Tuesday, September 14, 2010

ஒரு நியூயார்க் நிமிடம்

டியர் டாக்டர் ஜான்சன்!

உங்கள் பரிந்துரைப்படி நான் நியூயார்க் நகரத்தில் உள்ள வெஸ்ட் நியூயார்க் கிளினிக் மருத்துவ குழுவுடன் சேர்ந்து வேலை ஆரம்பித்து விட்டேன். ஸ்லீப்பி ஹாலோ - வயோமிங் மாநிலத்தில் உள்ள மருத்துவ கிளினிக் போலல்லாமல் இங்கு ஒரு நொடி என் முந்தய வாழ்வில் ஒரு நாளாக இருந்திருக்கிறது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால் வேகம் எதிலும் வேகம். போராட்டம் எப்பொழுதும் உயிர்ப்பாயிருக்க ஒரு போராட்டம்.இந்த போராட்டத்தில் பலமுள்ளவர்கள் ஜெயிப்பதும் பலகீனர்கள் நகரத்தின் எண்ணற்ற இருண்ட சந்துகளிலும் தொடர் சப்த சாகரத்தில் மூழ்கிப்போவதும் அன்றாட நிகழ்வுகள்.

என்னுடன் வேலை செய்யும் டாக்டர் ஜேக்கபின் மனைவி பல வருடங்கள் கழித்து குழந்தை உண்டாகி இருக்கிறார். மனைவிக்கு சப்போர்ட் செய்வதாக டாக்டர் ஜேக்கபும் ஒரு டம்மி எடையை கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த டாக்டரின் செய்கைகள் எனக்கு சிரிப்பை தான் வரவைக்கிறது. என்ன தான் முன்னேறி இருந்தாலும் என்னை போல வயோமிங் மாநில ஆண்கள் கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு உதவி செய்வார்களே ஒழிய இப்படி அவர்களும் அவஸ்தை படுவதில்லை. வேலை முடிந்ததும் மாலையில் சாவகாசமாக ஒரு விஸ்கியும் ஏலும் கண்ணாடி கோப்பையில் ஏந்திக்கொண்டு "ஹனி இஸ் தேர் எனிதிங் ஐ கேன் டூ ஃபார் யூ" என்று கேட்பதோடு சரி.

இவரை பற்றி சொல்ல காரணம் இருக்கிறது. அப்பாவான சந்தோஷத்தில் இருந்த இவருக்கு வழக்கமான செய்யப்படும் வருடாந்திர மருத்துவ பரிசோதனையில் குடல்பை கான்சர் இருப்பதாக கண்டுபிடித்தார்கள். முதன் முறையாக தந்தையான இவருக்கு எதிர்காலத்தை பற்றிய பயமே அதிகமாக இருந்தது.

நியூயார்க் நகரத்திலேயே தலைசிறந்த ஆன்காலஜி சர்ஜனிடம் காட்ட அவர் சென்றபோது நானும் துணைக்கு சென்றிருந்தேன். அந்த புற்றுநோய் மருத்துவர் இவரின் பரிசோதனை முடிவுகள்படி அறுவை சிகிச்சை செய்தாலும் வெற்றியின் சதவீதம் 50% க்கும் குறைவு என்று சொல்லி டாக்டர் ஜேக்கபின் மருத்துவ குறிப்பை திருப்பி தந்துவிட்டார்.

நான் நாளை டாக்டர் ஹென்றி மேஹேம் அவரிடம் இதைபற்றி பேச போகிறேன்.

நீங்கள் எனக்கு கொடுத்த மருத்துவ பயிற்சிபடி , மருத்துவரானவர் வெற்றி தோல்வி சதவீதத்தினை கணக்கெடுக்காமல் நோயாளிக்கு 100% மருத்துவம் செய்யவேண்டும் என்று.

மீண்டும் அடுத்த வாரம் உங்களுக்கு எழுதுகிறேன்...அங்குள்ளவர்களுக்கு எனது அன்பினை தெரிவிக்கவும்.

அன்புடன்
டாக்டர். கிளின்ட் கார்டர்

பி.கு: இது முதுவேனில் காலம் அங்கே எனக்கும் உங்களுக்கும் சரியான நேரம் கிடைக்கும் போது நாம் மீன்பிடிக்க செல்ல வேண்டும்.

7 comments:

Asiya Omar said...

இலா கதையா? நிகழ்வா?தொடருமா? முற்றுமா? என்னவென்றாலும் அருமை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆ... இதென்ன டிவி சீரியலைப் பாத்து எழுதினதா? இல்ல தொடர் கதை மாதிரி கொண்டு போறீங்களா? ஒரு சந்தோஷத்தைக் கொடுத்து ஒரு சந்தோஷத்த திருடும் கடவுள என்னன்னு சொல்றது?

vanathy said...
This comment has been removed by the author.
vanathy said...

இலா, கதை சூப்பர். குடல் கான்சர் வந்து இறந்து போன M.I.T (என்று நினைக்கிறேன். கல்லூரி சரியா ஞாபகம் இல்லை )பேராசிரியர் ஞாபகம் வருகின்றது.

'பரிவை' சே.குமார் said...

அசத்தலா இருக்குங்க.

இமா க்றிஸ் said...

மயில் போட்ட குட்டிலயே பெஸ்ட் இதான். இதுவரை எப்பிடி மிஸ் பண்ணினேன்!!

இலா said...

ஆசியா அக்கா! என்னவோ சொல்ல வந்தேன்.. சிச்சுவேஷன் மாறிடுச்சி... இனி தொடரவான்னு புரியல.. அப்படியே விட்டிட்டேன் :))

எல்ஸ்! டீவி சீரியல் போல தான் லைஃபும் இல்லையா.. கொஞ்சம் டிராமா கம்மி ரியல் லைஃபில :))

வான்ஸ்! அது கார்னகி மெல்லன் ‍பிட்ஸ்பர்க் அங்க உள்ள பேராசிரியர். அவர் புத்தகம் த லாஸ்ட் லெக்சர் நல்லா இருக்கும் :)

குமார்ண்ணா! நன்றி!

இமா! நன்றி! மயிலின் மறுபக்கம் :))