Tuesday, February 2, 2010
ஐடியா கூடையில் இருந்து!!!
பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....
முதலில் தோன்றியது .... அக்சப்டன்ஸ் அதாவது சுய அங்கீகாரம்....சிலர் இருக்காங்க அவங்க செய்வது தான் உலகிலே மிகச்சிறந்த வேலை மத்தவங்க எல்லாம் அவர்களுக்கு ஒரு 100 படிக்கும் குறைவு என்று.. இவங்கள சொல்லி ஒன்னுமில்ல.. நமது சமுதாயம் இப்படியானவர்களை அதிகமா ஐடியலைஸ் செய்வது தான் இவர்களின் பிரச்சனை... சிலர் இருக்காங்க... கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு.. இவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கும்...இந்த ரெண்டு பிரிவிலும் இல்லாத ஒரு விஷயம் என்னான்னா.. நம்மள நாமே அங்கீகரிக்கறது... சிலர் கண்ணாடி முன்னே நின்று தங்களை குறை கூறிக்கொள்வார்கள்... என் மூக்கு கொஞ்சம் சின்னதா இருக்கலாம்.. கண் கொஞ்சம் பெரிசா இருக்கலாம்ன்னு... இதெல்லாம் கூட எனக்கு ஓகே தான்.. சில நேரங்களில் சாதாரணமாக இருக்கும் ஒருவருக்கு வெளியில் தெரியாத உடல் குறைபாடு இருக்கும்... ஆனா மனித மனம்.. இல்லை இல்லை.. நான் நல்ல உடல் நலத்தோட தான் இருக்கேன்னு அவங்க உண்மையான நிலையை ஏத்துக்க மாட்டாங்க... சொல்லப்போனா சில நேரம் இந்த அக்சப்டன்ஸ் வந்திட்டாலே அவர்கள் வேற என்ன செய்யலாம்.. எப்படி பூரண குணமடையலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க....
இரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி!!!!
எப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....
கடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
"திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்"/// அதுதான் நட்புப்பகுதியைப் பார்த்தாலே தெரியுதே... ஆனால் பலபேருக்கு கிடைக்கிறபோது அருமை தெரிவதில்லை, எப்பவும் இப்படித்தான் இருக்கும் என்பதுபோல அலட்சியமாக இருந்துவிட்டு, கைவிட்டுப்போனபின்புதான்... நல்ல பொழுதை எல்லாம் அநியாயமாக்கிட்டமே எனத் தவிப்பார்கள்....
அதுசரி எப்படி இலா இப்படியெல்லாம்... அதுவும் நல்ல நல்ல யோசனைகள்.. ~ஐடியாத் திலகம்” பட்டம் கொடுக்கலாமென்றிருக்கிறேன் இலா வாங்கிக்கொள்ளுங்கோ.
இலா நீங்க என்ன கூடையை நேரா வைச்சு அல்லது கவுத்தி போட்டு யோசிக்கிறீங்களா? இதை படித்ததும் நினைவுக்கு வந்தது என் மனதை மிகவும் உருக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=UAWf3uqWSME
வாழ்க வளமுடன்
அதிரா!!! அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...
ஹைஷ் அங்கிள்!!! கூடை பக்கத்திலே இருக்கு! ஒரு வரிஎழுதி போட்டுட்டா மெதுவா யோசிச்சி எழுதலாம்... பாட்டு எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்....
//பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு.//
இலா ரொம்ப சந்தோஷம்.
//..சிலர் இருக்காங்க அவங்க செய்வது தான் உலகிலே மிகச்சிறந்த வேலை மத்தவங்க எல்லாம் அவர்களுக்கு ஒரு 100 படிக்கும் குறைவு என்று.. //
நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் சரி.பூனை கண்களை முடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம்.அப்படியும் சிலர் நம்மில் இருகின்றார்கள்.
//எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ..//வைர வரிகள்.நிறைய எழுதுங்கள் இலா.
என்ன இலா. ஒரே பட்டமளிப்பு விழா நடக்குது போல. எனக்கு அதிரா அழைப்பு குடுக்கவில்லையே. நான் முந்தியே வந்து முன்னாடியே இருந்து ஆசிர்வதித்திருப்பேன்.நல்ல பட்டமுங்கோ அதிரா. ஸாதிகா அக்கா சொல்வது போல் வைர வரிகள் நிறய்ய எழுதுங்கோ மேலும் மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்.
குட் இலா.. தொடர்ந்து எழுதுங்க..
ஐடியாக் கூடை முற்றுப் பெறாம பாதியிலேயே இருக்கு.. தோன்றத ஆரம்பிச்சி எழுதி வச்சிட்டு அனுபவம் கிடைக்கக் கிடைக்க முழுமையாக்குங்கோ..
எப்படி இலா இப்படிலாம்..தொடர்ந்து எழுதுங்க!!
//அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...// ஓகை..ஓகை..நோ மோர் சென்ட்டி ஹியர்!! அந்த பட்டத்த அப்பூடியே நைஸா ஜீனோ பக்கம் தள்ளிடுங்கோ ரெண்டு பேரும்.;)
இலாக்கா, வெகு நாளாய் கேட்க நினைத்து மறந்தது.."இதயம் பேசுகிறது" இது ஒரு காலத்தில நம்ம ஊர்ல வந்துட்டிருந்த மாதாந்திர நாவல் புத்தகத்தின் நேம் தானே??
உங்கட இதயம் நல்ல கருத்துகளைப் பேசுகிறது..மேல வைங்கோ. (இதயத்தை இல்லை! :D:D:D)
ஷாதிகா ஆன்டி!!! உங்க அன்பான ஊக்குவிப்பிற்க்கு நன்றி!!! முயற்சிக்கிறேன்...
வாங்க விஜி! நம்ம வீட்டுக்கு வர வரவேற்ப்பு வேண்டுமா...
வாங்க சந்தனா!!! சொன்னது சரிதான்... விரைவில் ஒரு லிஸ்ட் தர்ரேன்...
வாங்க மேனகா... உங்க வருகைக்கு நன்றி...
ஜீனோ!!! யெஸ் அது ஒரு பழைய வார இதழ்.. இன்னும் இருக்கான்னு தெரியலை...
அடி பின்றீங்க.. தொடர்ந்து எழுதி கலக்குங்க...
.... அக்சப்டன்ஸ் அதாவது சுய அங்கீகாரம்....
இலா உங்களுக்கு "great scholar " என்று பட்டம் கொடுத்தது எவ்வளவு பொருத்தம் ,அத்தனை அறிவுப்பூர்வமான எழுத்துக்கள்,ஐடியா கூடை எப்பொழுதும் நிரம்பி வழிந்தால் தான் அமுத சுரபி மாதிரி கொடுக்க கொடுக்க குறையாது.வாழ்த்துக்கள்.
//எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ..//
முதல் க்ளாப்ஸ், க்ளாப்ஸ் இலா..
இலா நீங்கள் எழுதுவதில் கேட்கவா வேனும், புதுசு புதுசா கலக்குவீங்களே// ம்ம் எழுதுங்க எழுதுங்க வரேன் அபப் அப்ப
இலா, நீங்களும் ப்ளாக் வெச்சிருக்கீங்களா? வெரி நைஸ்....! ஆச்சரியப்பட்டு, இங்க வந்து பார்த்தா, அதிரா, விஜி, ஜலீலாக்கா, ஸாதிகா எல்லாரும் கமெண்ட் பண்ணி இருக்காங்க! சோ ஸ்வீட்! என்னமோ, இழந்த உறவுகளைத் திரும்பப் பெறுவது மாதிரி இருக்குது.
வாங்க அண்ணாமலையான் சார்!!! அடி பின்னுவது .. என்ன சார் இது ... காலேஜி நினைப்பிலே இருக்கீங்களா??!!!
ஆசியா அக்கா!!! பட்டம் இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நாளைக்கு வந்து நேத்து என்னமோ நினச்சேனேன்னு மூளையை கசக்க வேணாமில்ல...அதுக்குத்தான் கூடை :))
வாங்க ஜலீலா அக்கா!!! உங்க கலக்கலை விடவா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...
வாங்க சுஹைனா!!! உங்களை போல சிறந்த எழுத்தாளர் என் வலைபூவுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்...
Post a Comment