இவருக்காக தனியா ஒரு பதிவு போட்டே ஆகணும்.. ஏன்னா தினம் ஊருக்கு போன் செய்தா லொக்கு லொக்குன்னு இருமி "இல்லம்மா கொஞ்சம் சளி அதோட ஜுரம்" என்று சொல்லும் அம்மா கூட... இன்னைக்கு சின்ன கருப்பன் என்ன பண்ணான் தெரியுமா என்று ஆரம்பிச்சா அது ஒரு 10 நிமிஷம் நான் ஸ்டாப்பா பேசுவாங்க... இவருக்கு சின்ன கருப்பன் என்று எதுக்கு பேர் வந்தததுன்னு தெரியாது... இவங்க அம்மா இவனை பெற்றதும் இவர் இருந்த கருப்புக்கு பக்கத்து வீட்டு உஷா ஆன்டி வச்ச பேர் சின்ன கருப்பன்...
மக்கள் எல்லாம் சோஃபால உட்கார்வாங்களோ இல்லையோ இவருக்கு தனியிடம் தான்.. அவர் வந்தா எங்க அப்பாவே நகர்ந்து இடம் கொடுப்பார்... பயமில்லை... ஒரு பாசம் தான்.. பிறந்தது முதலே எங்க வீட்டை சுத்தி வரும் இவர் ஒரு அழகிய பூனைகுட்டி !!!
ஊருக்கு போன் செய்தா ஒரு 5 நிமிஷமாவது சின்ன கருப்பன் அப்டேட் இல்லாம இருக்காது...
போன வார டயலாக்:
அம்மா: டேய் ! என்னடா வெறும் பிரெட்டா தர்ரே அவனுக்கு...
சாப்பிடமாட்டான்ன்டா.. கொஞ்சம் பாலும் சேத்து ஊத்து...
...{என் டயலாக்: அம்மா இது உங்களுக்கே ஓவரா இல்லை :(( }
ரொம்ப வெக்கையா இருக்கு கருப்பன் கிச்சன் சிங்க்ல இருக்கான் :))
என் டயலாக் : அதுக்கென்ன ஏசி ஆன் பண்ணுங்க :))
உஷா ஆன்டி: அவனுக்கு பால் சோறு வைக்கறேன்ன்... இல்லன்னா கத்திட்டே இருப்பான்...
என் டயலாக்: ஆன்டி அங்க பாருங்க உங்க் சின்ன பையன் 15 நிமிஷமா சாப்பாடு கேக்கறான் :))
தம்பி: டேய் ஆனந்தூ!!! ராகம் பேக்கிரில போயி ஒரு 4 இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா.. கருப்பன் புளி சாதம் சாப்பிட மாட்டான்...
என் டயலாக்: டேய் பெரிய கருப்பூ!!! எனக்கு பரோட்டா வாங்க ஆள் அனுப்புன்னு சொன்னா வேலை இருக்கு .. இப்ப உனக்கு ஆள் இருக்கா :((
அப்பா: வாடா.. இந்தா பிஸ்கட்டு.... ஹ ஹ ஹ.. இல்லம்மா அவனுக்கு பிஸ்கட்டு ரொம்ப பிடிக்கும்....
என் டயலாக்: அப்பா எப்பல இருந்து இப்படி :))
அம்மா: நேத்து கூட ராஜேஷ் கருப்பன சுத்தி சுத்தி போட்டோ எடுத்தான்...
என் டயலாக்: ஹ்ம்ம்.. நானும் தான் ஐ ஏ பி போயி போட்டோ பிடிச்சேன் அளகா.. 60 ரூவாய்க்கு 20 போட்டோ குடுத்தானுங்க.. ஒருத்தனாச்சும் மருந்துக்கும் அக்கா உங்க போட்டோ குடுங்கன்னு கேட்டாங்களா :((
பின் குறிப்பு : என் டயலாக் எல்லாம் என் மனசில :))
எனக்கு பிடிக்கல பிடிக்கல.. இது வரை எல்லாருக்கும் செல்லமாய் இருந்த எனக்கு இப்படி ஒரு போட்டி!!
எப்படியோ எல்லாரும் சின்ன கருப்பனோட என்சாய் பண்ணுறாங்க.. அவங்களுக்கும் ஒரு பொழுது போக்கு!!!
Sunday, March 14, 2010
Thursday, March 4, 2010
சொல்ல மறந்த கதை!
என் வாழ்க்கையில் பல நேரம் பலரும் பல விதங்களில் வந்து போயிருக்கிறார்கள் . சிலரை மறக்கவே முடியாது , அவர்கள் எனக்கு நெருங்கியவராக கூட இருக்க வேண்டியதில்லை. இந்த வாழ்க்கை பயணத்தில் எப்பவுமே ரஷ் அவர் டிராபிக் தான். ஆனாலும் ஒரு நொடியில் சொல்லகூடிய ஒரு வார்த்தை "நன்றி" "ஷுக்ரியா" "டஃன்க" "க்ராட்சியாஸ்" "தேங்யூ".நம்மட கலாச்சாரத்தில் நன்றி நெருங்கிய உறவுகளுக்குள் சொன்னால் நமக்குள்ள எதுக்கு என்று சொல்வார்கள். மேலை நாடுகளில் கதவை திறந்து விட்டாலோ அல்லது எதிர்பாராது செய்யும் செயலும் ஒரு நன்றியை சம்பாதித்து தரும்.
இப்ப பழகியதில் அம்மா காலையில் காஃபி கொடுத்தாலும் தேங்ஸ்மா என்று சொன்னால் தான் காஃபி இனிக்கிறது போல இருக்கும்... அது ஒரு இரண்டாம் குணமாகிவிட்டது...
சில சந்தர்ப்பங்களில் நன்றி என்று சொல்லவும் முடியாமல் இருக்கும்... அப்படிப்பட்டவர்கள் என்னோட மனதில் தனியிடம் வகிக்கிறார்கள்.தனி ஏசி ரூம் என் மனசில :)
சில வருடங்களுக்கு முன் ஒர் இரவில் வாழ்க்கை மாறியது. எமெர்ஜென்சி ரூம் விடிய காலையில் சர்ஜரி. கண்விழித்து பார்த்ததில் என் கனவு கலைந்திருந்தது . முதல் விசிட்டர் ! அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து வந்த சகோதரி ! கலங்காதே கண்ணே என்று கை பிடித்து ஆறுதல் சொன்னார்... ஆறாய் பெருகிய கண்ணீரில் ஆறுதல் சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.
இப்படி அறிமுகமே இல்லாமல் இருப்பவர்கள் எனக்கு செய்த உபகாரம் பல.நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை...
இப்ப பழகியதில் அம்மா காலையில் காஃபி கொடுத்தாலும் தேங்ஸ்மா என்று சொன்னால் தான் காஃபி இனிக்கிறது போல இருக்கும்... அது ஒரு இரண்டாம் குணமாகிவிட்டது...
சில சந்தர்ப்பங்களில் நன்றி என்று சொல்லவும் முடியாமல் இருக்கும்... அப்படிப்பட்டவர்கள் என்னோட மனதில் தனியிடம் வகிக்கிறார்கள்.தனி ஏசி ரூம் என் மனசில :)
சில வருடங்களுக்கு முன் ஒர் இரவில் வாழ்க்கை மாறியது. எமெர்ஜென்சி ரூம் விடிய காலையில் சர்ஜரி. கண்விழித்து பார்த்ததில் என் கனவு கலைந்திருந்தது . முதல் விசிட்டர் ! அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து வந்த சகோதரி ! கலங்காதே கண்ணே என்று கை பிடித்து ஆறுதல் சொன்னார்... ஆறாய் பெருகிய கண்ணீரில் ஆறுதல் சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.
இப்படி அறிமுகமே இல்லாமல் இருப்பவர்கள் எனக்கு செய்த உபகாரம் பல.நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை...
Tuesday, March 2, 2010
எனக்குள்ள இருக்க நல்லவ!!!!
எதை பத்தி எழுதணும்ன்னு யோசிக்கவே வேணாம் இப்பல்லாம்.... சில பல நாளா கொஞ்சம் உடல் மன கஷ்டம் இருக்கு... அப்ப தான் யோசிச்சேன்... மன கஷ்டம் எதனால வருதுன்னு... தேவையில்லாம அழுகாச்சி காவியம் எல்லாம் ரீப்ளே பண்ணிட்டு இருந்ததால்.பிரச்சனை என்னன்னு தெரிஞ்சா அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிக்கலாம் இல்லையா...
நமக்கு ஒரு சந்தோஷமோ துக்கமோ நாம உடனே பகிர்ந்து கொள்வது நம்மோட பெஸ்ட் பிரெண்ட்ஸ் கிட்டதான்... இந்த பிரெண்ட்ஸ்ல பலவகை.. எனக்கு பல பேரோட பழகற சந்தர்ப்பம் வந்தாலும் சிலர் மட்டுமே இன்னும் என்னோட இன்னர் ஆர்பிட்ல இருக்காங்க.. அது ஏன் ??
அந்த தோழிகள் எல்லாம் என்னோட நல்ல குணங்களை மிளிரச் செய்தவர்கள்...
என்னை ஊக்குவித்து என் திறமையை மெருகேற்றியவர்கள்...
நான் செய்த முட்டாள்தனங்களை வன்மையாக கண்டித்தவர்கள்...
பல காத தூரங்களில் வசித்தாலும் நடுக்கும் குளிரில் நடு இரவிலும் " ஹேய் எவெரிதிங் ஆல்ரைட் டியர்??!!" என்று கேட்டு புண்ணுக்கு புனுகு சாற்றுபவர்கள்...
இவர்களிடம் மட்டும் நான் நானாக இருக்கமுடியும்...
முன்னே கட்டியணைத்து முத்தமிட்டு கத்தி வருமோ பின்னே என்று கவலைபட வேண்டியதில்லை...
யாரை பற்றி வேணும் என்றாலும் குறை சொல்லலாம்.. கேட்பார்கள்.. அதிலே நம் தப்பிருந்தால் " இது உன் தப்பு தானே" என்று கேட்கவும் செய்வார்கள்...
ரொம்பவே புலம்பினால் ... "பிளீஸ் ஸ்னாப் அவுட் ஆஃப் இட்" என்று ஒரு ஷொட்டு விழும்...
நட்புக்கு வயது தான் ஏது???
இவ்வளவு நல்ல நண்பர்களை வச்சிட்டு யாராவது பழகறவங்க எதாவது சொல்லிட்டா போதும்... அதையே நினச்சி ஏன் வருத்தபடணும்...
நல்ல நண்பர்கள் பெறுவது ரொம்ப கஷ்டம்... அவர்களை மறப்பது முடியவே முடியாத காரியம்...
Bringing the best in people makes you thier BFF ( Best Friend forever)!!!
Friday, February 26, 2010
என்னத்த படிச்சு !!!!

நான் வெறுமே பாட புத்தகங்கள படிக்கறத பத்தி சொல்லலை.. அது படிச்சு தான் ஆகணும் வேற வழி.. அது இல்லாம நான் சொல்லப்போவது வாசிக்கும் பழக்கம் பத்தி... எத்தனை பேர் பாட புத்தகங்கள் தவிர வேற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி இருக்கீங்க... ஆனால் பலர் இங்க பார்க்கிறேன் அவங்க குழந்தைகளை லைப்ரரி( நூலகம்) கூட்டிட்டு போறது... ஸ்டோரி டைம்... போறது எல்லாம் இருக்கும்...ஆனா பெற்றோர் ஒரு நல்ல புத்தகம் மருந்துக்கு கூட படிப்பதில்லை... ஒரு முறை ஒரு ஞானி( உண்மையான ஞானி இல்லை) சொன்னார் ... பெற்றோர்கள் உலகிலே சிறந்த ஹிப்போக்கிரெட்ஸ்...எதுக்கு தெரியுமா.. அவங்க குழந்தைக்கு சொல்லும் எதையும் கடைபிடிப்பதில்லை .. யாரும் என்னை அடிக்க வர வேணாம்... இப்ப படிக்கறத பத்தி மட்டும் பேசுவோம் ....
எதற்காக வாசிக்கறோம்
= பொழுது போக்குக்கு
= அறிவை விசாலப்படுத்த
= சொல்வளத்தை அதிகரிக்க
= இன்ஸ்பிரேஷனுக்கு
இப்படி பலரும் பல காரணங்களுக்கு வாசிக்கிறார்கள்... இதுக்கு பயிற்சி எல்லாம் தேவை இல்லை. எதை பற்றி வாசிக்கணும் என்று குழம்பாமல் உங்களுக்கு பிடித்தமான பிரிவு எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.லைப்ரரிக்கு போனா பல பிரிவு இருக்கும் ஃபிக்க்ஷ்ன் / நான்-பிக்க்ஷன் / பயணம்/ மொழிகள்/ வாழ்க்கை வரலாறு/ பொது அறிவு/குழந்தைகள் பகுதி என்று பல விதமா பிரிச்சு வச்சிருப்பாங்க.புதுசா வாசிக்க ஆரம்பிக்கரவங்க நேரடியா லியோ டால்ஸ்டாயின் "அஃனா கர்னீனா" இல்லை "வார் அன்ட் பீஸ்" இப்படி ரொம்ப அதிக பக்கங்களும் அதிக நேரமும் எடுக்கும் புத்தகங்களை வாசிக்க வேண்டாமே... எளிதா படிக்க கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது மறுபடியும் எதாவது படிக்கணும் என்று ஆர்வம் வரும்.
இந்த இன்டெர்னெட் யுகத்தில நியூஸ் பேப்பர் எல்லாம் கூட டிஜிட்டல் பேப்பர் ஆகுது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம்ம ஊரில நடக்கற விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும். அதே போல தான் புத்தகங்களும் . எனக்கு புத்தகம் படிப்பது ஏன் பிடிக்கும் தெரியுமா ??!!! பல நேரம் புத்தகத்தில வரும் இடங்களை கற்பனை செய்து பார்க்கும் குணம் இருக்கு... ஒரு ஊருக்கு போகாமலே அந்த ஊர்ல எப்படி சாப்பிடுவாங்க... என்ன டிரெஸ் போடுவாங்க... அவங்க பழக்க வழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.பாரிஸ் சென்றதில்லை ஆனால் லூவர் எப்படி இருக்கும் என்று தெரியும். சில நேரம் படிக்கும் போது அட நம்ம ஊர்லயும் இப்படி ஒரு பழமொழி இருக்கேன்னு தோணும்.
படிக்கும் ஆர்வம் வந்ததே என் அண்ணாவை பார்த்துதான்..அவ்ர் அதிகம் படிப்பார்.. அவரை பார்த்து ஒரு ஜே ( அது தாங்க பொறாமை) நானும் பெரிய பெரிய புக்கா படிக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வந்தது. இதுல அவர் ஒரு ஸ்பீட் ரீடிங் புத்தகம் வச்சிருந்தார் அதுல ஒரு டெக்னிக் எப்படின்னா ஒரு பாராவை புத்தகத்தை தலை கீழாக வைத்து படிக்கணும் அப்போ நேரா வாசிக்கும் போது வேகமா வாசிக்கலாம் என்று படித்தேன் :)).
ஒரு கட்டத்தில என் கூட படிச்ச ஸ்னேகிதிகள் மூலமா ஆர்வம் பெருகி அப்புறம் நானும் தேடி தேடி படிச்சேன்.. ரொம்ப படிச்சிட்டியான்னு/கிழிச்சிட்டியான்னு யாரும் கேள்வி கேக்க கூடாது. எனக்கு சில பிரிவுகள் தான் பிடிக்கும் அது ஏன் பிடிக்குது எதுக்கெல்லாம் தெரியாது. ஒரு எழுத்தாளர் பிடிச்சா அவர் எழுதிய எல்லாம் ஒரே மூச்சில படிக்கணும் அப்படி ஒரு வெறி !!!
ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒருவர் என்னோட படிக்கும் ஆர்வத்துக்கு தீனி போடுறாங்க.. இப்ப லேட்டஸ்ட் பிஸ்கோத்து கொடுத்தவர் இந்த வயசில ( எது இளம் வயசு :)) கார்டியாலஜி/இன்டெர்னெட்ன்னு கலக்கறார்... எங்க அப்பா அதுக்கும் மேல ஒரு படி போயி "அம்மா!!! ( நான் தான்) இந்த பிராஜெக்ட் மேனேஜ்மென்ட்ல எப்படி டைம் மேனேஜ்மென்ட் செய்வாங்க"ன்னு கேட்டு என் இமேஜை டேமேஜ் பண்ணிட்டு இருக்கார்...
கேள்வி கேட்டாலே நாங்க தான் தருமி ரேஞ்சுக்கு எஸ்ஸ்ஸ் ஆகிடுவோமில்ல...
படிக்கற பழக்கம் எல்லாம் நாமா வளர்த்துக்கொள்வது... அதுக்கு வேற எதுவுமே வேணாம் ஜஸ்ட் ஒரு புத்தகம் !!!
Tuesday, February 2, 2010
ஐடியா கூடையில் இருந்து!!!

பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....
முதலில் தோன்றியது .... அக்சப்டன்ஸ் அதாவது சுய அங்கீகாரம்....சிலர் இருக்காங்க அவங்க செய்வது தான் உலகிலே மிகச்சிறந்த வேலை மத்தவங்க எல்லாம் அவர்களுக்கு ஒரு 100 படிக்கும் குறைவு என்று.. இவங்கள சொல்லி ஒன்னுமில்ல.. நமது சமுதாயம் இப்படியானவர்களை அதிகமா ஐடியலைஸ் செய்வது தான் இவர்களின் பிரச்சனை... சிலர் இருக்காங்க... கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு.. இவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கும்...இந்த ரெண்டு பிரிவிலும் இல்லாத ஒரு விஷயம் என்னான்னா.. நம்மள நாமே அங்கீகரிக்கறது... சிலர் கண்ணாடி முன்னே நின்று தங்களை குறை கூறிக்கொள்வார்கள்... என் மூக்கு கொஞ்சம் சின்னதா இருக்கலாம்.. கண் கொஞ்சம் பெரிசா இருக்கலாம்ன்னு... இதெல்லாம் கூட எனக்கு ஓகே தான்.. சில நேரங்களில் சாதாரணமாக இருக்கும் ஒருவருக்கு வெளியில் தெரியாத உடல் குறைபாடு இருக்கும்... ஆனா மனித மனம்.. இல்லை இல்லை.. நான் நல்ல உடல் நலத்தோட தான் இருக்கேன்னு அவங்க உண்மையான நிலையை ஏத்துக்க மாட்டாங்க... சொல்லப்போனா சில நேரம் இந்த அக்சப்டன்ஸ் வந்திட்டாலே அவர்கள் வேற என்ன செய்யலாம்.. எப்படி பூரண குணமடையலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க....
இரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி!!!!
எப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....
கடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...
Sunday, January 24, 2010
The Inarticulate !!!

என்னடா தலைப்பில பீட்டர் விட்டு பதிவு தமிழ்ல இருக்கேன்னு பாக்கறீங்களா.. மேட்டர் என்னவோ இதயத்துக்குள்ள இருந்து வருதில்ல அதான்... இன் ஆர்டிகுலேட் என்றால் ரொம்ப அறிவாளித்தனமா பேசணும்ன்னு நினைப்போம் ஆனா மனசில இருக்கும் எமோஷன் எல்லாம் "அது வந்து" போயி என்று திக்கிக்கொண்டு இருக்கும்.இல்லைன்னா அபிராமி அபிராமி ந்னு சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ரேஞ்சில சொல்லாம போன பீலிங்ஸ் தான் ஜாஸ்தி . எனக்கு பிடிச்ச டெபனிஷன் கொஞ்சம் அளுகாச்சி காவியம் தான் .. சிவாஜி சார் பாசமலர் ரேஞ்சுக்கு "மலர்ந்தும் மலராத ....."இப்படியான உறவுகள் கொடுத்த உணர்வுகள் தான் அதிகம்.
சிலருக்கு நம்மை பிடிக்கும் நமக்கு அவர்களை பிடிக்காது. சிலரைக்கண்டாலே எப்படியாவது பிரெண்ட் பிடிச்சுக்கணும் என்று தோணும் ஆனா நம்ம மனசில மட்டும் இருந்தா போதுமா... அதே போல அண்ணன் தம்பி / அக்காள் தங்கை உறவுகளில் ( இந்த சிண்டு பிடி கேஸ் இல்லை) ஒருவருக்கொருவர் பாசமும் மரியாதையும் தான் அதிகமாக இருக்கும். அண்ணனைப் பார்த்தாலே உருகுவார் ஒருவர்.. அண்ணனோ தம்பியை கண்டாலே கடுகடுப்பார். சிலர் தங்கைகளுக்கு அக்கா வார்த்தை என்றாலே வேதம்... அக்காள்களோ "எப்படி இருக்கே??? நல்லா இருக்கேன்" இப்படி ஒரு வரிப்பதில்கள் உறவாடிப்போகும்.
இது ஒரு வகை .. இவர்கள் எல்லாம் "கனி இருந்தும் காய் " பிரிவு. சிலருக்கு ரொம்ப பாசம் இருக்கும் ஆனா அவர்கள் பாசம் காட்டும் விதம் மற்றவருக்கு புரியாது.யாராவது பாரு தம்பிக்கு உன் மேல் தான் எவ்வளவு பாசம்ன்னு எடுத்துச்சொன்னாதான் விளங்கும்.
அப்படியே விளங்கிக்கொண்டாலும் சின்னவயசில பிணக்கு தீர்ந்து விளையாடியது போல இருக்க முடிவதில்லை.
வளரும் போது இருக்கும் பாசம் வளர்ந்து வலியவனாகியதும் கொஞ்சம் மெலிந்து தான் போகும்.
சொல்ல தெரியலைன்னா பரவாயில்லை கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கோங்க...
யாராயிருந்தாலும் ...
1)வாய் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்தும் போது கண்ணாடியில் உங்கள் கண்கள் சிரிக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்... லெட் யுவர் ஐஸ் ஸ்மைல்.
2)யாராவது பாசமாய் பேசினால் உடனே ஒரு கலர் கண்ணாடி கொண்டு "ஹூம் இப்ப எதுக்கு இவன் நல்லா பேசுறான்" இப்படி நினைக்க வேண்டாம்... கிவ் எவ்ரிபடி பெனிபிட் ஆஃப் டவுட்...
3)கடவுளுக்கே துதி பிடிக்கும் போது.. அவர் படைத்த மக்களுக்கா பிடிக்காது... தாராளமாய் புகழுங்கள். புகழ்ச்சி உங்கள் சுய நலத்துக்காக இருக்க வேண்டாம்... பி ஜெனெரஸ் இன் யுவர் அப்ரிசியேஷன்....
4)சரியான நேரத்துக்கு காத்திருக்க வேண்டாம்... "இன்னைக்கு உப்புமா சூப்பர்" "இந்த சர்ட் நல்லா இருக்கு" "உங்க காதணி அழகா இருக்கே"
"வெண்டர்புல்" "ஆசஃம்" "நைஸ் ஜாப்" ...
நினைவில் வைக்க "எனி டைம் இஸ் அ குட் டைம்"
5)நண்பர்களுடனோ/உறவினர்களுடனோ/குடும்பத்திலுள்ளவர்களுடனோ பகிர்ந்துகொண்ட சந்தோஷமான தருணங்களை அவர்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்... குட்டி பிள்ளையாய் இருந்தபோது செய்த குறும்புகள் யாருக்குத்தான் பிடிக்காது...
6) நன்றியால் துதி பாடுங்கள்... உங்கள் நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறேன்... உங்களோடு இருந்தபோது இனிமையாக நேரம் செலவிட்டோம்.... உங்க அம்மா கையால் சமைத்து சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறோம்...அதே சமயம் "பி கிரேஸ்புஃல் இன் யுவர் கிராட்டிடுயூட்"
இவ்வளவு நேரம் படிச்சீங்களே ரொம்ப டான்க்ஸுங்கோ!!!
இதெல்லாம் படிச்சு கொஞ்சம் மாறுங்கப்பா பாசக்கார பய புள்ளைகளா!!!
Wednesday, January 13, 2010
இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்!!
இன்ஸ்பிரேஷன் என்றால் என்ன? ஒரு செயலை செய்வதற்கான தூண்டுதல் . பொதுவாக இரண்டு வகைப்படும்.தன்முனைப்பு தூண்டுதல் மற்றும் வெளிபுற கருவிகளின் தூண்டுதல்...சின்ன குழந்தைகளை அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாராட்டி"குட் ஜாப்" "வெல் டன்" என்று சொல்லும் போது அவர்களுக்கு உங்கள் அன்பை/பாராட்டை பெற வேண்டி மேலும் நாம் விரும்பும் செயல்களை செய்வார்கள்... இதுவே வளர்ந்த பின் புறதூண்டுதல்கள் மூலம் வேறு பரிணாமத்தை அடைகிறது. பள்ளிப்பிள்ளைகளுக்குத்தான் எத்தனை சுமைகள்.. பாடத்தில முதல் மார்க்க எடுக்கணும்... டான்ஸ் கிளாசில் மற்றவரை விட ஜதி தப்பாமல் ஆடணும்... பாட்டு கிளாசில் ஸ்ருதி தவறாமல் பாடணும்...இது இல்லாமல் போட்டிகளில் பரிசு பெறணும்... விளையாட்டில முதன்மையாக வரணும்..... இப்படியாக எத்தனையோ "ணும்"கள் .. எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்...
நான் படிக்கும் காலத்திலும் இதெல்லாம் இருந்தது தான்.. ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்... சரியான பெற்றோர்/உடன் பிறந்தவர்கள்/ஆசிரிய பெருந்தகைகள் இப்படியான வழிகாட்டிகளின் உதவியால் இந்த "ப்ரஷர்" தெரியாமல் வளர்ந்தேன்... ஆனாலும் சில நேரம் ஒரு இலக்கில்லாமல் இருந்தது போல இருக்கும்....
ஒரு நாள் அந்த பிரச்சனையும் தீர்ந்தது. பள்ளி ஆண்டு விழா எப்பொழுதும் மாலையில் தான் நடக்கும்..பள்ளி ஆண்டு விழாவில் ஒரு ப்ரோக்கிராமுக்கும் அடுத்ததுக்கும் இடையில எதாவது பாட்டு போடுவாங்க. படித்தது கிருஸ்தவ பள்ளி என்பதால் ரொம்ப சினிமா பாட்டு இருக்காது.அப்போ எம்சியார் பாட்டுன்னு தெரியாது. பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் ஒரே ஸ்கூல் தான்.எல்லாருமே தரை டிக்கட் தான்.. அங்கங்க ட்யூப் லைட் இருந்த்ததால் எல்லா இடத்திலும் வெளிச்சமில்லை.அதனால அப்பப்ப தூங்கிடலாம் :)) அக்கா எழுப்பி விடுவாங்கல்ல வீட்டுக்கு போகும் போது. நல்லா தூங்கிட்டு இருந்த நான் திடீர்னு பாட்டு போட்டதும் எழுந்தேன்...
கேட்டது ஒரே வரி " மாபெரும் மேடையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்"... அப்படியே ஒரு இன்ஸ்பிரேஷன் வந்துதே பாக்கலாம்... அதுக்கு இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்... அதுவரைக்கும் பேசுவேன் ஆனா இப்ப எல்லாரும் சொல்லற மாதிரி ஓவரா பேசமாட்டேன்...என்னோட ஆங்கில மொழி திறமையை வளர்க்க இந்த பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது ....
இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...
நம் வாழ்வில் நம் வளர்ச்சியின் அளவு கோல் நாம் தான். மற்றவர்கள் ஒரு "பெஞ்ச் மார்க்" ஆக இருக்கமுடியுமே தவிர ஒரு போதும் நமது வளர்ச்சி அவர்களாக முடியாது.
Subscribe to:
Posts (Atom)