Comment