Tuesday, March 2, 2010
எனக்குள்ள இருக்க நல்லவ!!!!
எதை பத்தி எழுதணும்ன்னு யோசிக்கவே வேணாம் இப்பல்லாம்.... சில பல நாளா கொஞ்சம் உடல் மன கஷ்டம் இருக்கு... அப்ப தான் யோசிச்சேன்... மன கஷ்டம் எதனால வருதுன்னு... தேவையில்லாம அழுகாச்சி காவியம் எல்லாம் ரீப்ளே பண்ணிட்டு இருந்ததால்.பிரச்சனை என்னன்னு தெரிஞ்சா அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிக்கலாம் இல்லையா...
நமக்கு ஒரு சந்தோஷமோ துக்கமோ நாம உடனே பகிர்ந்து கொள்வது நம்மோட பெஸ்ட் பிரெண்ட்ஸ் கிட்டதான்... இந்த பிரெண்ட்ஸ்ல பலவகை.. எனக்கு பல பேரோட பழகற சந்தர்ப்பம் வந்தாலும் சிலர் மட்டுமே இன்னும் என்னோட இன்னர் ஆர்பிட்ல இருக்காங்க.. அது ஏன் ??
அந்த தோழிகள் எல்லாம் என்னோட நல்ல குணங்களை மிளிரச் செய்தவர்கள்...
என்னை ஊக்குவித்து என் திறமையை மெருகேற்றியவர்கள்...
நான் செய்த முட்டாள்தனங்களை வன்மையாக கண்டித்தவர்கள்...
பல காத தூரங்களில் வசித்தாலும் நடுக்கும் குளிரில் நடு இரவிலும் " ஹேய் எவெரிதிங் ஆல்ரைட் டியர்??!!" என்று கேட்டு புண்ணுக்கு புனுகு சாற்றுபவர்கள்...
இவர்களிடம் மட்டும் நான் நானாக இருக்கமுடியும்...
முன்னே கட்டியணைத்து முத்தமிட்டு கத்தி வருமோ பின்னே என்று கவலைபட வேண்டியதில்லை...
யாரை பற்றி வேணும் என்றாலும் குறை சொல்லலாம்.. கேட்பார்கள்.. அதிலே நம் தப்பிருந்தால் " இது உன் தப்பு தானே" என்று கேட்கவும் செய்வார்கள்...
ரொம்பவே புலம்பினால் ... "பிளீஸ் ஸ்னாப் அவுட் ஆஃப் இட்" என்று ஒரு ஷொட்டு விழும்...
நட்புக்கு வயது தான் ஏது???
இவ்வளவு நல்ல நண்பர்களை வச்சிட்டு யாராவது பழகறவங்க எதாவது சொல்லிட்டா போதும்... அதையே நினச்சி ஏன் வருத்தபடணும்...
நல்ல நண்பர்கள் பெறுவது ரொம்ப கஷ்டம்... அவர்களை மறப்பது முடியவே முடியாத காரியம்...
Bringing the best in people makes you thier BFF ( Best Friend forever)!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இலா,
நான் நெருங்கிய நட்பொன்றால் இன்னும் மனம் நொந்து கிடக்கிறேன். நட்பு மட்டுமில்லை. உறவும் தான்!நல்ல நட்பு கிடைப்பதே அரிதாக இருக்கு இந்தக் காலத்தில்.
இலா... நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.
ஆனா எனக்கு நல்லது கெட்டதை பிரித்துப்பார்க்கத் தெரியாது. வெளுத்ததெல்லாம் பால்தான். முன்பு என் அம்மா என் நண்பிகளிடம் ஒருதடவைசொல்லிச் சிரித்தா... அதிரா யாராவது சிரிச்சால் பின்னால போயிடுவா, நீங்கதான் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கோ என.
அடிநாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் தேனுமாக பலர் கதைப்பார்கள், அதையெல்லாம் பிரித்துப்பார்க்கத் தெரிவதில்லை. முன்பு அம்மா, இப்போ என் கணவர்தான் குறிப்பறிந்து சொல்வார்... அதன்பின்புதான் நான் விழித்துக்கொள்வேன்.
நல்ல நட்பென்பது என்றைக்குமே அளப்பரிய சொத்துத்துத்தான். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
இலா நான் சொன்ன புத்தகம் வாங்கி ஷெல்பில் வைத்து இருக்கிறீர்கள், ஆனால் இன்னும் படிக்க வில்லையோ, படித்தால் இந்த புலம்பல் வராதே. Take charge of your life...and dont attract the negative energy and negative people or energy vampires.
pls read the book and start doing the affirmation from today...
Selvima! I hope in time you will find peace.
Athira! Be like this. Dont learn how to do good/bad identification. Life is very beautiful that way!
Haish Uncle! I am working on it. I dont know how to thank you for all you have said/done .
இலா நல்ல நட்பு கிடைத்தற்கரிய செல்வம்தான். இப்போதும் சில நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் என்னுடைய முதல் குட் ஃப்ரெண்ட் நான் தான்
அன்புள்ள இலா!
எதிர்பார்ப்புள்ள நட்புதான் இன்றைய உலகத்தில் அதிகமிருக்கின்றன! முன்பொரு முறை என்னிடம் ஒரு மருத்துவர் சொன்னது- எப்போதுமே என் நினைவில் இருப்பது- இந்த வார்த்தைகள்தான்.
“ உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளுங்கள். அதில் உங்கள் கணவர், பிள்ளைகளுக்கு மட்டும்தான் இடம். வேறு எவரையும் அன்பென்ற போர்வையில் அங்கு நுழைய இடம் கொடுக்காதீர்கள். அதற்கடுத்த வட்டத்தில்தான் மனம் சார்ந்த அன்பிற்குரியவர்களுக்கும் நட்பிற்குரியவர்க்கும் இடம் தரவேண்டும். இன்னும் நெருக்கம் குறைந்தவர்களை அடுத்த வட்டத்தில் வையுங்கள். இப்படி இருந்தால் மனப்பிரச்சினைகள் எப்போதுமே உங்களைப் பாதிக்காது”.
ஒருவர் தனக்கு எல்லாமுமே தன் நட்பிற்குரியவர்தான், தன் உலகமே அவர்தான் என்று மிகவும் ஆழ்ந்த அன்பில் விழும்போதுதான் அங்கே பாதிப்புகள் ஏற்படுகின்றன. கணவன் -மனைவி உறவு தவிர்த்து மற்ற அனைத்து உறவுகளிலும் ஒரு எல்லக்கோடு வரைந்து கொண்டால் நிச்சயம் வலிகளுக்கு வாப்பில்லை.
நட்பு பற்றி மனோ அக்கா சூப்பரா சொல்லி இருக்காங்க.
நட்புக்கு வயது தான் ஏது??? வயதே கிடையாது இலா ..
நட்பு பற்றி எழுத இந்த பதிவு போதாது.அது அற்புதமானது.நட்புக்கு எப்பொழுதும் என் மனதில் தனி இடம் உண்டு.தவறாக பயன்படுத்தாத வரையில் இலா.
mm.. i had such good friends once upon a time ilaa.. not now :( it is all a sad story.. we are torn apart.. though not bcos of our fault :))
right now, my hubby is my good buddy, then my brother. the rest don't have much time :)) when i miss these people - irukkave irukkaar namma god :)) best buddy forever... no questions and no answers too :)
Post a Comment