Thursday, November 11, 2010

சிட்டப்பூஊஊ!

சிட்டப்பூஊஊ!

Situps !!!

இது என்னவா .. இருங்க அதுக்கு முன்னாடி கொஞ்சம் ....
இவ்வளவு நாள் எக்சர்சைஸ் செய்யறேன்னு சீன் காமிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு தெரிஞ்சதை உங்களுக்கு சொல்லி கொடுக்க ஆசை. முயற்சி செய்யறேன் அப்புறம் ரிசல்ட் என்னன்னு நீங்க‌ தான் சொல்ல‌ணும் ..

அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரை இளைஞர் முதல் மனசில இளைஞராக இருப்பவர் வரை.. கனவு கன்னி முதல் கனவே வராம உருள பெரள முடியாதவங்களும் ஏக்கப்படற விசயம் "சிக்ஸ் பேக்ஸ்" என‌ ( யாரும் என்னை தப்பா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை) என ஆண்களும் "சிற்றிடை" என பெண்களும் விரும்பும் உடலமைப்பு ஆங்கிலத்தில் ( உடற்பயிற்சியாளர்கள் சொல்வதும்) "கோர்" ( Core Strengthening Exercises) .

அங்க‌ங்க‌ டிஸ்கி போட்டே அடைப்புகுறியெல்லாம் தீர்ந்து போகுது :))

இந்த‌ உட‌லின் ந‌டுப்ப‌குதிக்கு செய்ய‌க்கூடிய‌ உட‌ல்ப‌யிற்சிக‌ளை ப‌ற்றி சொல்ல‌றேன். உங்க‌ளுக்கு தெரியுமா . ந‌ம‌து உட‌லில் இருக்கும் த‌சை ப‌குதிக‌ளுக்கு ஒரு ஞாப‌க‌ ச‌க்தி உண்டு. அதிலே ரொம்ப‌ எளிதா சொல்ல‌ற‌தை/செய்த‌தை ம‌ற‌க்கக்கூடிய‌து ந‌ம‌து வயிறு ம‌ற்றும் ந‌டுப்ப‌குதியில் உள்ள‌ பாக‌ங்க‌ளில் இருக்கும் த‌சைப்ப‌குதி தான். என்ன‌வோ போங்க‌ நாக்கு ருசிய ம‌ற‌க்குதோ இல்லையோ வ‌யிறு சொல்ல‌ற‌ எல்லாத்தையும் 24 ம‌ணி நேர‌த்துக்குள்ள‌ ம‌ற‌ந்திடும்.

இந்த‌ த‌சைப்ப‌குதிக்காக‌ செய்ய‌ப்ப‌டும் உட‌ல்ப‌யிற்சிக‌ள் செய்த‌பின் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 48 ம‌ணி நேர‌ ஓய்வு கொடுக்க‌ணும் . ஓய்வின் போது த‌சையில் உள்ள‌ செல்க‌ள் உட‌ல்ப‌யிற்சி செய்வ‌தால் ஏற்ப‌டும் தேய்மான‌ம்/கிழித‌ல் இதை எல்லாம் தானே ச‌ரி செய்துகொள்ளும்.

சில‌ர் என‌க்கு நேர‌மே இல்லை இதுக்கெல்லாம் என்று சொல்வார்க‌ள். அதுக்கு நான் ஒன்னுமே செய்ய‌ முடியாது. நேர‌ம் ஒதுக்க‌ முடியும் ஆனா ஜிம்மு போக‌ முடியாது இல்லை என்னால‌ விலை உய‌ர்ந்த‌ உட‌ற்ப‌யிற்சி சாத‌ன‌ங்க‌ள் வாங்க‌ முடியாது இப்ப‌டி சொல்ல‌ற‌வ‌ங்க‌ளுக்கு எதாவ‌து செய்ய‌ முடியும்.

எந்த‌ ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆர‌ம்பிக்கும் போது எடுத்த‌ எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்லி வ‌ச்ச‌ மாதிரி 2 நாள் தான் செய்ய‌ முடியும்.

இந்த சிட்டப் (situp) என்பது விலா நடுப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுவாக்கும் இப்படி செய்வதன் மூலம் அழகிய உருவம் கிடைக்கும். நீங்க கூகிளில் சிட்டப் என்று தேடினால் பல ஆயிரம் பதில்கள் கிடைக்கும்.

தேவையானவை : நீங்க மட்டும் தான்

செய்முறை : தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof

கால்முட்டியை மடக்கி பாதம் தரையில் அழுத்தமான பதிந்த வண்ணம் (குத்துகாலிட்டு படுத்தவண்ணம் ‍‍-- புரிஞ்சுதா??) இருக்கட்டும். Fold your legs and make sure feet are firmly planted on floor.

கைகள் கழுத்து ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து விரல்கள் மட்டும் கோர்த்தபடி இருக்கட்டும். கைகளும் விரலும் மென்மையாக கழுத்தை தொடவேண்டும் அழுத்தம் தெரிந்தால் கழுத்தை அளவுக்கு அதிகமாக வளைப்பதாக கொள்ளவேண்டும் . அதிக்மாக வளைப்பதால் சரியான முறையில் இப்பயிற்சியை செய்ய முடியாது. Fold your hands and keep them at the back of your neck with fingers touching each other.

க‌ழுத்தை வ‌ளைக்காமல் இடுப்பு முத‌ல் த‌லை உச்சிவ‌ரை ஒரு நேர் கோடாக‌ இருக்கும் ப‌டி த‌ரையில் இருந்து எழ வேண்டும்.

நீங்க‌ள் ப‌டுத்திருப்ப‌து 0 டிகிரி கோண‌ அள‌வு என்றால் ஒரு 25 முத‌ல் 35 டிகிரி கோண அள‌வு வ‌ரை எழுந்தால் போதும். Raise from floor making a 25 degree angle to the floor.

இப்ப‌டி செய்யும் போது உந்துவிசையை அதிக‌மாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌து. Do not use inertia while doing this exercise which makes a rocking motion.

எங்கெல்லாம் வ‌லிக்க‌ வேண்டும் : விலா எலும்புக்கு கீழே இருக்கும் ட‌யாப்ர‌ம் ப‌குதி , வ‌யிறு ( அடி வ‌யிறு /மேல் வ‌யிறு ) வ‌லிக்க‌விட்டாலும் ஜெல்லி போல‌ ந‌டுங்கும் அப்போது ச‌ரியாக‌ செய்வ‌தாக‌ கொள்ள‌லாம்.

ஆர‌ம்ப‌த்தில் ச‌ரியாக‌ செய்ய‌ வ‌ராது. அத‌னால் சோபாவின் கால் ப‌குதியில் உங்க‌ள் பாத‌ம் முட்டும் ப‌டி முட்டு கொடுத்துக்கொண்டால் எளிதாக‌ இருக்கும். இல்லை என்றால் உங்க‌ள் வீட்டில் இருப்ப‌வ‌ரை உங்க‌ள் பாத‌ங்க‌ளை அழுத்தி மிதித்து கொண்டால் ( ரொம்ப மிதிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல ) செய்ய‌ எளிதாக‌ இருக்கும் .

அங்க‌ங்க‌ எல்லார் வீட்டு சாப்பாடும் சாப்பிட்டாலும் உங்க‌ வீட்டில‌ இப்ப‌டி எளிதான‌ செல‌வில்லாத‌ உட‌ல்ப‌யிற்சி செய்தால் உங்க‌ளுக்கும் கிடைக்கும் "சிக்ஸ் பேக்ஸ்"

பின் குறிப்பு : முதுகு த‌ண்டுவ‌ட‌ பிர‌ச்ச‌னை உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ர் அனும‌தி இல்லாம‌ல் இப்ப‌டியான் உட‌ற்ப‌யிற்சிக‌ளை த‌விர்க்க‌வும்.
ரொம்ப‌ ஆர்வ‌க்கோள‌றுக‌ளுக்கு : ஒரு நாளில் 200 சிட்ட‌ப் செய்வ‌து எப்ப‌டி என்று ஒரு த‌ள‌ம் பார்த்தேன். செய்தா சொல்லுங்க‌.

ஓட்ட‌ளியுங்க‌: இந்த‌ உட‌ற்ப‌யிற்சி ப‌குதி பிடிச்சிருக்கா ??

28 comments:

ஹைஷ்126 said...

இது என்னாப்பூ?

//விலா நடுப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுவாக்கும்// இரண்டு விலா எலும்புகளுக்கு நடுவில் இருப்பதா? விலா என்றால் பக்கவாட்டுதானே? மார்பு எலும்புதானே முன்பக்கம்? அப்போ நீங்க எந்த தசையை சொல்லூறீங்க:)

//தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof// சிம்பிளி “மல்லாந்து” படுக்கவும்,

//make sure feet are firmly planted on floor.// எவ்வளவு ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கால்களை புதைக்க வேண்டும்??? அதனுடன் இயற்கை உரமிடவேண்டுமா> அல்லது செய்ற்கை உரமா? கொஞ்சம் விளக்கமா கூறவும்!:)

//எங்கெல்லாம் வ‌லிக்க‌ வேண்டும் : விலா எலும்புக்கு கீழே இருக்கும் ட‌யாப்ர‌ம் ப‌குதி , வ‌யிறு// வலிக்காவிட்டாம் யாரையாவது விட்டு குத்த சொல்லலாமா?

ரொம்பவே பிடிச்சு இருக்கு நேரம் இன்மையாலும் தம்பி ஜெய்காகவும் மீதி கேள்விகளை விட்டு வைக்கிறேன்:)

பி.கு: உரம் வாங்குவது என்றால் நியூவில்தான் வாங்க வேண்டுமா?

இலா said...

ஆஹ்! இதுக்கு தான் எனக்கு தெரியாத அனாட்டமி விஷயங்களை ஆங்கிலத்திலே சொல்லறது நல்லது ....

அப்போ நீங்க எந்த தசையை சொல்லூறீங்க:)
// அப்டாமின‌ல் ம‌ஸில்ஸ்(ரெக்ட‌ஸ் அப்டாமினஸ் - Rectus Abdominis) + ஹிப் ஃப்ளெக்ச‌ர்ஸ் - Hip Flexors :))
இதெல்லாம் த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ல‌ ??

//சிம்பிளி “மல்லாந்து” படுக்கவும்// ஒழுங்கா சொல்ல‌விட‌ மாட்டீங்க‌ளே :)

மிச்ச‌ ரெண்டு கேள்விக்கு ப‌தில் சொல்ல‌ற‌துக்குள்ள‌ ஒரு 50 சிட்ட‌ப் செய்துடுவேன்.. என்னை விட்டுடுங்க‌...

கேள்வி கேக்க‌ற‌துக்கு இன்னுமொரு நாமினேஷ‌னா.. அம்மோய்.. மீ த‌ எஸ்ஸ்ஸ்ஸ்...

இமா வ‌ந்து என்னை காப்பாத்துங்கோ. ச‌ரி வெகேச‌ன்/ ப‌ண்டிகைன்னு சுற்ற‌ள‌வை அதிக‌மாக்கி இருப்ப‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ட்டுமேன்னு ந‌ல்ல‌ எண்ண‌த்தில்.... ஹூம்ம்ம்...
நல்லதுக்கு காலமே இல்லை போல...

நன்றி ஹைஷ் அங்கிள் ! யான் பெற்ற இன்பம்...

Malini's Signature said...

நல்ல பகுதிவு இலா..நீங்க சொல்லறதை பார்த்த இப்படி பன்னனும் போல இருக்கே அவ்வ்வ்வ்

http://www.youtube.com/watch?v=VndDWO5Zkas

இலா said...

அதே ஹாஷினி! எல்லாருக்கும் இன்டெர்னெட் கிடைப்பதால் வீடியோ லின்க் போடலை. மிலிட்டிரி நல்லா செய்யறார்.. அது ரொம்ப பெர்பக்ட் ஃபார்ம் . Beginners dont have to try to comeup that much.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு இலா.

ஜெய்லானி said...

//"சிட்டப்பூஊஊ!"//

நானும் ,நடுப்புள்ள மாதிரி சித்தப்புன்னு சித்தப்பாவை சொல்றீங்கன்னு வேகவேகமா மூச்சி இறைக்க வந்தேன் .ஹும்..!! :-)) இது வேற சிட்டப்பூஊஊஊஊஊ

ஜெய்லானி said...

//ரொம்பவே பிடிச்சு இருக்கு நேரம் இன்மையாலும் தம்பி ஜெய்காகவும் மீதி கேள்விகளை விட்டு வைக்கிறேன்:)//

ஆஹா ..லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கேட்டுட்டீங்களே..!! இதோ வரேன் ..!! :-)))))))))

ஜெய்லானி said...

//இந்த‌ உட‌லின் ந‌டுப்ப‌குதிக்கு செய்ய‌க்கூடிய‌ உட‌ல்ப‌யிற்சிக‌ளை ப‌ற்றி சொல்ல‌றேன். உங்க‌ளுக்கு தெரியுமா .//

உடலின் நடு பகுதி முதுகுதானே ..!!ஹி..ஹி..

முதுகை நா பார்த்து இல்லை நேரடியா.அதனால தெரியாது :-(

ஜெய்லானி said...

//எடுத்த‌ எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்லி வ‌ச்ச‌ மாதிரி 2 நாள் தான் செய்ய‌ முடியும். //

யார்கிட்ட சொல்லி வச்சி ?

ஜெய்லானி said...

//தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof//

இதை மொட்டை மாடியில ,தோட்டத்துல செய்யக்கூடாதா..? அங்கெல்லம் ரூஃப் இல்லையே ..!!

ஜெய்லானி said...

//நீங்க‌ள் ப‌டுத்திருப்ப‌து 0 டிகிரி கோண‌ அள‌வு //

அதெப்படி கால் பாதம் செங்குதா வைத்து படுத்தா அது 90 டிகிரிதானே ஹி..ஹி..

ஜெய்லானி said...

//எங்கெல்லாம் வ‌லிக்க‌ வேண்டும் ://அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//ஓட்ட‌ளியுங்க‌: இந்த‌ உட‌ற்ப‌யிற்சி ப‌குதி பிடிச்சிருக்கா ??//

முதல்ல ஓட்டு பெட்டி வைங்க அப்புரமா நீங்க கேக்காமலேயே நான் ஓட்டு போடுவேன் ..!!

இலா said...

நன்றி குமார்ண்ணா! செய்தும் பாருங்க... சரியா :))

இலா said...

தெரியுமே எங்களுக்கு... ஓடி வந்திட்டிங்களா.. ஓகே வார்மப் ஆயாச்சு.. ஒரு 10 சிட்டப் போடுங்க நிறுத்தாம...
//இதை மொட்டை மாடியில ,தோட்டத்துல செய்யக்கூடாதா..? அங்கெல்லம் ரூஃப் இல்லையே ..!! // அங்க‌ எல்லாம் "வான‌த்த‌ பாத்து"
ஒரு உண்மை தெரிஞ்சாக‌ணும்.. எதுக்கு தோட்ட‌ம்/மொட்டை மாடி இங்க‌ எல்லாம் எக்ச‌ர்சைஸ் செய்ய‌ போறீங்க‌.. என்ன‌ மேட்ட‌ர் ??

அவ்வ்வ்வ்வ் எதுக்கு ஜெய்... மொட்டை மாடி / தோட்டம் இதிலெல்லா செய்தா ஆர்வக்கோளறில அதிகமா செய்வீங்க்...இப்ப என்ன சொல்லுவீங்க ..

//90 டிகிரிதானே ஹி..ஹி..// க‌ண‌க்குல‌ வீக்கா.. ந‌ல்லா ப‌டிங்க‌ ம‌றுக்கா...
//ஓட்டு பெட்டி வைங்க // மெயில் அனுப்பும் போது "யெஸ்" "நோ" "மேபீ" இப்ப‌டி ஆப்ஷ‌ன் வைக்க‌லாம். தேடிட்டு அடுத்த‌ முறை பொட்டி வ‌ச்சிட‌றேன்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இலா.. நல்லா வந்திருக்கு.. விளக்கம் நன்று.. அந்த வீடியோ லின்கும் பாத்துட்டேன்.. இந்த மாதிரி நான் செஞ்சதில்ல.. செய்யணும்.. அப்புறமா முயற்சி பண்ணலாம்ன்னு இருக்கேன்.. (இப்போ மூட் இல்ல :) )..

இலா said...

எல்ஸ்! ரொம்ப நன்றி ! செய்து பாருங்க.. இப்ப இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் ஆரம்பிங்க‌

Asiya Omar said...

விளக்கம் அருமை.

Jaleela Kamal said...

mmm நானு ம் ஓடி வந்தேன் மூச்சிரைக்க, சித்தப்பூவோன்னு... நல்ல சொல்லிர் இருக்கீங்க இலா

ஸாதிகா said...

அட்டகாசமான விளக்கம்

vanathy said...

நல்ல தகவல்கள். நான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

இலா said...

நன்றி ஆசியா அக்கா! உங்க உடல் நலனை கவனித்துக்கோங்க .

ஜலீலாக்கா! ஓடியா வந்தீங்க.. போடுங்க 5 சிட்டப்பூ....

நன்றி ஷாதிகா ஆன்டி !

வான்ஸ் ! முதல் ரெண்டு நாள் பிடிச்ச் மாதிரி இருக்கும்... அப்புறம் நல்லாவே வேலை செய்யுது.

kavisiva said...

ஹி ஹி இலா இந்த சிட்டப்பூ ஒரு நாளைக்கு 10முறைதான் செய்தேன். அடுத்த நாளில் இருந்து படுத்த நிலையில் இருந்து எழும்பவே கஷ்டப் பட்டேன். வயிற்றில் வலி வந்திடுச்சு :(. இது சாதாரணமா இல்லையான்னு தெரியலை. அதனால் விட்டுட்டேன்.
இப்ப உங்க பதிவை படிச்சுட்டேன்ல ஆரம்பிச்சுடறேன் :)

இலா said...

கவி ! கட்டாயமா செய்யயுங்க... உங்க ஊரில எக்சர்சைஸ் பந்து ( exercise ball) கிடைத்தால் இன்னும் நல்லது கீழ் முதுக்குக்கு(lower back) அதிக அழுத்தம் இல்லாம இருக்கும். அதே இபெக்ட் தான்...
10 செய்தீங்களா ? பயங்கரி :)) மூச்சை அடக்காமல் எழும் போது மூச்சு வெளியே விடுங்க படுக்கும் போது மூச்சை உள்ள இழுத்துக்கோங்க... ஆரம்பத்தில் மூச்சில் கவனம் போச்சின்னா செய்யறது சொதப்பும்.. இப்ப சரியாயிடுச்சி :)) மாம்ஸ்கிட்ட சொல்லி காலை மிதிச்சும் பண்ணலாம் அந்த ஆப்ஷன் முயற்சி செய்யுங்க..

தளிகா said...

சூப்பர் சூப்பர் சூப்பர்... நான் இந்த உடற்பயிற்சியை போடலாம்னு இருந்தேன் வந்து பாத்தது நல்லதா போச்சு..செய்ய ரொம்ப கஷ்டம் இருந்தாலும் வயிறு நல்லா குறியுது..அழகா சொல்லி கொடுத்திருக்கீங்க இலா

தளிகா said...

தேவையானவை : நீங்க மட்டும் தான்

ROTFL:-D

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.