Wednesday, September 1, 2010

டென்னிஸ்

இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? பூ பந்தா அப்படின்னா பொண்ணுங்க மட்டும் தான் விளையாட முடியும்.. சரி சரி...
லோகத்திலே கிரிக்கெட்டு தெரியாதவங்க /புரியாதவங்க இருப்பாங்களான்னா.. இருக்கேனே ... அப்பல்லாம் ஸ்கூல்படிக்கும் போது புரியுதோ இல்லையோ பக்கத்து வீட்டு கருப்பு வெள்ளை டீவியில டென்னிஸ் பார்ப்போம் . எப்படி ஸ்கோர் ஆகுது எது அவுட்டு எல்லாம் அத்துப்படி... அதில எத்தனை மேஜர் சாம்பியன்ஷிப் இருக்கு இதெல்லாம் மனப்பாடமா தெரியும்.. பிரெஞ்சு மொழி தெரியுதோ இல்லையோ.. ரெண்டு பிளேயரும் ஒரே ஸ்கோர் (40 40 ) எடுத்தா அவான்டேஜ் ( அட்வான்டேஜ் இல்லை) அப்படின்னு கூவிட்டு இருப்போம்... இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ஆன்ரே அகாசி... ஸ்டெஃபி கிராஃப் இப்படியான ஆக்களோட அறிமுகம் என்னோட டென்னிஸ் விளையாட்டு உலகம்..

முதன் முதலில் டென்னிஸ் கோர்ட் காலேஜில படிக்கபோன போது தான் பார்த்தேன்.. அதுக்கு ராக்கெட் ( டென்னிஸ் மட்டை) வாங்கவே என்னோட ஒரு செமஸ்டர் முழுக்கா கட்டற பணம் செலவழிக்கணும் போலன்னு.. விளயாடறதெல்லாம் இல்லை.. சும்மா போற போக்கில பாக்கறதோட சரி...அதுவும் புள்ளங்க யாரும் விளையாடததால பாக்க சான்சே இல்லை.. டீவியோட சரி...

கல்யாணம் ஆகி வந்து பார்த்தா இவர் எதோ அவார்ட் எல்லாம் வாங்கி இருப்பரு போல...நாமளும் அடிக்கலாம்ன்னு கோர்டுக்கு போனா அங்க எல்லா லேடீஸும் சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க.. நாம இந்த கோர்டில அடிச்சா ஆறவதுகோர்ர்டில தான் ரிட்டன் கொடுக்க முடியும் போல.. அப்படி இப்படி கொஞ்சம் கத்துக்கலாம்ன்னு பாத்தா நம்மள பந்து பொறுக்க கூட விடல..பின்னே பந்து வீசறேன்னு யாரையாவ‌து அடிச்சி வச்சா என்ன பண்ணன்னு பயம் தான் இவருக்கு :)

இப்படியே கேவலமா விளையாண்டு ஒரு வழியா என் சைடுக்கு பந்து வந்தா அடிக்காம விடுறதில்லை அந்த ரேஞ்சுக்கு விளையாடிட்டு இருந்தேன்... இதில என்னை விடகேவலமா விளையாடிட்டு இருக்கவங்கள பாத்து ஒரு நக்கல் வேற... இதுக்கு தான் ஒரு பழமொழி இருக்கே..ஆங் அதே தான்...

சரி கொஞ்சம் கொஞ்சமா கேம் இம்ப்ரூப் பண்ணிடலாம்ன்னு பார்த்தா எதுவுமே சரிப்பட்டு வரலை.. இதுக்கிடையில அமெரிக்கன் டென்னிஸ் கிளப்பில மெம்பர் ஆகறதென்ன...அதுக்கு சன்மானமா கொடுத்த ஓவர் சைஸ் டீசர்ட்டில காணாம போயி .. அவங்க அனுப்பற மேகசினை எல்லாம் வரி விடாம படிக்கறது என்னன்னு.. ஒரே சீனா போயிட்டு இருந்தது..

ஒரு கோடை விடுமுறையில் ஒழுங்கவே கத்துக்கலாம்ன்னு நினைச்சி நம்ம டென்னிஸ் அஸோசியேஷன் ல கேட்டா உங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கே அங்க விலையும் குறைவு தான் அப்படின்னு சொன்னாங்க.

மொத்தம் 8 வகுப்பு அதுக்கு 80 டாலர் தான்.. ஒரு மணி நேர வகுப்பில 4பேருக்கு சொல்லி கொடுத்தாங்க.. கோச் ஒரு குரோசியா நாட்டை சேர்ந்தவர்..வழக்கமா இந்தியர்களை பத்தி கேப்பதுபோல இவரும் கேப்பாருன்னு நினைச்சா இவர் எதோ ஓபிராய் குடும்பத்தில என்னிடம் கோச்சிங் எடுத்தாங்கன்னு சொன்னார்.. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஓபிராய் என்றால் ஹோட்டல் தான் நினைவுக்கு வரும்... அவர் பேசுவதே புரியல அப்படி எப்படியோ கடமுடான்னு பேசுவார்.. என் நேரம் பாருங்க என் டீமில அவ்ர் நாட்டை சேர்ந்த கல்லூரி பெண்ணும் இருந்தாள்... அந்த பொண்ணுக்கு அவங்க மொழியில சொல்லி கொடுத்ததை நான் புரிஞ்சிட்டு விளையாடணுமாம்.. முதல்ல மட்டையை எப்படி பிடிப்பதுன்னு சொன்னார்...எனக்கு சரியா பிடிக்க வரல.. அதுக்கு வேற திட்டு.. மொதல்லயே நம்ம வரலாறு வேற சொல்லிட்டோமா.. அவரும் இவ்வளவு படிச்சிருக்கே இது சரியா வரலையான்னு திட்டு... நமக்கு வெய்யில் ஆகாது.. கருப்பு கண்ணாடி போட பிடிக்காது. இப்படியா ரொம்ப திட்டுவாங்கி... 8 வார கிளாஸ்ல 2 வாரம் லீவு வேற..கடைசில சொல்லிட்டார் திருவாயை திறந்து.. மோஸ்ட் இம்ரூவ்ட் :))

இங்க வீட்டையாவுக்கு பெரும தாங்கல... பின்னே எல்லா ஸ்ட்ரோக்கும் சரியா அடிப்பேன்...இப்பவும் ஆனா விளையாட ஆள் கிடைக்கலன்னா மட்டும் என்னைய ஆட்டத்துக்கு சேத்திக்குவாங்க...ஜஸ்ட் லைக் உப்புக்கு...

இது வரை 4 யூ எஸ் ஓப்பன் ஆட்டங்கள் பார்த்து இருக்கேன்.
ராஜர் பெடரர் ‍- லேட்டன் ஹியூவிட்ட்
மரியா ஷரபோவா - சான்யா மிர்சா
செரீனா வில்லியம்ஸ் - ஆமிலி மௌரிஸ்மோ
ஒரு மென்ஸ் மேச் படத்தில இருக்கு ஆனா ஆள் பேர் நினைவில்லை...
ஒரு வயசானவங்க மேச்.. அந்த படங்கள் இருக்கு யானா நாவாட்னா - மார்டின நவரட்லோவா

http://picasaweb.google.com/ilaveera/Tennis_Pic#

எல்லா படங்களும் இல்லை.. உங்கள் பார்வைக்கு..பிகாசாவில்..

22 comments:

ஜெய்லானி said...

உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் சரி புதுசா ஒரு பேர் வச்சிடலாம் .டென்னிசுக்கு ..ஓக்கேயா..!!

பத்துஸ் எங்கே சொல்லுங்க் பார்க்கலாம் பத்துஸ் அதாவது டென் -பத்து ஸ்-க்கு அபப்டியே ஸ் சரியா ..

ஜெய்லானி said...

//பூ பந்தா //

அதுக்கு பால் பேட்மிட்டன்னு இங்கிலிஷ்ல பேர் யக்கோவ் ..!!

ஜெய்லானி said...

//. இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ஆன்ரே அகாசி... ஸ்டெஃபி கிராஃப் //

ஆஹா எல்லாமே 85 டூ 93 ல உள்ள ஆளா இருக்குதே..!!!

ஜெய்லானி said...

பரவாயில்ல மயில் கொஞ்சம் முன்னேறியிருக்கு ..தூக்கத்தை விட்டு :-))))

இமா க்றிஸ் said...

அழகான மயிற்குட்டி.
ரசித்தேன் இலா.

இமா க்றிஸ் said...

!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;(

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

table tennis paththi onnum sollaliye? :))

Malini's Signature said...

இலா உங்க picasa பாத்து ரொம்ப நாளாச்சு...

கவலை படதீங்க இலா சீக்கிரமா யுஸ் ஒப்பன் டென்னிஸ்லேயே வந்தாலும் வருவீங்க.... :-)

'பரிவை' சே.குமார் said...

பூ பந்தாட்டம் பாட்மிட்டன்ங்க...

பரவாயில்லை விடுங்க...
பந்து பொறுக்கிறதைவிட ஊறுகாய இருக்கறது பரவாயில்லைங்க.
நாளை நீங்க களத்தில இருக்கும் போது உங்களுக்கும் ஒரு ஊறுகாய் கிடைக்காமலா போயிடும்?

ஜெய்லானி said...

பிகாசோ படம் பொருமையா எல்லாத்தையும் பார்த்தேன்.எல்லாமே சூப்பரா இருக்கு.அதிலும் நேச்சுரல் சீன்ஸ் எல்லாம் நீங்கதான் எடுத்ததா..????

இலா said...

ஜெய்! சூப்பரா தமிழாக்கம் செய்யறீங்க.. அதுல ஏன் ஸ் வருது அதையும் சேத்து மாத்துங்க..

பேட்மிட்டனா??? அதை தான் குமார்ண்ணாவும் சொல்லி இருக்காகளா??
//85 டூ 93
அப்ப நீங்களும் அந்த பேட்ச் தானா ?? சேம்பிஞ்ச்

எப்பயோ சொன்னது மயில் இனி மெதுவாய் முழிக்கும் நடக்கும்ன்னு கேட்டீங்களா... இப்படி பதிவுக்கு பதிவு ஆச்சரியகுறி போடக்கூடாது...

இலா said...

வாங்க இமா! ரொம்ப சந்தோஷம் ...
//!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;(
வழி மொழிகிறேன்....

இலா said...

வாங்க சந்தூஸ்! அது கதை சொல்லும் நேரத்தில ஆபிஸ்ல ஆணி கதையில் வரும் பாருங்க.. உங்களுக்காக ஒரு வரி.. 3 இஞ்ச் ஹை ஹீலும் ஆபிஸ் உடையும் போட்டு விளையாடவா முடியும்.. யாராவது விளையாடும் போது பாக்கறதோட சரி.. அதுவுமில்லாம நாம தான் எங்க அடிச்சாலும் பலமா அடிப்போமே யாருமே பொறுமையா சொல்லி கொடுக்கல‌ :))

இலா said...

வாங்க ஹாஷினி! படங்கள் எல்லாம் 2007 வரைதான்.. இனி ஆஸியில் தான் அடுத்த மேட்ச் பாக்கணும் இல்லை பூஸ்கிட்ட சொல்லி விம்பிள்டன் டிக்கட் போட சொல்லணும்...

//கவலை படதீங்க இலா சீக்கிரமா யுஸ் ஒப்பன் டென்னிஸ்லேயே வந்தாலும் வருவீங்க.... :‍)
இதுல உள்குத்து எதுவும் இல்லையே.. ஏன் கேக்கிறேன்னா கொஞ்சம் வயசானாலே ஓல்டாமே அந்த உலகத்தில:)

இலா said...

//பரவாயில்லை விடுங்க...
பந்து பொறுக்கிறதைவிட ஊறுகாய இருக்கறது பரவாயில்லைங்க.
நாளை நீங்க களத்தில இருக்கும் போது உங்களுக்கும் ஒரு ஊறுகாய் கிடைக்காமலா போயிடும்?//
தத்துவமே தத்துவம்.. இனி இந்த வார்த்தைய நினைச்சுக்குவேன்...ஒரு நாள் நமக்கும் ஊறுகா கிடைக்கும் :))

இலா said...

//அதிலும் நேச்சுரல் சீன்ஸ் எல்லாம் நீங்கதான் எடுத்ததா..????//
ஆமாம் ஜெய்! எல்லாமே என்னோட சோனி சைபர் ஷாட் 7.2 ல நான்/கணவர் எடுத்தது தான்.. இங்கவும் டவுட்டா...

ஹைஷ்126 said...

//இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? //

“ரென்னிஸ்” இதன் அதிகாரபூர்வமான தமிழாக்கம்.

“பத்தூஸ்” தான் சரியான அதிகாரமில்லாத தமிழாக்கம். அக்காவாச்சே என ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் :)))

மயிலை தூசு தட்டி வாஷ் பண்ணவுடன் சுறுசுறுப்பா ஆகிவிட்டது போல :)

பி.கு: ஆஸில என்ன ஊறுக்காய் தருகிறாகள்? எலுமிச்சை or மாங்காய் ம்ம்ம்ம்:)

இலா said...

ஹைஷ் அங்கிள்! சரி தானா என்பதை சரிபார்க்க அதீஸ் வருவாக...

//பத்தூஸ் // நல்லா தெரியுமா இதுவேற மொழியில பூசனிக்காயாமே..இல்லை எதோ ஜெய்யை சொல்லறீங்களா ??

//ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் //
அவர் வடைக்கு ஓடி களைத்ததால் கால் வரவில்லை :))

ரூ பேட் ! மயில் பத்தி தப்புகணக்கு போடுறீங்க... மயில் கிட்ட காதை கொண்டுவாங்க ஒரு சீக்ரெட்.. நட்பிலே ஒரு டோமினோஸ் இருக்கே கீழ அதில எப்பவும் கொழப்புட்டாய் இருக்கப்படாது அது தான் இன்ஸ்பிரேஷன்...

//ஆஸில என்ன ஊறுக்காய் தருகிறாகள்? எலுமிச்சை or மாங்காய் ம்ம்ம்ம்:)
ஆஸி போனா டென்னிஸ் பாக்கலாம்.. அப்படியே நியூசி போய் அக்கா வீட்டிலயும் சாப்பிடலாம் ஊறுகாயோட தான்...

ஜெய்லானி said...

//“ரென்னிஸ்” இதன் அதிகாரபூர்வமான தமிழாக்கம்.//


ஓஹ்..பூஸ் தமிழிலா...அப்போ சரிதான்... மரத்திலிருந்து வந்ததும்.கேட்டிடலாம்...!!

ஜெய்லானி said...

//!! அது என்னோட ஒரிஜினல் ஐடியா. நான் ஜெய்லானி கமண்ட் இப்போ தான் பார்க்கிறேன். ;( //

நோ ஃபீலிங்ஸ் மாமீ ஸ்மைல் பிளிஸ்

பொதுவாக என்னோட வார்த்தை முடிவில் !!! இப்பிடி ரொம்ப நாளாக நானும் போட்டு வருகிறேன்... !!!

athira said...

இலா, நான் ஒரு கையில அம்மம்மாக் குழலும் மற்றக் கையில விசிலோடயும், விம்பில்டனில, கீழ்ப்படியில இருக்கிறேன், கிட்டவா இருந்தால்தானே என் விசில் உங்களுக்குக் கேட்டும்... கெதியா வாங்க இல, அந்த வெள்ளைக் குட்டிப் பாவாடையும் வெள்ளை ரிப்பனும் கட்டிக்கொண்டு.... ரென்னிஸ் வீராங்கணை அக்கா மாதிரி.

என் சப்போடெல்லாம் உங்களுக்குத்தான், விசில் உடையும்வரை, நான் ஓயமாட்டேன்:).

athira said...

“பத்தூஸ்” தான் சரியான அதிகாரமில்லாத தமிழாக்கம். அக்காவாச்சே என ஜெய் காலை போடாமல் விட்டூட்டார் :)))
//// ஹா...ஹா...ஹா.... ஜெய் தான், காலைக் குளத்துக்குள் விட்டிட்டாரே, இனி எப்பூடிப் போட முடியும்?:))).


டென் + இஸ் = டெனிஸ்... சோஓ சிம்பிள் யா.... “பத்து இருக்கிறது”... இதுக்குப் போய் ஆளாளுக்கு அடிபடுறீங்களே....

இதுக்குத்தான் சொல்றது, இங்கிலீசு தெரிந்த பூஸாரை, மருவாதையா அழைத்து டவுட்டைக் கிளியர் பண்ணோனும் என..... அதை விட்டுப்போட்டு....

பத்தூஸ்... பூசனிக்காய்:)) என்றெல்லாம் ஒரு டெனிஸ் பிளேயரைப்(இலாவைப்) பார்த்துச் சொல்லலாமோ?:).

கட்டிலுக்குக் கீழ டொமினோசோ? ஆ... அதுக்குத்தான் பங்கரோ???.